LOADING...
எலான் மஸ்க் புல்டோசர் போன்றவர்: மைக்ரோசாஃப்ட் ஏஐ சிஇஓ முஸ்தபா சுலேமான் கருத்து
எலான் மஸ்க் புல்டோசர் போன்றவர் என மைக்ரோசாஃப்ட் ஏஐ சிஇஓ கருத்து

எலான் மஸ்க் புல்டோசர் போன்றவர்: மைக்ரோசாஃப்ட் ஏஐ சிஇஓ முஸ்தபா சுலேமான் கருத்து

எழுதியவர் Sekar Chinnappan
Dec 14, 2025
04:36 pm

செய்தி முன்னோட்டம்

மைக்ரோசாஃப்ட் ஏஐயின் தலைமைச் செயல் அதிகாரியான (சிஇஓ) முஸ்தபா சுலேமான் சமீபத்திய நேர்காணலில், செயற்கை நுண்ணறிவுப் (ஏஐ) புரட்சியை வடிவமைக்கும் முக்கிய ஆளுமைகள் குறித்து வெளிப்படையாகப் பேசியுள்ளார். xAI நிறுவனத்தின் நிறுவனரான எலான் மஸ்கை சுலேமான் ஒரு புல்டோசர் என்று வர்ணித்தார். "உண்மையை அவர் தன் விருப்பத்திற்கு வளைக்கும் வல்லமை கொண்டவர். சாத்தியமற்றதாகத் தோன்றுவதைச் சாதிப்பதில் அவர் நம்ப முடியாத சாதனையைக் கொண்டுள்ளார்" என்று சுலேமான் பாராட்டினார். டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் மூலம் மஸ்க் அடைந்த சாதனைகளையும், அவரின் வெளிப்படையான தன்மையையும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஓபன்ஏஐ

ஓபன்ஏஐ சிஇஓ

ஓபன்ஏஐயின் தலைமைச் செயல் அதிகாரியான சாம் ஆல்ட்மேன் குறித்துப் பேசியபோது, அவர் எங்கள் தலைமுறையின் சிறந்த தொழில்முனைவோர்களில் ஒருவராக மாறக்கூடும் என்று சுலேமான் புகழாரம் சூட்டினார். சாம் ஆல்ட்மேன், சாட்ஜிபிடிக்கு அதிக சக்தி வாய்ந்த ஏஐ டேட்டா மையங்களைக் கட்டமைப்பதற்கானத் தனது சவாலான திட்டங்களை தைரியமாக முன்னெடுத்துச் செல்வதாக அவர் குறிப்பிட்டார். சுலேமான், கூகுள் டீப்மைண்டின் தலைவரான டெமிஸ் ஹசாபிஸை சிறந்த சிந்தனையாளர் மற்றும் விஞ்ஞானி என்றும் புகழ்ந்தார். ஏஐ துறையின் எதிர்காலத்தைப் போட்டி மற்றும் பரஸ்பர மரியாதையுடன் இந்த முக்கிய ஆளுமைகள் வடிவமைத்து வருகின்றனர் என்றும் சுலேமான் கூறினார்.

Advertisement