
எலான் மஸ்க்கிற்கு ஏன் இவ்வளவு குழந்தைகள் இருக்கிறார்கள் என்ற உண்மையை உடைத்த அவரது பார்ட்னர்
செய்தி முன்னோட்டம்
ஒரு பெரிய குடும்பத்திற்கான எலான் மஸ்க்கின் திட்டங்கள், வரவிருக்கும் உலகத்தின் பேரழிவுக்கான அவரது 'தயாரிப்புகளுடன்' தொடர்புடையவை என்ற ராஜதந்திரம் தெரியுமா?
மஸ்க்கின் குழந்தைகளில் ஒருவரின் தாய் என்று கூறிக் கொள்ளும் ஆஷ்லே செயிண்ட் கிளேர், தி வால் ஸ்ட்ரீட் ஜர்னலுக்கு அளித்த சமீபத்திய நேர்காணலில் இதை வெளிப்படுத்தினார்.
செயிண்ட் கிளேரின் கூற்றுப்படி, இந்த 'தயாரிப்புகளின்' ஒரு பகுதியாக குழந்தைகளின் "Legion"(படை) உருவாக்குவது பற்றி மஸ்க் பேசியுள்ளார்.
வாடகைத் தாய் திட்டங்கள்
பெரிய குடும்பங்களை உருவாக்கும் திட்டத்தில் வாடகைத் தாய்களை தேர்ந்தெடுத்த மஸ்க்
செயிண்ட் கிளேர் தனது கர்ப்ப காலத்தில் மஸ்க்கிடமிருந்து வந்த குறுஞ்செய்திகளை பற்றி கூறினார்.
அதில் மற்ற பெண்களைச் சேர்ப்பதன் மூலம் அவர் குடும்ப வளர்ச்சியை விரைவுபடுத்த விரும்புவதாக மஸ்க் வெளிப்படுத்தியுள்ளார்.
"அபோகாலிப்ஸுக்கு முன்பு (படை)லெஜியன்-லெவலை அடைய, நாம் வாடகை தாய்களைப் பயன்படுத்த வேண்டும்." என மஸ்க் தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சவால்களை எதிர்பார்த்து, ஒரு பெரிய குடும்பத்திற்கான தனது விருப்பத்தை நிறைவேற்ற மஸ்க் வாடகைத் தாய் முறையைப் பரிசீலித்து வருகிறார் என்பதை இது குறிக்கிறது.
குடும்பத்தை குறிக்க ஒரு சொல்
மஸ்க்கின் குழந்தைகள் 'லெஜியன்' என்று குறிப்பிடப்படுகிறார்கள்
மஸ்க் தனது பல குழந்தைகளை தனது "லெஜியன்" என்று அழைக்கத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
ரோமானியப் பேரரசிலிருந்து கடன் வாங்கப்பட்ட சொல், பேரரசு விரிவடைய உதவிய ஒரு பெரிய இராணுவப் பிரிவைக் குறிக்கிறது.
சுவாரசியமாக, செயிண்ட் கிளேருடனான மஸ்க்கின் குழந்தைகளில் ஒருவருக்கு, ரோமின் இரண்டு புராண நிறுவனர்களில் ஒருவரின் பெயரான ரோமுலஸ் என்று பெயரிடப்பட்டது.
விண்வெளி ஆசைகள்
பல கோள்களில் உயிர்வாழ்வதற்கான மஸ்க்கின் தொலைநோக்குப் பார்வை
மனிதகுலத்தை பல கோள் இனமாக மாற்றுவது நமது நீண்டகால உயிர்வாழ்வைப் பாதுகாப்பதற்கான ஒரு முக்கியமான படியாகும் என்று மஸ்க் முன்னர் வெளிப்படுத்தியுள்ளார்.
நமக்குத் தெரிந்த அனைத்து உயிர்களையும் பாதுகாப்பதற்கு இது இன்றியமையாதது என்று அவர் நம்புகிறார்.
அந்த நோக்கத்திற்காக, செவ்வாய் கிரகத்தை அடையும் வேகத்தை அதிகரிக்க நாசாவை அவர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
அவரது நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் , செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கக்கூடிய ஒரு ராக்கெட்டை உருவாக்கும் நோக்கில் செயல்பட்டு வருகிறது.
மக்கள் தொகை கவலைகள்
பிறப்பு விகிதங்கள் குறித்த மஸ்க்கின் கொள்கை நம்பிக்கைகள் மற்றும் கவலைகள்
பிறப்பு விகிதம் குறைந்து வருவதால் நாகரிகம் ஆபத்தில் இருப்பதாகக் கூறி, மஸ்க் பல நேரங்களில் கருத்துக்களைக் கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு சவுதி அரேபியாவில் நடந்த ஒரு மாநாட்டில், "பெரும்பாலான நாடுகளுக்கு, பிறப்பு விகிதத்தை அவர்கள் தீர்க்க வேண்டிய மிகப்பெரிய ஒற்றைப் பிரச்சினையாகக் கருத வேண்டும் என்று நான் நினைக்கிறேன்" என்று அவர் கூறினார்.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவை விட பிறப்பு விகிதம் அதிகமாக உள்ள மூன்றாம் உலக நாடுகளைப் பற்றியும் அவர் கவலைப்படுவதாக தெரிவித்துள்ளார்.