Page Loader
வினேஷ் போகட் தகுதியிழப்பு: சச்சின் டெண்டுல்கரின் அம்பயர்ஸ் கால்
சச்சின் டெண்டுல்கர் 'அம்பைர்ஸ் கால்' தேவை என குறிப்பிட்டுள்ளார்

வினேஷ் போகட் தகுதியிழப்பு: சச்சின் டெண்டுல்கரின் அம்பயர்ஸ் கால்

எழுதியவர் Venkatalakshmi V
Aug 09, 2024
05:48 pm

செய்தி முன்னோட்டம்

2024 பாரிஸ் ஒலிம்பிக்ஸ் போட்டியிலிருந்து 100 கிராம் அதிக எடையுடன் இருந்ததால், இறுதி போட்டியில் விளையாட முடியாமல் போனது மட்டுமின்றி, தகுதியிழப்பு செய்யப்பட்ட வினேஷ் போகட்டிற்கு ஆதரவாக பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். குறிப்பாக விளையாட்டு துறை ஜாம்பவான்கள் பலரும் வினேஷிற்கு நியாயம் வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த நிலையில் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் தனது சமூக வலைதள பக்கத்தில் வினேஷ் போகட்டிற்கு ஆதரவாக 'அம்பைர்ஸ் கால்' தேவை என குறிப்பிட்டுள்ளார். அதன்படி அவர் வெள்ளிப்பதக்கத்திற்கு தகுதியானவர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

சச்சின் டெண்டுல்கரின் அம்பயர்ஸ் கால்

மனு

வழக்கின் நிலை என்ன?

வினேஷ் போகட்டின் மனு மீதான விசாரணை நடந்து வருவதாகவும், 2024 பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகள் முடிவதற்குள் தீர்ப்பு வழங்கப்படும் என்றும் விளையாட்டு நடுவர் நீதிமன்றம் (சிஏஎஸ்) தெரிவித்துள்ளது. தான் எந்த மோசடியும் செய்யவில்லை என்று வினேஷ் வாதிடுகிறார். "எனது உடல் எடை அதிகரித்தது உடலின் இயற்கையான மீட்பு செயல்முறை காரணமாக நடந்தது. உடலைப் பராமரிப்பது விளையாட்டு வீரரின் அடிப்படை உரிமை. போட்டியின் முதல் நாளில் உடல் எடை நிர்ணயிக்கப்பட்ட வரம்பிற்குள் இருந்தது" எனவும் அவர் வாதிட்டுள்ளார். "எடை அதிகரிப்பு என்பது ஒரு மீட்பு செயல்முறையின் ஒரு பகுதியாக மட்டுமே ஏற்பட்டது, இது மோசடி அல்ல. மீட்புக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களுடன் உடலை நிரப்ப எனக்கு உரிமை உண்டு" எனவும் கூறப்பட்டுள்ளது.