சிவகார்த்திகேயன்-ஏஆர் முருகதாஸ் படத்தில் இணைந்த மலையாள நடிகர் பிஜு மேனன்
இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் எஸ்கே23 படத்தில் மலையாள நடிகர் பிஜு மேனன் இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அயலான் படத்திற்கு பிறகு, அமரன் படத்தில் நடித்து முடித்துள்ள சிவகார்த்திகேயன், தற்போது ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக ருக்மணி நடித்து வரும் நிலையில், படத்தின் வில்லனாக வித்யூத் ஜாம்வால் நடித்து வருகிறார். படத்தின் 60 சதவீத படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், அக்டோபர் மாதத்திற்குள் மொத்த படப்பிடிப்பையும் முடித்து, அடுத்த பொங்கலுக்கு படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், சனிக்கிழமை (ஆகஸ்ட் 10) பிஜு மேனன் படப்பிடிப்பில் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.