10 Aug 2024

லஞ்சமாக உருளைக் கிழங்கை கேட்ட உத்தரபிரதேச சப் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்

உத்தரபிரதேசத்தின் கன்னோஜில் சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் உருளைக்கிழங்கை லஞ்சம் கேட்டதற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். விசாரணையில், உருளைக்கிழங்கு என்ற வார்த்தை லஞ்சத்திற்கான குறியீடாக பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது.

காஷ்மீரில் தீவிரவாதில் நடத்திய தாக்குதலில் இரண்டு இந்திய ராணுவ வீரர்கள் காயம்

தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தின் கோகர்நாக் பகுதியில் உள்ள அஹ்லான் பகுதியில் பயங்கரவாதிகளுடன் சனிக்கிழமை (ஆகஸ்ட் 10) நடந்த என்கவுன்டரில் இரண்டு இந்திய ராணுவ வீரர்கள் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

எக்ஸ் தளத்தில் வருகிறது பணப்பரிமாற்ற சேவை; ஆராய்ச்சியாளர் வெளியிட்ட தகவல்

ட்விட்டரை எலோன் மஸ்க் கையகப்படுத்தியதிலிருந்து, அதில் பல்வேறு மாற்றங்களை செய்து வரும் எலோன் மஸ்க், அதை இன்னும் விரிவான வகையில் பயன்படுத்துவதற்கு ஏற்றவாறு மாற்றங்களைச் செயல்படுத்த முயற்சி செய்கிறார்.

மாலத்தீவில் இந்தியாவின் யுபிஐ சேவைகள் அறிமுகம்; புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட அமைச்சர் ஜெய்சங்கர்

மாலத்தீவில் யுபிஐ பணப்பரிமாற்ற சேவையை நடைமுறைப்படுத்துவதற்காக மாலத்தீவுடன் இந்தியா புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

சிவகார்த்திகேயன்-ஏஆர் முருகதாஸ் படத்தில் இணைந்த மலையாள நடிகர் பிஜு மேனன்

இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் எஸ்கே23 படத்தில் மலையாள நடிகர் பிஜு மேனன் இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

பங்களாதேஷின் தலைமை நீதிபதி ஒபைதுல் ஹசன் ராஜினாமா செய்ய முடிவு

முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறும்படி கட்டாயப்படுத்திய சில நாட்களுக்குப் பிறகு, பங்களாதேஷில் புதிய போராட்டங்கள் வெடித்துள்ளன.

கானாவை விலைக்கு வாங்கியது ரேடியோ மிர்ச்சியின் தாய் நிறுவனம் இஎன்ஐஎல்

எஃப்எம் ரேடியோ பிராண்டான ரேடியோ மிர்ச்சியின் தாய் நிறுவனமான என்டர்டெயின்மென்ட் நெட்வொர்க் இந்தியா லிமிடெட் (இஎன்ஐஎல்), கடந்த ஆண்டு வெறும் ₹25 லட்சத்திற்கு இசை ஸ்ட்ரீமிங் தளமான கானாவை வாங்கியது.

பிக்பாஸ் போட்டியாளரை நம்பி மோசடியில் சிக்கிய பொதுமக்கள்; எக்ஸ் தளத்தில் இதுதான் ட்ரெண்டிங்

பிரபல யூடியூபரும், முன்னாள் இந்தி பிக் பாஸ் ஓடிடி போட்டியாளருமான அபிஷேக் மல்ஹான், ஹைபாக்ஸ் என்ற மோசடி செயலியை விளம்பரம் செய்ததாக விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார்.

ஸ்னாப்சாட்டின் ஸ்னாப் அம்சத்தை இன்ஸ்டாகிராமில் சேர்க்க திட்டம்; சோதனை ஓட்டம் தொடக்கம்

மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட்டின் ஸ்னாப் வரைபடத்தை பிரதிபலிக்கும் புதிய அம்சத்தை தனது தளத்திலும் சேர்ப்பதற்கான சோதனைகளைத் தொடங்கியுள்ளது.

