இந்தியா: செய்தி

05 May 2025

உள்துறை

மாணவர்கள், பொதுமக்கள் அனைவருக்கும் மே 7 ஆம் தேதி பாதுகாப்பு பயிற்சி ஆலோசனை வழங்க மாநிலங்களுக்கு உத்தரவு

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலால் இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையே அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், மே 7 அன்று சிவில் பாதுகாப்பிற்கான பயிற்சிகளை நடத்துமாறு உள்துறை அமைச்சகம் பல மாநிலங்களைக் கேட்டுக் கொண்டுள்ளதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் யூடியூப் தடை பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள், கன்டென்ட் கிரியேட்டர்களை சிரமத்திற்கு உள்ளாக்கியுள்ளது

பாகிஸ்தான் கிரிக்கெட் நட்சத்திரங்கள் மற்றும் பிரபல கன்டென்ட் கிரியேட்டர்களுக்குச் சொந்தமான 16 யூடியூப் சேனல்களை இந்திய அரசு கடந்த மாதம் முடக்கியது.

05 May 2025

மரபணு

'மரபணு எடிட்டிங்' பயன்படுத்திய முதல் அரிசி வகைகளை அறிமுகம் செய்த ICAR

இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (ICAR), 21ஆம் நூற்றாண்டின் இனப்பெருக்க தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 'DRR Dhan 100 (Kamala)' மற்றும் 'Pusa DST Rice 1' ஆகிய இரண்டு புதிய அரிசி வகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தியாவின் பாதுகாப்பு வலைத்தளங்களை ஹேக் செய்ய முயற்சி! முக்கிய தரவுகள் கசிந்ததாக தகவல்

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலால் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், பாகிஸ்தான் ஹேக்கர்கள் இந்திய பாதுகாப்புத்துறை வலைத்தளங்களை குறிவைத்து, பாதுகாப்புப் பணியாளர்களின் உள்நுழைவு தரவுகள் உட்பட முக்கியமான தரவுகளை திருடியிருக்கலாம் என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

05 May 2025

ரஷ்யா

பஹல்காம் தாக்குதல் நடத்தியவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும்: இந்தியாவிற்கு ஆதரவாக களமிறங்கிய ரஷ்யா

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, "கொடூரமான" பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமானவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியதாக வெளியுறவு அமைச்சகம் (MEA) திங்களன்று தெரிவித்துள்ளது.

கே.வி.சுப்பிரமணியத்திற்கு மாற்றாக IMF இல் இந்தியாவின் நிர்வாக இயக்குநராக பரமேஸ்வரன் ஐயர் பரிந்துரை

உலக வங்கியில் தற்போது நிர்வாக இயக்குநராகப் பணியாற்றி வரும் பரமேஸ்வரன் ஐயர், சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) குழுவில் இந்தியாவின் பரிந்துரைக்கப்பட்ட இயக்குநராக தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார் என்று பிடிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தியாவுடன் மோதலைத் தவிர்க்க சமாதானத்திற்கு ரஷ்யா மூலம் மன்றாடும் பாகிஸ்தான்

26 உயிர்களைக் கொன்ற பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, அதிகரித்து வரும் பதட்டங்களைத் தணிக்க ரஷ்யாவின் மூலம் பாகிஸ்தான் இந்தியாவிடம் சமாதானக் கொடியை நீட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிந்து நதி ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்த பிறகு நீர் மின் திட்டங்களுக்கான பணிகளைத் தொடங்கிய இந்தியா

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த ஒரு கொடிய பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்தது.

05 May 2025

ஐநா சபை

இந்தியா-பாகிஸ்தான் இடையே அதிகரிக்கும் பதற்றம்: இன்று கூடுகிறது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம்

ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல் மற்றும் இந்திய அரசின் கடுமையான பதிலடி நடவடிக்கைகளை அடுத்து, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் (UNSC) கூட்டம் இன்று நடைபெறுகிறது.

கோஹினூர் வைரம் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுகிறதா? பிரிட்டிஷ் அமைச்சர் தகவல்

உலகப் புகழ்பெற்ற கோஹினூர் வைரம் உள்ளிட்ட வரலாற்று கலைப்பொருட்கள் குறித்து இந்தியாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக, பிரிட்டிஷ் கலாச்சாரம், ஊடகம் மற்றும் விளையாட்டுத்துறை செயலாளர் லிசா நந்தி தெரிவித்துளளார்.

