இந்தியா: செய்தி
2030 ஆம் ஆண்டுக்குள் உலகின் மிகப்பெரிய மின்சார வாகன உற்பத்தியாளராக இந்தியா மாறும்: கட்கரி
2030 ஆம் ஆண்டுக்குள் உலகின் முன்னணி மின்சார வாகன உற்பத்தியாளராக மாற வேண்டும் என்ற இந்தியாவின் லட்சியத்தை, மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார்.
சீனாவை தாஜா செய்ய இந்தியாவின் வடகிழக்கு பகுதிகள் குறித்து பேசி சர்ச்சையைக் கிளப்பிய முகமது யூனுஸ்
பங்களாதேஷின் இடைக்கால தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ், தனது நான்கு நாள் பெய்ஜிங் பயணத்தின் போது சீனாவை தாஜா செய்து முதலீட்டை ஈர்ப்பதற்காக பேசியுள்ள ஒரு விஷயம் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
ஜூன் வரை இந்தியாவில் வழக்கத்தை விட அதிக வெப்பம் இருக்கும்: வானிலை ஆய்வு மையம்
ஏப்ரல்-ஜூன் மாதங்களின் அடுத்த மூன்று மாதங்கள் இயல்பை விட வெப்பமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கணித்துள்ளது.
2025 ஏப்ரல் 1 முதல் இந்தியாவில் அமலுக்கு வர உள்ள முக்கிய நிதி மற்றும் கொள்கை மாற்றங்கள்
புதிய நிதியாண்டு செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 1, 2025) அன்று தொடங்கவுள்ள நிலையில், தனிநபர்கள் மற்றும் வணிகங்களை பாதிக்கும் பல நிதி மற்றும் கொள்கை மாற்றங்கள் நடைமுறைக்கு வர உள்ளன.
வக்ஃப் வாரிய திருத்த மசோதா காலத்தின் கட்டாயம்; அஜ்மீர் தர்கா தலைவர் சட்டத்திற்கு ஆதரவு
வக்ஃப் வாரிய நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறன் தேவை என்பதை வலியுறுத்தி, அஜ்மீர் தர்கா தலைவர் ஹாஜி சையத் சல்மான் சிஷ்டி, வக்ஃப் (திருத்த) மசோதா, 2024 க்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.
மேற்கு ஐரோப்பிய நாடுகளை விட இந்திய மெட்ரோ ரயில்கள்தான் பெஸ்ட்; வைரலாகும் ஜெர்மன் சுற்றுலா பயணியின் வீடியோ
ஜெர்மனியைச் சேர்ந்த சுற்றுலா பயணியான அலெக்ஸ் வெல்டர், இந்தியாவின் மெட்ரோ அமைப்புகளை, குறிப்பாக டெல்லி மற்றும் ஆக்ராவில் உள்ளவற்றைப் பாராட்டியுள்ளார்.
இனி திருச்சி டு யாழ்ப்பாணம் ஒரு மணி நேரம்தான்; 47 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் விமான சேவைகள் தொடங்கியது
47 ஆண்டுகளுக்குப் பிறகு, திருச்சிக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையிலான நேரடி விமான சேவைகள் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 30) அன்று மீண்டும் தொடங்கப்பட்டன.
இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் டிசம்பர் 2024இல் 10.7% அதிகரித்து $718 பில்லியனாக உயர்வு
நிதி அமைச்சகத்தின் தரவுகளின்படி, இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் டிசம்பர் 2024இல் தோராயமாக $718 பில்லியனை எட்டியது.
மன் கி பாத் நிகழ்ச்சியில் யோகா, நீர் பாதுகாப்பு. கழிவு மேலாண்மையை வலியுறுத்திய பிரதமர் மோடி
ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 30) அன்று தனது மாதாந்திர வானொலி நிகழ்ச்சியான மன் கி பாத்தின் 120வது பதிப்பில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, யோகா தினம், நீர் பாதுகாப்பு மற்றும் பாரா விளையாட்டுகளின் வளர்ந்து வரும் புகழ் போன்ற முக்கிய தலைப்புகள் குறித்து உரையாற்றினார்.