கேரளா வயநாடு நிலச்சரிவை நேரடியாக ஆய்வு செய்தார் பிரதமர் மோடி

சனிக்கிழமை (ஆகஸ்ட் 10) காலை 11 மணியளவில் கேரளாவின் கண்ணூர் சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடி, அங்கிருந்து இந்திய விமானப்படை ஹெலிகாப்டரில் வயநாடு மாவட்டத்திற்கு சென்றார்.

அமெரிக்காவில் தயாராகும் 100 வீடுகளைக் கொண்ட உலகின் முதல் 3டி பிரிண்டிங் குடியிருப்பு

3டி பிரிண்டிங் மூலம் சிறுசிறு பொருட்களை உருவாக்கியதுபோல, 100 தனித்தனி வீடுகள் கொண்ட ஒரு குடியிருப்பு வளாகம் அமெரிக்காவில் உருவாக்கப்பட்டு வருகிறது.

விரைவில் பங்களாதேஷ் திரும்புகிறார் ஷேக் ஹசீனா; மகன் சஜீப் வசேத் ஜாய் தகவல்

ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவுக்கு தப்பி வந்ததாக கூறப்பட்ட பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா இன்னும் அதிகாரப்பூர்வமாக பதவியை ராஜினாமா செய்யவில்லை என அவரது மகன் சஜீப் வசேத் ஜாய் கூறியுள்ளார்.

ரூ.7.99 லட்சம் ஆரம்ப விலையில் பசால்ட் கூபே-எஸ்யூவியை இந்தியாவில் களமிறக்கியது சிட்ரோயன்

பிரெஞ்சு கார் தயாரிப்பு நிறுவனமான சிட்ரோயன், அதன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கூபே-எஸ்யூவியை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

யூடியூப் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி சூசன் வோஜ்சிக்கி புற்றுநோயால் மரணம்

யூடியூப் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி சூசன் வோஜ்சிக்கி இரண்டு ஆண்டுகளாக புற்றுநோயுடன் போராடி வந்த நிலையில் தனது 56 வயதில் காலமானார். வோஜ்சிக்கியின் கணவர் டென்னிஸ் ட்ரோப்பர் ஃபேஸ்புக் பதிவில் இதை பகிர்ந்துள்ளார்.

ஆயிரக்கணக்காக ஊழியர்களை மீண்டும் ஆட்குறைப்பு செய்ய சிஸ்கோ முடிவு

அமெரிக்காவை தளமாகக் கொண்ட புகழ்பெற்ற நெட்வொர்க்கிங் உபகரண உற்பத்தியாளரான சிஸ்கோ சிஸ்டம்ஸ் குறிப்பிடத்தக்க அளவில் பணியாளர்களைக் குறைக்கத் தயாராகி வருவதாக ராய்ட்டர்ஸ் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

எஸ்டி/எஸ்டி இட ஒதுக்கீட்டில் கிரீமி லேயர் கொண்டுவர மாட்டோம் என மத்திய அரசு அறிவிப்பு

பட்டியலினத்தவர்கள் (எஸ்சி) மற்றும் பழங்குடியினர் (எஸ்டி) இடஒதுக்கீட்டிற்குள் கிரீமி லேயர் வரையறையை கொண்டுவர வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் பரிந்துரையை அமல்படுத்த மாட்டோம் என்று மத்திய அரசு சூசகமாக தெரிவித்துள்ளது.

உலக சிங்க தினம் 2024: அழிவின் விளிம்பில் உள்ள காட்டு ராஜாக்களை மீட்பதற்கான முன்னெடுப்பு

உலக சிங்க தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 10 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. சிங்கங்களை பாதுகாப்பதும், அதுகுறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இந்த தினத்தின் நோக்கமாகும்.

மல்யுத்த வீரர் அமன் ஷெராவத் வெற்றி; பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு மேலும் ஒரு வெண்கலம்

மல்யுத்த வீரர் அமன் ஷெராவத் 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவிற்காக ஆறாவது பதக்கத்தை வென்றுள்ளார்.

09 Aug 2024

அம்பானிகள், பிர்லாக்கள்: ₹39 லட்சம் கோடியை தாண்டும் இந்திய பணக்காரக் குடும்பங்களின் கூட்டு மதிப்பு

அம்பானிகள், பஜாஜ்கள் மற்றும் பிர்லாக்கள் உட்பட இந்தியாவின் பணக்கார குடும்ப வணிகங்கள், 2024 பார்க்லேஸ் தனியார் வாடிக்கையாளர்கள் ஹுருன் இந்தியாவின் மிக மதிப்புமிக்க குடும்ப வணிகங்களின் பட்டியலின்படி, $460 பில்லியன் (சுமார் ₹38.27 லட்சம் கோடி) மதிப்பை குவித்துள்ளன.

