ராக்கி பாயிலிருந்து ஆன்டி ஹீரோவா? யாஷின் 'Toxic' பயணம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
KGF நட்சத்திரம் யாஷ் நடிக்கும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 'டாக்ஸிக்' என்ற கன்னட திரைப்படம் அதிகாரப்பூர்வமாக தனது பட வேலைகளை தொடங்கியுள்ளது. கேவிஎன் புரொடக்ஷன்ஸின் தயாரிப்பாளர் வெங்கட் கே நாராயணாவுடன் செட்டில் இருந்து ஒரு புகைப்படத்துடன் இந்த செய்தியை நடிகர் யாஷ் வியாழக்கிழமை அறிவித்தார். "பயணம் #toxic உடன் தொடங்குகிறது" என்று தலைப்பு எழுதப்பட்டிருந்தது. இந்த அதிரடி படத்தை கீது மோகன்தாஸ் இயக்கியுள்ளார் மற்றும் 2025 ஆம் ஆண்டு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. 'டாக்ஸிக்' படத்தை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் இங்கே.
'Toxic' என்பது 'பெரியவர்களுக்கான Fairy-Tale'
டாக்ஸிக் படத்தை கேவிஎன் புரொடக்ஷன்ஸ் மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்கிறது. சமீபத்திய செய்திக்குறிப்பின்படி, படம் "பெரியவர்களுக்கான Fairy Tale" என்று விவரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கதையின்கரு அல்லது மற்ற நடிகர்கள் பற்றிய கூடுதல் விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. இப்படத்தின் படப்பிடிப்பு பெங்களூருவில் தொடங்கியுள்ளது.
'கேஜிஎஃப்' படத்தின் மூலம் புகழ் பெற்றார் யாஷ்
யாஷ்ஷின் உண்மையான பெயர் நவீன் குமார் கவுடா. KGF திரைப்படத்தில் ராக்கி பாய் என்ற பாத்திரத்தின் மூலம் புகழ் பெற்றார். 2007ஆம் ஆண்டு முதல் கன்னட திரையுலகின் ஒரு பகுதியாக இருந்த நடிகர், பல வெற்றிகரமான படங்களில் தோன்றியுள்ளார். இருப்பினும், பிரசாந்த் நீல் இயக்கிய கேஜிஎஃப், அவருக்கு நாடு தழுவிய அங்கீகாரத்தைக் கொண்டு வந்தது. இந்த நிலையில் தான், கீது மோகன்தாஸ் இயக்கத்தில் டாக்ஸிக் படத்தில் நடிக்கிறார் யாஷ். கீது மோகன்தாஸ் ஒரு குழந்தை நட்சித்திரமாக (பொம்முக்குட்டி அம்மாவுக்கு) தனது வாழ்க்கையைத் தொடங்கினார் என்பது உங்களுக்கு நினைவிருக்கலாம். பின்னர், 'நள தமயந்தி' படத்தின் மூலம் ஹீரோயினாக நடித்தவர், அதன் பிறகு எழுத்தாளர் மற்றும் இயக்குனராக 80 க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றியுள்ளார்.