பயனர் அனுபவத்தை மேம்படுத்தும் ஐந்து புதிய அப்டேட்கள்; அனைத்து பயனர்களுக்கும் வெளியிட்டது வாட்ஸ்அப்
செய்தி முன்னோட்டம்
உலகம் முழுவதும் பரவலாகப் பயன்படுத்தப்படும் வாட்ஸ்அப், மேம்பட்ட தனிப்பயனாக்கம், அறிவிப்புகள் மற்றும் வீடியோ பிளேபேக் மூலம் பயனர் அனுபவத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஐந்து புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
பீட்டா பயனர்களுடன் முன்னர் சோதனை ரீதியாக வழங்கப்பட்ட இந்த அப்டேட்கள் தற்போது உலகளவில் அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கின்றன.
இதில் முதல் பெரிய அப்டேட்டானது பயனர்கள் பல வண்ண தீம்களுடன் சாட்களை தனக்கு ஏற்றவாறு அமைத்துக் கொள்ள அனுமதிக்கிறது.
இதற்காக வாட்ஸ்அப் இப்போது 20 சாட் தீம்கள் மற்றும் 30 புதிய வால்பேப்பர்களை வழங்குகிறது.
இது பயனர்கள் தங்கள் விருப்பமான வண்ணங்களுடன் தங்கள் சாட்களை தனித்துவமாக மாற்ற உதவுகிறது.
கவனச் சிதறல்கள்
கவனச் சிதறல்களை குறைக்கும் அம்சம்
கவனச்சிதறல்களைக் குறைக்க, வாட்ஸ்அப் ஒரு தெளிவான மெசேஜ் நோட்டிபிகேஷன் அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இது பயனர்கள் அறிவிப்புகளை மிகவும் திறம்பட நிர்வகிக்கவும், தேவைப்பட்டால் படிக்காத செய்தி புள்ளியை அகற்றவும் அனுமதிக்கிறது.
இதனால் முக்கியமான மெசேஜ் நோட்டிபிகேஷன்களை மட்டும் பெறும் வகையில் அமைத்துக் கொள்ளலாம்.
மற்றொரு முக்கிய அம்சமாக சாட் ஃபில்டரை உருவாக்கியுள்ள வாட்ஸ்அப் இப்போது படிக்காத சாட்களை ஃபில்டர் செய்ய முடியும்.
இந்த அப்டேட் படிக்காத மெசேஜ்களின் சரியான எண்ணிக்கையைக் காட்டுகிறது. பயனர்கள் முக்கியமான உரையாடல்களை ஒருபோதும் தவறவிடாமல் பார்த்துக் கொள்கிறது.
வீடியோ பிளேபேக்
வீடியோ பிளேபேக் வேக கட்டுப்பாடு
வீடியோ பிளேபேக் வேகத்தை சரிசெய்யும் திறன் மற்றொரு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அம்சமாகும்.
பயனர்கள் இப்போது 1.5x அல்லது 2x வேகத்தில் வீடியோக்களைப் பார்க்கலாம். இந்த செயல்பாடு முன்பு வாய்ஸ் நோட்களுக்கு மட்டுமே கிடைத்தது.
இறுதியாக, வாட்ஸ்அப், மெட்டா ஏஐ விட்ஜெட் மூலம் அதன் தளத்தில் செயற்கை நுண்ணறிவை இன்னும் ஆழமாக ஒருங்கிணைத்துள்ளது.
பயனர்கள் இப்போது ஏஐயை விரைவாக பயன்படுத்த தங்கள் ஹோம் ஸ்கிரீனில் ஏஐ சாட்பாட் விட்ஜெட்டை வைக்கலாம்.
இந்த அப்டேட்கள் மூலம், வாட்ஸ்அப் பயனர் அனுபவத்தை மேம்படுத்துவதில் தொடர்ந்து கவனம் செலுத்துகிறது.
மேலும், தனிப்பயனாக்கம், கட்டுப்பாடு மற்றும் மெசேஜ் அனுப்புவதில் வசதியை வழங்குகிறது.