வினேஷ் போகட் தகுதியிழப்பு: சச்சின் டெண்டுல்கரின் அம்பயர்ஸ் கால்

2024 பாரிஸ் ஒலிம்பிக்ஸ் போட்டியிலிருந்து 100 கிராம் அதிக எடையுடன் இருந்ததால், இறுதி போட்டியில் விளையாட முடியாமல் போனது மட்டுமின்றி, தகுதியிழப்பு செய்யப்பட்ட வினேஷ் போகட்டிற்கு ஆதரவாக பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.

சூர்யா 44 : படப்பிடிப்பில் நடிகர் சூர்யாவிற்கு ஏற்பட்ட பலத்த காயம்

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து வரும் 'சூர்யா 44' திரைப்படத்தின் ஆரம்ப கட்ட படப்பிடிப்பு அந்தமான் நிக்கோபார் தீவுகளில் படமாக்கப்பட்டது.

எதிர்கால ஒலிம்பிக் சாம்பியன்களை AI கணிக்க முடியுமா? ஆம் என்கிறது அறிவியல் உலகம்

இன்டெல் ஒரு புதுமையான செயற்கை நுண்ணறிவு (AI) அமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இது எதிர்கால ஒலிம்பிக் சாம்பியன்களைக் கண்டறிய வடிவமைக்கப்பட்டுள்ளது.

ChatGPT இப்போது படங்களை உருவாக்க உங்களை அனுமதிக்கிறது: எப்படி?

DALL-E 3 மாடலைப் பயன்படுத்தி தினசரி இரண்டு படங்கள் வரை உருவாக்க பயனர்களை அனுமதிப்பதன் மூலம், ஓபன்ஏஐ சாட்ஜிபிடி-இன் இலவச அடுக்கின் திறன்களை விரிவுபடுத்தியுள்ளது.

பெண்களுக்கான திருமண வயதை 9 ஆகக் குறைக்கும் சட்டத்தை முன்மொழியவுள்ள ஈராக்

ஈராக் பாராளுமன்றத்தில் முன்மொழியப்பட்ட மசோதாவின் படி, பெண்களின் சட்டப்பூர்வ திருமண வயதை வெறும் 9 வயதாகக் குறைக்கும் வகையில் முன்மொழியப்பட்டுள்ளது.

இந்திய ஹாக்கி அணியின் கோல் கீப்பர் பிஆர் ஸ்ரீஜேஷிற்கும் தமிழகத்திற்கும் இருக்கும் தொடர்பு

2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற கையோடு தனது ஓய்வை அறிவித்தார் இந்திய ஆண்கள் ஹாக்கி அணியின் கோல் கீப்பர் பிஆர் ஸ்ரீஜேஷ்.

மனிதர்களைப் போல டேபிள் டென்னிஸ் விளையாடும் கூகுளின் புதிய ரோபோ

டேபிள் டென்னிஸ் விளையாடும் ரோபோவை உருவாக்கி கூகுளின் டீப் மைண்ட் குழு குறிப்பிடத்தக்க அறிவியல் முன்னேற்றத்தை கண்டுள்ளது.

பிக் பாஸ் தமிழிலிருந்து கமலின் விலகலுக்கு பின்னர் விஜய் டிவி வெளியிட்ட அறிக்கை

விஜய் டிவியின் பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 8-வது சீசனை தான் தொகுத்து வழங்க போவதில்லை என கமல்ஹாசன் இரண்டு தினங்களுக்கு முன்னர் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

பணத்திற்கு ATM தெரியும், அரிசி ஏடிஎம் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அது எப்படி வேலை செய்கிறது

ஹரியானா, உத்தரகாண்ட், உத்தரபிரதேசம் மற்றும் மேகாலயா போன்ற மாநிலங்களுக்குப் பிறகு, ஒடிசாவில் உள்ள மஞ்சேஷ்வரில் வியாழன் அன்று முதல் 24x7 அரிசி ஏடிஎம் திறக்கப்பட்டுள்ளது.

பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தேர்தலுக்கு பின்னர் நாடு திரும்புவார் எனத்தகவல்

வன்முறை போராட்டங்களுக்கு மத்தியில் சமீபத்தில் இந்தியாவுக்கு தப்பியோடிய பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, புதிய இடைக்கால அரசு தேர்தலை அறிவித்தவுடன் சொந்த நாட்டிற்கு திரும்புவார் என அவரது மகன் சஜீப் வாசேத் ஜாய் தெரிவித்துள்ளார்.

சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

பிரபல யூட்யூபர் சவுக்கு சங்கர் மீது விதிக்கப்பட்டிருந்த குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.

வயநாடு மீட்புப் பணிகளில் உதவிய வீரர்கள் மற்றும் நாய்ப் படைக்கு உணர்வுபூர்வ பிரியாவிடை: வீடியோ

கடந்த மாதம் கேரள மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததைத் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவ வீரர்களுக்கு வயநாட்டு மக்கள் மனதைக் கவரும் வகையில் பிரியாவிடை கொடுத்து அனுப்பி வைத்தனர்.

ஆபரண தங்கத்தின் விலை மீண்டும் உயரத்தொடங்கியது

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது.

FAME அபராதம் செலுத்திய EV தயாரிப்பாளர்கள் மீண்டும் மானியங்களைப் பெறலாம்

இந்தியாவில் ஹைபிரிட் மற்றும் எலக்ட்ரிக் வாகனங்களை வேகமாக தத்தெடுப்பு மற்றும் உற்பத்தி செய்தல் (FAME India) திட்டத்தை மீறியதற்காக விதிக்கப்பட்ட அபராதங்களைத் தீர்த்து, EV தயாரிப்பாளர்களுக்கு மானியங்களை வழங்குவதை இந்திய அரசாங்கம் மீண்டும் தொடங்கியுள்ளது.

டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்

டெல்லி கலால் கொள்கை வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவிற்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம்.

Netflix இன் முக்கிய அனிமே கசிவு: மில்லியன் கணக்கான பார்வையாளர்களின் எதிர்பார்ப்பை வீணாக்கியதா?

நெட்ஃபிலிக்ஸ் அதன் வரவிருக்கும் 2024 அனிமே உள்ளடக்கத்தின் குறிப்பிடத்தக்க கசிவால் பாதிக்கப்பட்டுள்ளது.

முற்றிலும் ஆட்-ஃப்ரீ ஆக மாறிய X Premium+ 

எக்ஸ் அதன் பிரீமியம்+ சந்தா அடுக்குக்கு குறிப்பிடத்தக்க மேம்படுத்தலை அறிவித்துள்ளது.

NTR 31: ஜூனியர் NTR - பிரசாந்த் நீல் திரைப்படம் இன்று பூஜையுடன் ஆரம்பம்

ஜூனியர் என்டிஆர், பிரசாந்த் நீல் இயக்கும் 'NTR-31' படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்க இருக்கிறது.

மொராக்கோவின் கம்பீரமான சஹாரா பாலைவன ஒட்டக மலையேற்றம், போலாமா ஒரு ரைடு!

மொராக்கோவில் உள்ள சஹாரா பாலைவனம், உலகெங்கிலும் உள்ள மிகப்பெரிய பாலைவனங்களில் ஒன்றை ஆராய்வதில் ஆர்வமுள்ளவர்களுக்கு இணையற்ற சாகச அனுபவத்தை வழங்குகிறது.

ராக்கி பாயிலிருந்து ஆன்டி ஹீரோவா? யாஷின் 'Toxic' பயணம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

KGF நட்சத்திரம் யாஷ் நடிக்கும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 'டாக்ஸிக்' என்ற கன்னட திரைப்படம் அதிகாரப்பூர்வமாக தனது பட வேலைகளை தொடங்கியுள்ளது.

தொடர்ந்து ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்திய தடகள வீரர் என நீரஜ் சோப்ரா சாதனை

நீரஜ் சோப்ரா தொடர்ந்து ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்திய தடகள தடகள வீரர் என்ற வரலாறு படைத்தார்.