பாக்லிஹார் அணை வழியாக பாகிஸ்தானுக்கு செல்லும் தண்ணீரை இந்தியா தடுத்து நிறுத்தியதாக தகவல்

ஏப்ரல் 22 ஆம் தேதி பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து குறிப்பிடத்தக்க அளவில், செனாப் நதியில் உள்ள பாக்லிஹார் அணை வழியாக பாகிஸ்தானுக்கு செல்லும் நீரை இந்தியா நிறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா-பாகிஸ்தான் விவகாரத்தில் ஐரோப்பாவின் பாசாங்குத்தனம்; விளாசிய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்

ஐரோப்பாவின் சில பிரிவுகள் இந்தியாவுக்கு எதிராக ஒரு போதனை நிலைப்பாட்டை எடுத்துக்கொண்டு, அதே மதிப்புகளை ஐரோப்பாவில் நிலைநிறுத்தத் தவறிவிட்டதாக வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கடுமையாக விமர்சித்தார்.

அணுகுண்டு போட்டுவிடுவார்களாம்; ரஷ்யாவிற்கான பாகிஸ்தான் தூதர் இந்தியாவிற்கு மிரட்டல்

ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்கள் கடுமையாக அதிகரித்துள்ளன.

IMF-இல் இந்தியாவின் நிர்வாக இயக்குநராக இருந்த டாக்டர் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணி நீக்கம்; காரணம் என்ன?

ஏப்ரல் 30, 2025 தேதியிட்ட அதிகாரப்பூர்வ உத்தரவின்படி, சர்வதேச நாணய நிதியத்தில் (IMF) நிர்வாக இயக்குநராக (இந்தியா) இருந்த டாக்டர் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியனின் பதவிக்காலத்தை இந்திய அரசு அதிகாரப்பூர்வமாக முடித்துள்ளது.

முகமது முய்சு இந்தியாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்; மாலத்தீவு எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தல்; காரணம் என்ன?

முன்னாள் மாலத்தீவு வெளியுறவு அமைச்சர் அப்துல்லா ஷாஹித், ஜனாதிபதி முகமது முய்சுவை கடுமையாக விமர்சித்துள்ளார்.

இந்தியாவின் கண்காணிப்பு திறன்களை மேம்படுத்தும் புதிய தொழில்நுட்ப சோதனை வெற்றி; டிஆர்டிஓ அறிவிப்பு

இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு உள்கட்டமைப்பிற்கான ஒரு பெரிய திருப்புமுனையாக, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) அதன் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஸ்ட்ரேட்டோஸ்பியர் வான்வழி தளத்தின் முதல் விமான சோதனையை வெற்றிகரமாக முடித்துள்ளது.

பாகிஸ்தான் பெண்ணுடனான திருமணத்தை மறைத்த ஜவான் பணி நீக்கம்;  சிஆர்பிஎஃப் உத்தரவு

பாகிஸ்தான் பெண்ணுடனான தனது திருமணத்தை மறைத்ததற்காக, இந்த செயலை சேவை நடத்தை மீறல் மற்றும் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று கூறி, மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) சனிக்கிழமை (மே 3) கான்ஸ்டபிள் முனீர் அகமதுவை பணி நீக்கம் செய்தது.

பாகிஸ்தானுடனான அனைத்து கடல்சார் வர்த்தகம் மற்றும் அஞ்சல் பரிமாற்றத்திற்கு தடை விதித்தது மத்திய அரசு

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு 26 பொதுமக்கள் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பதிலடியாக பாகிஸ்தான் மீது தொடர்ச்சியாக நடவடிக்கை எடுத்து வரும் மத்திய அரசு, சனிக்கிழமை (மே 3) பாகிஸ்தானுடனான முழுமையான கடல்சார் வர்த்தகம் மற்றும் அஞ்சல் தொடர்பு தடையை விதித்தது.

பஹல்காம் தாக்குதலுக்கு நிச்சயம் பதிலடி; இந்தியா-அங்கோலா கூட்டு செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் மோடி உறுதி

ஏப்ரல் 22 பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துவதற்கான இந்தியாவின் உறுதியை பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை (மே 3) மீண்டும் உறுதிப்படுத்தினார்.

பாகிஸ்தான் இறக்குமதிகளுக்கு முழுமையாக தடை விதித்து மத்திய அரசு உத்தரவு

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, தேசிய பாதுகாப்பு மற்றும் பொதுக் கொள்கை கவலைகளை மேற்கோள் காட்டி, பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் இந்தியா முழுமையான தடை விதித்துள்ளது.

குறுக்க இந்த கவுசிக் வந்தா? பாகிஸ்தானை தாக்கினால் இந்தியாவை தாக்க வேண்டும் என பங்களாதேஷ் முன்னாள் ராணுவ அதிகாரி கருத்து

சமீபத்திய பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்தால், இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை சீனாவுடன் ராணுவ ஒத்துழைப்பை மேற்கொண்டு தாக்கி பிடிக்க வேண்டும் என்று பங்களாதேஷ் முன்னாள் ராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் ஏ.எல்.எம்.ஃபஸ்லுர் ரஹ்மான் கூறியுள்ளார்.

