
இந்தியாவின் மிக ஏழ்மையான எம்எல்ஏ பாஜகவைச் சேர்ந்தவர்; சொத்து மதிப்பு வெறும் ரூ.1,700 தான்
செய்தி முன்னோட்டம்
28 மாநில சட்டமன்றங்கள் மற்றும் மூன்று யூனியன் பிரதேசங்களில் உள்ள இந்தியாவின் எம்எல்ஏக்களின் சொத்துக்களை ஜனநாயக சீர்திருத்த சங்கம் (ADR) ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
ADR நடத்திய சமீபத்திய ஆய்வில், 28 மாநில சட்டமன்றங்கள் மற்றும் மூன்று யூனியன் பிரதேசங்களில் உள்ள எம்எல்ஏக்களிடையே குறிப்பிடத்தக்க சொத்து ஏற்றத்தாழ்வுகள் இருப்பது தெரியவந்துள்ளது.
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ நிர்மல் குமார் தாரா, ரூ.1,700 மதிப்புள்ள சொத்துக்களை மட்டுமே அறிவித்து, இந்தியாவிலேயே மிக ஏழ்மையான எம்எல்ஏவாக உள்ளார்.
இவர் மட்டுமல்ல, ADR அறிக்கையின்படி பல எம்எல்ஏக்கள் ரூ.1 லட்சத்திற்கும் குறைவான சொத்துக்களைப் பதிவு செய்துள்ளனர்.
திரிபுரா
மொத்த சொத்து மதிப்பில் கடைசி இடத்தில் திரிபுரா
மற்ற குறைந்த சொத்து கொண்டுள்ள எம்எல்ஏக்களில் நரிந்தர் பால் சிங் சவ்னா (ஆம் ஆத்மி, பஞ்சாப்) ரூ.18,370 மற்றும் நரிந்தர் கவுர் பராஜ் (ஆம் ஆத்மி, பஞ்சாப்) ரூ.24,409 ஆகியோர் அடங்குவர்.
இதற்கிடையே, மாநில அளவில் ஒட்டுமொத்தமாக எம்எல்ஏக்களில் திரிபுராவில் மிகக் குறைந்த மொத்த சொத்துக்கள் உள்ளன. அதன் 60 எம்எல்ஏக்கள் மொத்தமாக ரூ.90 கோடி சொத்துக்களை வைத்திருக்கிறார்கள்.
மணிப்பூர் மற்றும் புதுச்சேரி ஆகியவை முறையே ரூ.222 கோடி மற்றும் ரூ.297 கோடியுடன் அடுத்த இரண்டு இடங்களில் உள்ளன.
இதற்கு நேர்மாறாக, ஆந்திரா மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களில் சராசரியாக ரூ.60 கோடிக்கு மேல் எம்எல்ஏக்களின் சொத்துக்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்சிகள்
அரசியல் கட்சிகளில் ஒப்பீடு
அரசியல் கட்சிகளில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏக்களின் சொத்துக்கள் மிகக் குறைவு.
அந்த கட்சி சராசரியாக ஒரு எம்எல்ஏவுக்கு ரூ.1.36 கோடி கொண்டுள்ளது. ஒப்பீட்டளவில் குறைந்த சொத்துக்களைக் கொண்ட பிற கட்சிகளில் ராஷ்ட்ரிய லோக் தள் (எம்எல்ஏவுக்கு ரூ.7.55 கோடி) மற்றும் ஆம் ஆத்மி (எம்எல்ஏவுக்கு ரூ.7.33 கோடி) ஆகியவை அடங்கும்.
இந்திய அரசியல் வட்டத்தில் உள்ள நிதிப் பிளவை இந்த அறிக்கை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.