
இந்திய ஹாக்கி அணியின் கோல் கீப்பர் பிஆர் ஸ்ரீஜேஷிற்கும் தமிழகத்திற்கும் இருக்கும் தொடர்பு
செய்தி முன்னோட்டம்
2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற கையோடு தனது ஓய்வை அறிவித்தார் இந்திய ஆண்கள் ஹாக்கி அணியின் கோல் கீப்பர் பிஆர் ஸ்ரீஜேஷ்.
அணியின் வெற்றிக்கு இன்றியமையாத ஸ்ரீஜேஷிற்கு இந்திய அணியின் சக வீரர்கள் கார்ட் ஆஃப் ஹானர் மரியாதை செய்து வழியனுப்பி வைத்தனர்.
இந்த நேரத்தில் ஸ்ரீஜேஷிற்கும், தமிழ்நாட்டிற்கும் உள்ள தொடர்பு பற்றி அவர் பேட்டியளித்துள்ளார்.
விருது வென்றதும் அவர் அளித்த பேட்டியில்,"2006 ஆம் ஆண்டு தமிழ்நாட்டிலிருந்தே என்னுடைய ஹாக்கி பயணம் தொடங்கியது" எனத்தெரிவித்தார்.
அதோடு, 2011-13 காலகட்டத்தில் தமிழ்நாடு அணிக்காக பல்வேறு ஹாக்கி போட்டிகளில் அவர் விளையாடியுள்ளார்.
அந்த காலகட்டத்தில் ஆசிய போட்டியில் வெற்றி பெற்ற ஸ்ரீஜேஷ்க்கு தமிழக அரசு சார்பாக பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
ஸ்ரீஜேஷிற்கும், தமிழகத்திற்கும் இருக்கும் தொடர்பு
#WATCH | “தமிழ்நாட்டிலிருந்தே என் ஹாக்கி பயணம் தொடங்கியது” -இந்திய ஹாக்கி அணியின் கோல் கீப்பர் ஸ்ரீஜேஸ் பெருமிதம்!#SunNews | #sreejes | #Hockey📷 pic.twitter.com/2LEW5L16yJ
— Sun News (@sunnewstamil) August 8, 2024
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
🏑 𝐏𝐑 𝐒𝐫𝐞𝐞𝐣𝐞𝐬𝐡, 𝐬𝐢𝐠𝐧𝐢𝐧𝐠 𝐨𝐟𝐟! ✍️🙇♂️🙇♀️#Paris2024 pic.twitter.com/19xQU3vXAo
— Olympic Khel (@OlympicKhel) August 8, 2024
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
𝐏𝐢𝐜𝐭𝐮𝐫𝐞 𝐩𝐞𝐫𝐟𝐞𝐜𝐭! 🖼️🤌#Paris2024 pic.twitter.com/aSTVDGaRuB
— Olympic Khel (@OlympicKhel) August 8, 2024