இந்திய வலைதளங்களை குறிவைத்து பாகிஸ்தான் சைபர் தாக்குதல்கள்; அனைத்தையும் முறியடித்த இந்திய சைபர் பாதுகாப்பு நிறுவனங்கள்

சமீபத்திய தொடர்ச்சியான சைபர் ஊடுருவல்களில், பாகிஸ்தான் ஹேக்கர் குழுக்கள் குழந்தைகள் கல்வி, முன்னாள் ராணுவ வீரர்களின் நலன் மற்றும் பொது சேவைகள் தொடர்பான இந்திய வலைதளங்களை ஊடுருவ பல முயற்சிகளை மேற்கொண்டனர்.

அட்டாரி-வாகா எல்லை வாயிலைத் திறந்து, இந்தியாவிலிருந்து தனது குடிமக்களை திரும்ப அழைத்துச் செல்லத் தொடங்கும் பாகிஸ்தான்

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, இந்திய அரசாங்கத்தால் குறுகிய கால விசாக்கள் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியாவில் சிக்கித் தவித்த தனது குடிமக்கள் திரும்பி வருவதற்கு, பாகிஸ்தான் வெள்ளிக்கிழமை அட்டாரி-வாகா எல்லையில் உள்ள வாயில்களை மீண்டும் திறந்தது.

எல்லை கோடு அருகே பாகிஸ்தான் தொடர்ந்து 8வது நாளாக போர்நிறுத்த மீறல்; இந்திய ராணுவம் பதிலடி

ஜம்மு காஷ்மீரின் குப்வாரா, பாரமுல்லா, பூஞ்ச், நௌஷேரா மற்றும் அக்னூர் பகுதிகளில் பாகிஸ்தான் துருப்புக்கள் தொடர்ந்து எட்டாவது இரவும் கட்டுப்பாட்டுக் கோட்டில் போர் நிறுத்த மீறல்களைத் தொடர்ந்தன.

02 May 2025

ஐபோன்

விரைவில், அமெரிக்காவில் விற்கப்படும் பெரும்பாலான ஐபோன்கள், இந்தியாவில் தயாரிக்கப்பட்டவையாக இருக்கும்: ஆப்பிள் CEO

அமெரிக்காவில் விற்கப்படும் பெரும்பாலான ஐபோன்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவையாக இருக்கும் என்று தான் எதிர்பார்ப்பதாக ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் வியாழக்கிழமை தெரிவித்ததாக AFP செய்தி வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தான் வான்வெளி ஒரு வருடத்திற்கு மூடப்பட்டால், ஏர் இந்தியாவிற்கு 600 மில்லியன் டாலர் இழப்பு ஏற்படும்!:

பாகிஸ்தான் வான்வெளி ஒரு வருடத்திற்கு மூடப்பட்டால், நாட்டின் தேசிய விமான நிறுவனமான ஏர் இந்தியா 600 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (சுமார் 5,081 கோடி) இழப்பை சந்திக்கும் என்று மதிப்பிட்டுள்ளது.

இந்தியா-பாகிஸ்தான் பதட்டங்களுக்கு மத்தியில் அமெரிக்க பாதுகாப்புத் தலைவருடன் ராஜ்நாத் சிங் உரையாடல்

இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வியாழக்கிழமை அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத்துடன் பேசினார்.

01 May 2025

ஜிஎஸ்டி

ஏப்ரல் 2025 இல் ஜிஎஸ்டி வசூல் ₹2.37 லட்சம் கோடியை எட்டி புதிய சாதனை

வியாழக்கிழமை (மே 1) வெளியிடப்பட்ட அரசாங்க தரவுகளின்படி, இந்தியாவின் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் ஏப்ரல் 2025 இல் இதுவரை இல்லாத அளவுக்கு ₹2.37 லட்சம் கோடியை எட்டி சாதனை படைத்துள்ளது.

திருப்பி அனுப்பப்பட்ட குடிமக்களை ஏற்க மறுக்கும் பாகிஸ்தான், எல்லையில் சிக்கித் தவிக்கும் அவலம்

இந்தியாவில் இருந்து திருப்பி அனுப்பப்படும் தனது குடிமக்களை பாகிஸ்தான் ஏற்க மறுத்துவிட்டதால், அவர்கள் பஞ்சாபில் உள்ள அட்டாரி-வாகா எல்லையில் சிக்கித் தவிக்கின்றனர்.

