அமெரிக்காவில் தயாராகும் 100 வீடுகளைக் கொண்ட உலகின் முதல் 3டி பிரிண்டிங் குடியிருப்பு
3டி பிரிண்டிங் மூலம் சிறுசிறு பொருட்களை உருவாக்கியதுபோல, 100 தனித்தனி வீடுகள் கொண்ட ஒரு குடியிருப்பு வளாகம் அமெரிக்காவில் உருவாக்கப்பட்டு வருகிறது. வழக்கமான டெஸ்க்டாப் 3டி பிரிண்டரைப் போலவே செயல்படும் வல்கன் பிரிண்டர் இந்த பணியை செய்து வருகிறது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் ஆஸ்டினில் இருந்து 30 மைல் தொலைவில் உள்ள ஜார்ஜ்டவுனில் உள்ள வுல்ஃப் ராஞ்சில் ஐகானின் (ICON) வல்கன் ரோபோடிக் பிரிண்டர் 100 3டி-பிரிண்டிங் வீடுகளில் கடைசி சிலவற்றை முடித்து வருகிறது. நவம்பர் 2022இல் உலகின் மிகப்பெரிய 3டி-பிரிண்டட் குடியிருப்பு என அழைக்கும் வகையில் ஐகான் (ICON) அச்சிடத் தொடங்கியது.
3டி பிரிண்டிங் கட்டுமானத்தின் சிறப்புகள்
பாரம்பரிய கட்டுமானத்துடன் ஒப்பிடும்போது, 3டி பிரிண்டிங் வீடுகள் வேகமானவை, குறைந்த விலை, குறைவான பணியாளர்கள் தேவை குறைவு, குறைவான கட்டுமானப் பொருட்களின் கழிவு போன்ற பல சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது. கான்கிரீட் தூள், தண்ணீர், மணல் மற்றும் பிற சேர்க்கைகள் ஒன்றாகக் கலந்து பிரிண்டரில் செலுத்தப்பட்ட பிறகு, ஒரு முனை பேஸ்ட் போன்ற கான்கிரீட் கலவையை ஒரு தூரிகையின் மீது அழுத்துகிறது. இது கார்டுராய்-எஃபெக்ட் சுவர்களை உருவாக்குகிறது. மூன்று முதல் நான்கு படுக்கையறை கொண்ட வீடுகளாக தயார் செய்யப்படும் இவை பாரம்பரியமாக நிறுவப்பட்ட அடித்தளம் மற்றும் உலோக கூரையுடன் அச்சிடப்படுகின்றன. இவற்றை கட்டி முடிக்க சுமார் மூன்று வாரங்கள் ஆகும்.