6 முதல் 8 ஆம் வகுப்பு அறிவியல் ஆசிரியர்களுக்காக 40 வார ஆன்லைன் டிப்ளமோ படிப்பு: NCERT அறிமுகம்
செய்தி முன்னோட்டம்
தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT), நடுநிலைப் பள்ளி அளவில் (6 முதல் 8 ஆம் வகுப்பு) அறிவியல் கற்பிக்கும் ஆசிரியர்களுக்காக, 40 வார கால விரிவான ஆன்லைன் டிப்ளமோ படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. பாடத்தின் பெயர் நடுநிலைப் பள்ளிகளுக்கான அறிவியல் கற்பித்தலில் டிப்ளமோ படிப்பு ஆகும். இதன் நோக்கம் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களின் அறிவியல் கருத்துப் புரிதலை வலுப்படுத்துதல், கற்பித்தல் திறன்களை மேம்படுத்துதல் மற்றும் வகுப்பறை நடைமுறைகளைச் செம்மைப்படுத்துதல் ஆகியவை இதன் முக்கிய நோக்கங்கள் ஆகும். இந்தத் திட்டம் மாணவர்களிடையே அறிவியல் மனப்பான்மை, ஆய்வுத்திறன், விமர்சன சிந்தனை ஆகியவற்றை வளர்ப்பதை இலக்காகக் கொண்டுள்ளது.
விவரம்
படிப்பு காலம்
6 முதல் 8 ஆம் வகுப்பு வரை அறிவியல் கற்பிக்கும் பணியில் உள்ள ஆசிரியர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இதில் NCERT பாடத்திட்டத்தைப் பின்பற்றும் அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் இருவரும் விண்ணப்பிக்கலாம். இது 40 வாரக் கால முற்றிலும் ஆன்லைன் படிப்பு ஆகும். இது டிசம்பர் 29, 2025 அன்று தொடங்கி அக்டோபர் 18, 2026 அன்று நிறைவடையும். பணிபுரியும் ஆசிரியர்கள் தங்கள் வேலைகளைச் சமன் செய்யும் வகையில், வாரத்திற்கு 6 முதல் 8 மணி நேரம் மட்டுமே இந்த வகுப்புக்குச் செலவிட வேண்டும்.
விண்ணப்பம்
விண்ணப்ப பதிவு
விண்ணப்பப் பதிவு டிசம்பர் 28, 2025 வரை திறந்திருக்கும். விண்ணப்பக் கட்டணம் திரும்பப் பெற முடியாத ₹2,000 ஆகும். அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்யும் பங்கேற்பாளர்களுக்கு என்சிஆர்இடியின் சான்றிதழ் வழங்கப்படும். ஆர்வமுள்ள ஆசிரியர்கள், NCERTX ஆன்லைன் பதிவு போர்ட்டல் மூலம் நேரடியாக விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.