பஹல்காம் பதற்றங்களுக்கு மத்தியில் இந்தியாவிற்கு $131 மில்லியன் மதிப்பிலான ராணுவ உபகரணங்களை விற்க அமெரிக்கா ஒப்புதல்

இந்தியாவின் பாதுகாப்புத் திறன்களுக்கு ஒரு பெரிய ஊக்கமாக, முக்கியமான ராணுவ வன்பொருள் மற்றும் தளவாட ஆதரவை வழங்குவதற்காக அமெரிக்கா 131 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள வெளிநாட்டு ராணுவ விற்பனைக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தியாவின் மீது இணையவழி தாக்குதலை முயற்சிக்கும் பாகிஸ்தான்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு சில நாட்களுக்குப் பிறகு, இந்தியாவில் பல சைபர் தாக்குதல் முயற்சிகள் நடந்துள்ளன - வலைத்தளங்கள் சிதைக்கப்பட்டு, தகவல்களைப் பெற முயற்சிக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவங்கள் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட ஹேக்கர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்தியா வான்வெளியை மூடியதால் பாகிஸ்தானுக்கு என்ன பாதிப்பு ஏற்படும்? 

ஏப்ரல் 30 முதல் மே 23, 2025 வரை, வணிக விமான நிறுவனங்கள் மற்றும் இராணுவ விமானங்கள் உட்பட, பாகிஸ்தானால் பதிவுசெய்யப்பட்ட, இயக்கப்படும் அல்லது குத்தகைக்கு விடப்பட்ட அனைத்து விமானங்களுக்கும் இந்தியா தனது வான்வெளியை மூடியது.

WAVES 2025: இந்தியாவின் முதல் உலகளாவிய ஊடக பொழுதுபோக்கு உச்சி மாநாட்டை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் சென்டரில், உலக ஆடியோ விஷுவல் மற்றும் பொழுதுபோக்கு உச்சி மாநாடு (WAVES) 2025 ஐத் தொடங்கி வைத்தார்.

பாகிஸ்தானியர்களுக்கு கரிசனம் காட்டிய மத்திய அரசு; அட்டாரி எல்லை வழியாக செல்ல விதிக்கப்பட்ட தடையில் தளர்வு

மனிதாபிமான நடவடிக்கையாக, இந்தியாவில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தானிய குடிமக்கள் வெளியேறுவதற்காக மத்திய அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

சர்வதேச தொழிலாளர் தினம் 2025: மே தினத்திற்கு சென்னைக்கும் உள்ள வரலாற்றுத் தொடர்பு தெரியுமா?

சர்வதேச தொழிலாளர் தினம் அல்லது மே தினம், உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களின் முயற்சிகள் மற்றும் தியாகங்களை மதிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மே 1 அன்று கொண்டாடப்படுகிறது.

இந்தியாவின் எச்சரிக்கையை மீறி, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே பாகிஸ்தான் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு

ஜம்மு காஷ்மீரில் உள்ள குப்வாரா, உரி மற்றும் அக்னூர் அருகே உள்ள LoC வழியாக புதன்கிழமை தொடர்ந்து ஏழாவது இரவும், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, எந்தவித தூண்டுதலும் இல்லாமல் பாகிஸ்தான் துப்பாக்கிச் சூடு நடத்தியது.

01 May 2025

விமானம்

பாகிஸ்தானில் பதிவு செய்யப்பட்ட விமானங்கள், ராணுவ விமானங்களுக்கு வான்வெளி தடை விதித்த இந்தியா

பாகிஸ்தானால் பதிவுசெய்யப்பட்ட, இயக்கப்படும் அல்லது குத்தகைக்கு விடப்பட்ட அனைத்து விமானங்களுக்கும் இந்தியா தனது வான்வெளியை அதிகாரப்பூர்வமாக மூடியுள்ளது.

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அடியில் பாகிஸ்தான் சுரங்கப்பாதைகள் தோண்டியதா? ராணுவம் விசாரணை

பயங்கரவாதிகள் இந்திய எல்லைக்குள் ஊடுருவவும், துருப்புக்களை நிலைநிறுத்தவும், இந்தியாவுடனான கட்டுப்பாட்டுக் கோட்டில் (LoC) ஆழமான நிலத்தடி சுரங்கப்பாதைகளை பாகிஸ்தான் அமைத்துள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.

"இந்தியாவில் தான் வாக்களித்தேன், ஆதார் கூட இருக்கு": 17 ஆண்டுகளுக்குப் பிறகு திருப்பி அனுப்பப்படும் பாகிஸ்தானியர்

பாகிஸ்தானியரான ஒசாமா, இந்தியத் தேர்தல்களில் வாக்களித்ததாகவும், இந்திய வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை மற்றும் ரேஷன் கார்டு வைத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

பஹல்காம் தாக்குதலுக்குக் காரணமானவர்களைத் தண்டிக்க இந்தியாவுக்கு 'முழு ஆதரவு' வழங்கிய இங்கிலாந்து

பஹல்காமில் நடந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, இந்தப் பிரச்சினை நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்டதால், பிராந்தியத்தில் பதட்டங்கள் அதிகரித்துள்ள நிலையில், இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் அமைதி மற்றும் பேச்சுவார்த்தைக்கு இங்கிலாந்து அரசாங்கம் அழைப்பு விடுத்தது.