இந்திய ஏஐ ஸ்டார்ட்அப்களை ஊக்குவிக்க டுகெதர் ஏஐ ஸ்டுடியோவை தொடங்கும் ஃப்ரெஷ்வொர்க்ஸ் நிறுவனர் கிரிஷ் மாத்ருபூதம்
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) சார்ந்த ஸ்டார்ட்அப்களை ஆதரிக்கும் நோக்கில், ஃப்ரெஷ்வொர்க்ஸ் நிறுவனர் கிரிஷ் மாத்ருபூதம் தனது துணிகர மூலதன நிறுவனமான டுகெதர் ஃபண்ட் மூலம் டுகெதர் ஏஐ ஸ்டுடியோவைத் தொடங்குவதாக அறிவித்துள்ளார்.
ஏப்ரல் 15 ஆம் தேதி தொடங்கும் 12 வார திட்டம் முதன்மையாக பெங்களூரில் நடைபெறும்.
பின்னர் உலகளாவிய ஆதரவை பெறுவதற்காக அமெரிக்காவில் ஒரு வாரம் நடைபெறும்.
டுகெதர் ஏஐ ஸ்டுடியோவில் பங்கேற்கும் ஸ்டார்ட்அப்களுக்கு $1 மில்லியன் வரை நிதியுதவி, சிறந்த ஏஐ நிபுணர்களிடமிருந்து வழிகாட்டுதல் மற்றும் பரந்த அமெரிக்க-இந்தியா வணிக நெட்வொர்க்கை பயன்படுத்தும் வாய்ப்பை வழங்கும்.
கூடுதல் அம்சங்கள்
ஸ்டார்ட்அப்களுக்கு கிடைக்கும் கூடுதல் அம்சங்கள்
கூடுதலாக, ஸ்டார்ட்அப்கள் ஓபன்ஏஐ, ஏடபிள்யூஎஸ், கூகுள் கிளவுட் மற்றும் மைக்ரோசாப்ட் அசூர் போன்ற முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்களிடமிருந்து $600,000 க்கும் அதிகமான கிளவுட் கிரெடிட்களைப் பெறும்.
மேலும், பெங்களூரில் பிரத்யேக அலுவலக இடத்தையும் பெறும். இந்த திட்டம் வாடிக்கையாளர் உறவு மேலாண்மை, ஆட்டோமேஷன், சைபர் பாதுகாப்பு மற்றும் சுகாதாரப் பராமரிப்பு உள்ளிட்ட நிறுவன செயல்பாடுகளுக்காக ஏஐ-சார்ந்த வணிக பயன்பாடுகளை உருவாக்கும் ஸ்டார்ட்அப்களில் கவனம் செலுத்துகிறது.
இது குவாண்டம் கம்ப்யூட்டிங் மற்றும் மூளை-கணினி இன்டெர்பேஸ்களில் முன்னேற்றங்களுக்கும் ஆதரவு வழங்கும்.
இந்த முயற்சி, இந்தியாவின் மாறுபட்ட மொழியியல் மற்றும் சமூக-பொருளாதார சூழலுக்கு ஏற்றவாறு பன்மொழி ஏஐ மாடல்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட சொக்ட் லேப்ஸ் தலைமையிலான புராஜெக்ட் EKA போன்ற முயற்சிகளை ஒத்துள்ளது.