டேட்டிங் செயலியில் சந்தித்த பெண்ணால் ₹6.5 கோடியை இழந்த இந்திய தொழிலதிபர்
நொய்டாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் டேட்டிங் செயலியில் சந்தித்த ஒரு பெண்ணால் மோசடியான ஆன்லைன் வர்த்தக தளத்தில் முதலீடு செய்து ₹6.5 கோடியை இழந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஆபரேஷன் பிரம்மாவைத் தொடங்கியது இந்தியா; மியான்மர் நிலநடுக்கத்தில் மீட்பு பணிகளுக்கு உதவிக்கரம்
மியான்மரில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிர்களைக் கொன்று பரவலான அழிவை ஏற்படுத்திய நிலையில், மனிதாபிமான உதவிகளை வழங்க இந்தியா ஆபரேஷன் பிரம்மாவைத் தொடங்கியது.
சத்தீஸ்கரின் சுக்மாவில் நடந்த பெரிய மோதலில் 16 நக்சலைட்டுகளை சுட்டு வீழ்த்திய பாதுகாப்புப் படையினர்
சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் சனிக்கிழமை (மார்ச் 29) அன்று பாதுகாப்புப் படையினருக்கும் நக்சலைட்டுகளுக்கும் இடையே நடந்த கடுமையான மோதலில் குறைந்தது 16 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டதாக பஸ்தார் இன்ஸ்பெக்டர் ஜெனரல் (ஐஜி) சுந்தர்ராஜ் பி தெரிவித்தார்.
ஸ்டீல் பொருட்கள் இறக்குமதிக்கு கட்டுப்பாடு; ஐரோப்பிய ஒன்றியத்தின் மீது பதிலடி நடவடிக்கையை எடுத்தது இந்தியா
ஐரோப்பிய ஒன்றியம் சில ஸ்டீல் பொருட்கள் மீதான இறக்குமதிக்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை நீட்டித்ததற்கு பதிலளிக்கும் விதமாக, குறிப்பிட்ட ஐரோப்பிய இறக்குமதிகளுக்கு பதிலடி வரிகளை விதிக்கும் நோக்கத்தை இந்தியா உலக வர்த்தக அமைப்புக்கு அறிவித்துள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய பாதுகாப்பு கொள்முதல்; 146 இலகுரக பிரச்சந்த் ஹெலிகாப்டர்களை வாங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
ஒரு மைல்கல் முடிவாக, இந்தியா இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய பாதுகாப்பு கொள்முதலுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு; மத்திய அமைச்சரவை ஒப்புதல்
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி (DA) மற்றும் அகவிலை நிவாரணம் (DR) ஆகியவற்றில் 2% உயர்வை மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்; இந்தியா இலவச தங்குமிடம் அல்ல என அமித்ஷா பேச்சு
வியாழக்கிழமை (மார்ச் 27) மக்களவையில் குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் மசோதா 2025 நிறைவேற்றப்பட்டது.
இந்தியாவிலிருந்து உலகளவில் பிரசித்தி பெற்ற சப்பாத்தியின் பயணம்
கிட்டத்தட்ட நமது அன்றாட உணவாகி போன சப்பாத்தி, ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு சுவாரஸ்யமான வரலாற்றைக் கொண்டுள்ளது.
13 புதிய பில்லியனர்கள்; இந்தியாவின் பில்லியனர்கள் மொத்தம் எத்தனை பேர் தெரியுமா?
2025 ஆம் ஆண்டில் இந்தியா புதிதாக 13 புதிய பில்லியனர்களைச் சேர்த்துள்ளது. இதன் மூலம் இந்தியாவின் மொத்த பில்லியனர்களின் எண்ணிக்கை 284 ஆக உயர்ந்துள்ளது என்று ஹுருன் குளோபல் ரிச் லிஸ்ட் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் 'BOTகள்' செய்த 2,000 விசா நியமனங்களை அமெரிக்கா ரத்து செய்துள்ளது
இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் 2,000க்கும் மேற்பட்ட விசா விண்ணப்பங்களை மோசடியானவை எனக் கண்டறிந்து ரத்து செய்துள்ளது.
விரைவில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின்; ரஷ்ய வெளியுறவு அமைச்சர் அறிவிப்பு
கடந்த ஆண்டு மாஸ்கோ பயணத்தின் போது பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பைத் தொடர்ந்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் விரைவில் இந்தியாவுக்கு வருகை தர உள்ளார்.
பங்களாதேஷ் தேசிய தினம்; முகமது யூனூஸிற்கு பிரதமர் மோடி வாழ்த்து கடிதம்
பிரதமர் நரேந்திர மோடி, பங்காளதேஷிற்கு தேசிய தின வாழ்த்துக்களைத் தெரிவித்து, இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினார்.
