திமுக: செய்தி

திமுக முப்பெரும் விழாவையொட்டி முதல்வர் இன்று வேலூர் பயணம் 

தமிழ்நாடு மாநிலம் வேலூர் மாவட்டத்தில் நாளை(செப்.,17) திமுக பவள விழா உள்ளிட்ட முப்பெரும் விழா நடக்கவுள்ளது.

உண்மைக்கு புறம்பான தகவல்களை அளிக்கிறது கர்நாடக அரசு - முதல்வர் மு.க.ஸ்டாலின் 

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரானது நாளை மறுநாள் டெல்லியில் துவங்கவுள்ள நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்.பி.க்களுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளார்.

சென்னையில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடு 

தமிழ்நாடு மாநிலத்தின் சட்ட ஒழுங்கு நிலவரம், அறிவிக்கப்பட்ட நலத்திட்டங்களின் செயல்பாடுகள், உள்ளிட்டவைகள் குறித்து ஆய்வு செய்ய ஒவ்வொரு ஆண்டும் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்கள், வனத்துறையினர் ஆகியோருடனான மாநாடு முதல்வர் தலைமையில் நடைபெறுவது வழக்கம்.

'இந்து மதம் உலகத்திற்கே மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது': ஆ.ராசாவின் வீடியோவை வெளியிட்டார் பாஜக தலைவர் அண்ணாமலை 

திமுக எம்பி ஆ. ராசா இந்து மதம் குறித்து பேசும் ஒரு வீடியோவை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

'சனாதனம் குறித்து தொடர்ந்து பேசுவோம்' - உதயநிதி ஸ்டாலின் ஆவேச பேச்சு 

சென்னையில் கடந்த 1ம் தேதி நடைபெற்ற 'சனாதன ஒழிப்பு மாநாடு' நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது பெரும் சர்ச்சையினை ஏற்படுத்தியது.

'உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து பேசியதற்கு தகுந்த பதில் அளிக்க வேண்டும்': பிரதமர் மோடி 

திமுக தலைவர் உதயநிதி ஸ்டாலினின் சர்ச்சைக்குரிய 'சந்தான தர்ம' கருத்துக்கு அவர் உரிய பதில் அளிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

'சனாதன தர்ம' கருத்து: உதயநிதி ஸ்டாலின், பிரியங்க் கார்கேவிற்கு எதிராக FIR பதிவு 

மத உணர்வுகளை புண்படுத்தியதற்காக திமுக தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவின் மகன் பிரியங்க் கார்கே ஆகியோர் மீது FIR பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெறிவித்துள்ளனர்.

செந்தில் பாலாஜியை பதவி நீக்க அறிவுறுத்தும் உயர் நீதிமன்றம்

செந்தில் பாலாஜி, இலாக்கா இல்லாத அமைச்சராக தொடர்வதில் எந்த பயனும் இல்லை என்பதால், அவரை பதவி நீக்கம் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

உதயநிதி ஸ்டாலினின் தலைக்கு 10 கோடி ரூபாய் பரிசு அறிவித்த மத போதகர்: என்ன நடக்கிறது?

'சனாதன தர்மம்' குறித்த உதயநிதி ஸ்டாலினின் கருத்துக்களால் எழுந்த பெரும் பின்னடைவுக்கு மத்தியில், உத்தரபிரதேசத்தை சேர்ந்த ஒரு இந்து மத போதகர், தமிழக விளையாட்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் தலைக்கு 10 கோடி ரூபாய் பரிசு அறிவித்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலினின் 'சனாதன தர்ம' கருத்துக்கு மறுப்பு தெரிவித்துள்ளார் மம்தா பானர்ஜி

தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் "சனாதன தர்ம" கருத்துக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலினின் 'சனாதன தர்ம' கருத்துக்கு குவியும் எதிர்ப்புகள்: யார் யார் என்ன சொன்னார்கள்?

கடந்த சனிக்கிழமை, சனாதன தர்மத்தை டெங்கு மற்றும் மலேரியாவுடன் ஒப்பிட்டு உதயநிதி ஸ்டாலின் பேசியதால் பெரும் சர்ச்சை வெடித்தது.

சர்ச்சையை கிளப்பி இருக்கும் 'சனாதன தர்மம்' என்றால் உண்மையில் என்ன?

