லஞ்சமாக உருளைக் கிழங்கை கேட்ட உத்தரபிரதேச சப் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்
உத்தரபிரதேசத்தின் கன்னோஜில் சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் உருளைக்கிழங்கை லஞ்சம் கேட்டதற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். விசாரணையில், உருளைக்கிழங்கு என்ற வார்த்தை லஞ்சத்திற்கான குறியீடாக பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக வைரலான ஒரு ஆடியோவில், குற்றம் சாட்டப்பட்ட போலீஸ்காரர் ஒரு விவசாயியிடம் 5 கிலோ உருளைக்கிழங்கு வேண்டும் என கேட்கிறார். விவசாயி தன்னால் முடியாது என இயலாமையை வெளிப்படுத்தி பிறகு, 2 கிலோ வழங்குகிறார். சப் இன்ஸ்பெக்டர் கோபமடைந்து, இறுதியாக 3 கிலோவிற்கு இரண்டு தரப்பும் ஒத்துக் கொள்கிறது. இந்த சம்பவம் வைரலான நிலையில், கன்னோஜ் எஸ்பி அமித் குமார் ஆனந்த் சம்பந்தப்பட்ட சப் இன்ஸ்பெக்டரை சஸ்பெண்ட் செய்து துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.