ஸ்பேம் மெசேஜ்களை கட்டுப்படுத்த புதிய அப்டேட்களை வெளியிட்டது டெலிகிராம்
செய்தி முன்னோட்டம்
டெலிகிராம் புதிய அம்சங்களுடன் நிரம்பிய ஒரு பெரிய அப்டேட்டை வழங்கியுள்ளது. இது பயனர் அனுபவம் மற்றும் பாதுகாப்பு இரண்டையும் மேம்படுத்துகிறது.
சமீபத்திய அப்டேட் புதுமையான வருமான வாய்ப்பு அம்சங்களையும் கொண்டுவருகிறது. இது தளத்தின் பாதுகாப்பைப் பராமரிக்கும் அதேவேளையில் படைப்பாளர்களை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த அப்டேட்டின் முக்கிய சிறப்பம்சம் பிரீமியம் பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கும் புதிய மெசேஜ்களுக்கான ஸ்டார் அம்சமாகும்.
இது டெலிகிராம் ஸ்டார்ஸில் தொடர்புகள் இல்லாதவர்களிடமிருந்து செய்திகளைப் பெறுவதற்கு கட்டணம் வசூலிக்க அனுமதிக்கிறது.
இதன் மூலம் ஸ்பேமைக் குறைக்க உதவுவதோடு, வருமானம் ஈட்டுவதற்கான வாய்ப்பை வழங்குகிறது.
தொடர்பு உறுதிப்படுத்தல்
தொடர்புகளை உறுதிப்படுத்தும் அம்சம்
டெலிகிராம் வழங்கியுள்ள மற்றொரு குறிப்பிடத்தக்க அப்டேட் தொடர்பு உறுதிப்படுத்தல் ஆகும். இது பயனர்களுக்கு முதல் முறையாக செய்தி அனுப்புபவர்கள் பற்றிய விவரங்களை வழங்குகிறது.
இதில் அவர்களின் நாடு, பகிரப்பட்ட குழுக்கள், கணக்கு வரலாறு மற்றும் சரிபார்ப்பு நிலை ஆகியவை அடங்கும்.
உரையாடல்களில் ஈடுபடுவதற்கு முன்பு பயனர்கள் தகவலறிந்த முடிவுகளை எடுக்க உதவுகிறது.
டெலிகிராம் ஸ்டார்ஸ் பரிசு வழங்கும் அமைப்பையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் பயனர்கள் பிரீமியம் சந்தாக்களை பரிசாக வழங்க தங்கள் சம்பாதித்த ஸ்டார்களைப் பயன்படுத்த முடியும்.
கூடுதலாக, 21 நாள் காத்திருப்பு காலத்திற்குப் பிறகு, டெலிகிராம் விளம்பரம் உட்பட பல்வேறு நோக்கங்களுக்காக பயனர்கள் சம்பாதித்த ஸ்டார்களை வித்டிரா செய்யலாம்.