சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பிரபல யூட்யூபர் சவுக்கு சங்கர் மீது விதிக்கப்பட்டிருந்த குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம். பெண் காவலர்களை அவதூறாக தகாத வார்த்தைகளால் விமர்சித்த வழக்கில் சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் விதிக்கப்பட்டிருந்தது. அதனால் இரண்டு வருடங்கள் அவர் சிறையில் இருந்து வரமுடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் சவுக்கு சங்கரின் தாய் இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். முன்னதாக இந்த வழக்கினை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் அமர்வு, இரு மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கியது.
மேல்முறையீட்டிற்கு உச்ச நீதிமன்றம் சென்ற வழக்கு
உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பினை தொடர்ந்து இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டிற்கு சென்றது. அங்கிருந்து மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் விசாரணையின் இறுதி தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. அப்போது நீதிபதிகள்,"சவுக்கு சங்கர் பேசியது தொடர்பாக அந்த அந்த பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யலாம். தண்டனை வாங்கி கொடுக்கலாம். குண்டர் சட்டம் தேவையில்லாத்து" என தெரிவித்து, அவர் மீது வேறு ஏதேனும் வழக்கு நிலுவையில் இல்லையென்றால் உடனடியாக விடுவிக்க உத்தரவிட்டனர்.