கன்டென்ட் விதி மீறலுக்காக 9.5 மில்லியன் வீடியோக்களை நீக்கியது யூடியூப்; இந்தியாவில் மட்டும் 3 மில்லியன்
செய்தி முன்னோட்டம்
கன்டென்ட் கொள்கைகளை முழு வீச்சில் செயல்படுத்துவதில் தீவிரம் காட்டி வரும் யூடியூப், அக்டோபர் முதல் டிசம்பர் 2024 வரை அதன் வழிகாட்டுதல்களை மீறியதற்காக 9.5 மில்லியன் வீடியோக்களை நீக்கியுள்ளது.
இதில், இந்தியா அதிக எண்ணிக்கையிலான நீக்கங்களைப் பதிவு செய்துள்ளது. இங்கு மட்டும் கிட்டத்தட்ட 3 மில்லியன் வீடியோக்கள் அகற்றப்பட்டுள்ளன.
கடுமையான விதிமுறைகளுக்கு பெயர் பெற்ற யூடியூப் தளம், பாதுகாப்பான ஆன்லைன் இடத்தைப் பராமரிக்க வெறுப்புப் பேச்சு, துன்புறுத்தல், வன்முறை மற்றும் தவறான தகவல்களை நீக்குவதை இலக்காகக் கொண்டுள்ளது.
தீங்கு விளைவிக்கும் கன்டென்ட் பரவலாகப் பரவுவதற்கு முன்பு அதை விரைவாகக் கண்டறிந்து அகற்ற செயற்கை நுண்ணறிவு (ஏஐ) அடிப்படையிலான கண்டறிதல் அமைப்புகள் மற்றும் மனிதர்களைப் பயன்படுத்துகிறது.
குழந்தை பாதுகாப்பு
நீக்கப்பட்ட வீடியோக்களில் அதிகம் குழந்தை பாதுகாப்பு தொடர்பானவை
நீக்கப்பட்ட வீடியோக்களில் 5 மில்லியனுக்கும் அதிகமானவை குழந்தை பாதுகாப்பு மீறல்கள் காரணமாக இருந்தன.
தீங்கு விளைவிக்கும் கன்டென்ட், துன்புறுத்தல், வன்முறை கன்டென்ட், ஸ்பேம் மற்றும் தவறாக வழிநடத்தும் தகவல்கள் ஆகியவை பிற குறிப்பிடத்தக்க காரணங்களாகும்.
தனிப்பட்ட வீடியோக்களைத் தவிர, 4.8 மில்லியன் யூடியூப் சேனல்களும் அகற்றப்பட்டன. முக்கியமாக ஸ்பேம் மற்றும் மோசடிகளுக்காக இவை நீக்கப்பட்டன.
ஒரு சேனலை நீக்குவது அதன் அனைத்து கன்டென்ட்களையும் அகற்றுவதற்கு வழிவகுத்ததால், இந்த நடவடிக்கை 54 மில்லியனுக்கும் அதிகமான வீடியோக்கள் தளத்திலிருந்து அழிக்கப்படுவதற்கு வழிவகுத்தது.
கூடுதலாக, 1.2 பில்லியன் கமெண்ட்ஸ் நீக்கப்பட்டன. அவற்றில் பெரும்பாலானவை ஸ்பேம் ஆகும்.
மற்றவை வெறுப்பு பேச்சு, துன்புறுத்தல் அல்லது அச்சுறுத்தல்களைக் கொண்டிருந்தன.