உலக பாதுகாப்பு குறியீடு 2025 தரவரிசையில் 89வது இடத்தில் அமெரிக்கா; இந்தியாவுக்கு எந்த இடம் தெரியுமா?
2025 ஆம் ஆண்டு நம்பியோ (Numbeo) பாதுகாப்பு குறியீட்டில் அமெரிக்கா ஏமாற்றமளிக்கும் வகையில் 147 நாடுகளில் 89வது இடத்தைப் பிடித்துள்ளது.
வளிமண்டல காற்றிலிருந்து தண்ணீர் பிரித்தெடுக்கும் இயந்திரத்தை உருவாக்கிய இந்திய நிறுவனம்
உலகளவில் தண்ணீர் பற்றாக்குறை தீவிரமடைந்து வரும் நிலையில், இந்திய நிறுவனமான அக்வோ (Akvo), காற்றின் ஈரப்பதத்திலிருந்து நேரடியாக குடிக்கக்கூடிய தண்ணீரைப் பிரித்தெடுக்கும் ஒரு புதுமையான தீர்வை அறிமுகப்படுத்தி உள்ளது.
10 ஆண்டுகளில் இரட்டிப்பான இந்தியாவின் ஜிடிபி; ஜப்பான் மற்றும் ஜெர்மனியை விரைவில் விஞ்சும் என எதிர்பார்ப்பு
இந்தியா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியை (ஜிடிபி) 2015ஆம் ஆண்டில் 2.1 டிரில்லியன் டாலரிலிருந்து 2025ஆம் ஆண்டில் 4.3 டிரில்லியன் டாலராக இரட்டிப்பாக்குவதன் மூலம் குறிப்பிடத்தக்க பொருளாதார மைல்கல்லை அடையும் பாதையில் உள்ளது.
ஏப்ரல் 5 ஆம் தேதி இலங்கை செல்கிறார் பிரதமர் மோடி; சம்பூர் சூரிய மின் நிலையத்திற்கான பணிகளை தொடங்கி வைக்கிறார்
இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 5 ஆம் தேதி இலங்கைக்கு வருகை தருவார் என்று இலங்கை அதிபர் அனுரகுமார திசநாயக்க அறிவித்துள்ளார்.
தொகுதி மறுவரையறைக்கான அடுத்த கூட்டம் ஹைதராபாத்தில் நடைபெறும் என அறிவிப்பு
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நடைபெற்ற தொகுதி மறுவரையறை கூட்டு நடவடிக்கைக் குழு (JAC) கூட்டம், அடுத்த சுற்று விவாதங்களை தெலுங்கானாவின் ஹைதராபாத்தில் நடத்துவது என்ற முக்கிய முடிவுடன் நிறைவடைந்தது.
லடாக் பிராந்தியத்தில் சீனா புதிய மாவட்டங்களை அறிவித்ததற்கு இந்தியா கடும் கண்டனம்
இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியான லடாக் யூனியன் பிரதேசத்திற்குள் வரும் பகுதிகளை உள்ளடக்கி, சீனா தனது ஹோடன் மாகாணத்தில் இரண்டு புதிய மாவட்டங்களை நிறுவுவதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
தொடர்ந்து இரண்டாவது வாரமாக அதிகரிப்பு; இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு $305 மில்லியன் உயர்வு
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு $305 மில்லியன் அதிகரித்து, மார்ச் 14 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் $654.271 பில்லியனை எட்டியுள்ளது என்று இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெள்ளிக்கிழமை (மார்ச் 21) வெளியிட்ட தரவுகள் தெரிவிக்கின்றன.
மார்ச் 30 அல்லது 31; ரம்ஜான் பண்டிகை எந்த தேதியில் கொண்டாடப்படுகிறது
மிக முக்கியமான இஸ்லாமிய பண்டிகைகளில் ஒன்றான ஈத்-உல்-பித்ர் எனப்படும் ரமலான் மாதத்தின் முடிவைக் குறிக்கும் ரம்ஜான் பண்டிகை இஸ்லாமிய நாட்காட்டியின் பத்தாவது மாதமான ஷவ்வால் மாதத்தின் முதல் நாளில் கொண்டாடப்படுகிறது.
