சூர்யா 44 : படப்பிடிப்பில் நடிகர் சூர்யாவிற்கு ஏற்பட்ட பலத்த காயம்
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து வரும் 'சூர்யா 44' திரைப்படத்தின் ஆரம்ப கட்ட படப்பிடிப்பு அந்தமான் நிக்கோபார் தீவுகளில் படமாக்கப்பட்டது. இதனை அடுத்து படக்குழு தற்போது ஊட்டியில் அடுத்தகட்ட படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளனர். கார்த்திக் சுப்புராஜ் தனது படத்தின் ஷூட்டிங்கை விரைந்து முடிப்பதில் கில்லாடி. அந்த வகையில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சூர்யாவின் ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில் ஒரு அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது. ஊட்டியில் சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தது எனவும், அப்போது எதிர்பாராத விதமாக சூர்யாவிற்கு தலையில் அடிபட்டதாகவும் கூறப்படுகிறது. உடனே மருத்துவமனைக்கு விரைந்து அழைத்து செல்லப்பட்ட அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சில காலம் ஓய்வெடுக்க அறிவுறுத்தியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.