₹2.9 லட்சம் கோடி உள்கட்டமைப்பு நிதிகளை செலவிடாமல் வைத்திருக்கும் இந்தியாவின் 19 மாநிலங்கள்
இந்தியாவின் 19 மாநிலங்கள் தங்கள் மூலதனச் செலவின பட்ஜெட்டுகளை கணிசமாகக் குறைவாகப் பயன்படுத்தியுள்ளன.
இந்தியாவின் மிக ஏழ்மையான எம்எல்ஏ பாஜகவைச் சேர்ந்தவர்; சொத்து மதிப்பு வெறும் ரூ.1,700 தான்
28 மாநில சட்டமன்றங்கள் மற்றும் மூன்று யூனியன் பிரதேசங்களில் உள்ள இந்தியாவின் எம்எல்ஏக்களின் சொத்துக்களை ஜனநாயக சீர்திருத்த சங்கம் (ADR) ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
2030 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை அகமதாபாத்தில் நடத்த இந்தியா விண்ணப்பம் சமர்ப்பிப்பு
குஜராத்தின் அகமதாபாத்தில் 2030 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதில் இந்தியா அதிகாரப்பூர்வமாக தனது ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளது.
பொருளாதார சவால்களுக்கு மத்தியில் நிதி சரிவை எதிர்கொள்ளும் பெண்கள் தலைமையிலான ஸ்டார்ட்அப்கள்
பெண்கள் தலைமையிலான ஸ்டார்ட்அப்களுக்கான உலகளாவிய நிதி சூழல் 2024இல் குறிப்பிடத்தக்க சரிவைக் கண்டது.
சத்தீஸ்கர் என்கவுன்டர்களில் 22 நக்சலைட்டுகள் சுட்டு வீழ்த்திய பாதுகாப்புப் படையினர்; ஒரு வீரர் வீரமரணம்
சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினர் புதன்கிழமை பீஜப்பூர் மற்றும் கான்கர் மாவட்டங்களில் நடத்திய இரண்டு தனித்தனி என்கவுன்டர்களில் 22 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர்.
பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் இந்தியாவுடன் ஒத்துழைப்பு; அமெரிக்காவின் தேசிய புலனாய்வு தலைவர் துளசி கப்பார்ட் உறுதி
இந்தியாவிற்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க புலனாய்வுத் தலைவர் துளசி கப்பார்ட், இஸ்லாமிய பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கான ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் உறுதிப்பாட்டை வலியுறுத்தினார்.
இந்தியா-சீனா உறவு குறித்த பிரதமர் மோடியின் கருத்துக்களுக்கு சீனா வரவேற்பு
சீனா-இந்திய உறவுகளில் உள்ள முரண்பாடுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் வெளியிட்ட கருத்துக்களை சீனா வரவேற்றுள்ளது.
நடப்பு நிதியாண்டின் நிகர நேரடி வரி வசூல் 13.13% அதிகரிப்பு; மத்திய அரசு தகவல்
நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் நிகர நேரடி வரி வசூல் 13.13% அதிகரித்து ₹21.26 லட்சம் கோடியை தாண்டியுள்ளது என்று மத்திய அரசு தரவுகள் தெரிவிக்கின்றன.
எட்டு மாதங்களில் இல்லாத அளவிற்கு இந்தியாவில் அதிகரித்த மொத்த விலை பணவீக்கம்
இந்தியாவின் மொத்த விலை பணவீக்கம் பிப்ரவரி மாதத்தில் 2.38% ஆக உயர்ந்து எட்டு மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது என்று அரசு தரவுகள் தெரிவிக்கின்றன.
ஐந்து ஆண்டுகளில் ரூ.400 கோடியை அரசுக்கு வரியாக செலுத்தியுள்ள ராமர் கோவில் நிர்வாகம்
ஸ்ரீ ராம ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை கடந்த ஐந்து ஆண்டுகளில் சுமார் ரூ.400 கோடி வரி செலுத்தியுள்ளது.
ஐபோனைத் தொடர்ந்து இந்தியாவில் ஏர்போட்ஸ் உற்பத்தியைத் தொடங்குகிறது ஆப்பிள் நிறுவனம்
ஆப்பிள் நிறுவனம் ஏப்ரல் மாதம் முதல் ஹைதராபாத்தில் உள்ள ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில் ஏர்போட்ஸ் உற்பத்தியைத் தொடங்க உள்ளது.