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கி வாய்த்த இந்த சர்ச்சை, தற்போது நாடு முழுவதும் பற்றி எரிகிறது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் 'இந்தியாவுக்காக பேசுகிறேன்' பாட்காஸ்ட் தொடரினால் ஏற்பட்ட சர்ச்சை 

தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது பாட்காஸ்ட் தொடரின் முதல் எபிசோடில் பிரதமர் நரேந்திர மோடியைத் தாக்கி பேசியதற்கு பாரதிய ஜனதா கட்சி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

04 Sep 2023

பாஜக

"எந்த வழக்கையும் எதிர்கொள்ள தயார்": சனாதன தர்மம் குறித்த சர்ச்சைக்கு உதயநிதி பதில் 

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகனும் தமிழக அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்மம் குறித்து தான் கூறிய கருத்துகளை பாஜக திரித்து பேசுவதாக குற்றம் சாட்டியதுடன், தான் கூறிய வார்த்தைகளில் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

03 Sep 2023

அமித்ஷா

'எதிர்க்கட்சிகள் இந்து மதத்தை வெறுக்கின்றன': உதயநிதியின் கருத்துக்கு அமித்ஷா பதில் 

திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினின் மகனும் தமிழக அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மம் குறித்து பேசியது, எதிர்க்கட்சிகள் இந்து மதத்தை வெறுக்கின்றன என்பதையும், அது நமது பாரம்பரியத்தின் மீதான தாக்குதல் என்பதையும் காட்டுகிறது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

இன்பநிதி பெயரில் பாசறை - போஸ்டர் ஒட்டிய திமுக நிர்வாகிகள் சஸ்பெண்ட்

உதயநிதி ஸ்டாலின் மகனான இன்பநிதி பெயரில் பாசறை அமைத்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்படவுள்ளதாக புதுக்கோட்டையில் திமுக நிர்வாகிகள் போஸ்டர் ஒட்டிய சம்பவம் பெரும் சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளது.

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கிய தமிழக அமைச்சர்கள் 

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி தமிழக அமைச்சர்கள் சென்னையில் இன்று ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினர்.

முதல்வர் ஸ்டாலின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது 

முதல்வர் மு.க. ஸ்டாலின் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்தவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

உடல்நலக்குறைவு: அமைச்சர் அன்பில் மகேஷ் மருத்துவமனையில் அனுமதி

தமிழகத்தின் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

DPI வளாகத்தில் பேராசிரியர் அன்பழகனுக்கு வெண்கல சிலை; முதலமைச்சர்  திறந்து வைத்தார் 

தி.மு.க-வின் காலஞ்சென்ற முன்னாள் பொதுச்செயலாளர் பேராசிரியர் திரு. அன்பழகன் நினைவாக, DPI வளாகத்தினை, 'பேராசிரியர் அன்பழகன் வளாகம்' என பெயர் மாற்றம் செய்து உத்தரவிட்டார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.

09 Aug 2023

கனிமொழி

'எங்கள் மீதான இந்தி திணிப்பை நிறுத்திவிட்டு, சிலப்பதிகாரத்தை படியுங்கள்'-எம்.பி.கனிமொழி

டெல்லி நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று(ஆகஸ்ட்.,8) மோடி அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தினை காங்கிரஸ் எம்.பி.கவுரவ் கோகாய் அறிமுகம் செய்து பேசினார்.

அமைச்சர் பொன்முடி மீதான வழக்கினை ஒத்திவைத்த விழுப்புரம் நீதிமன்றம்

தமிழ்நாடு மாநில போக்குவரத்துத்துறை அமைச்சராக 1996ம்ஆண்டு முதல் 2001ம் ஆண்டு வரை செயல்பட்டு வந்தவர் பொன்முடி.

கலைஞர் கருணாநிதியின் 5ம் ஆண்டு நினைவு தினம் - முதல்வர் தலைமையில் அமைதி பேரணி

கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழா தமிழகம் முழுவதும் பல நிகழ்ச்சிகளை அரங்கேற்றி கொண்டாடப்பட்டு வருகிறது.

INDIA எதிர்க்கட்சி கூட்டணியின் மூன்றாவது கூட்டத்திற்கான தேதி அறிவிப்பு 

26 எதிர்க்கட்சிகள் இணைந்த INDIA எதிர்க்கட்சி கூட்டணியின் மூன்றாவது கூட்டம் மும்பையில் ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 1 வரை நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியளவில் உறுப்பு மற்றும் திசு மாற்று சிகிச்சையில் சிறந்த மாநிலம் என தமிழகத்திற்கு விருது

தமிழ்நாடு மாநிலத்தில் மருத்துவத்துறையில் கடந்த சில நாட்களாக பல முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருகிறது.

பாஜக நடத்துவது பாத யாத்திரை அல்ல... பாவ யாத்திரை - மு.க.ஸ்டாலின் பேச்சு

திமுக இளைஞர் அணி மாநில-மாவட்ட மற்றும் மாநகர அமைப்பாளர்கள், துணை-அமைப்பாளர்கள் உள்ளிட்டோரின் அறிமுகக்கூட்டமானது இன்று(ஜூலை.,29)சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்தது.

ஆளுநரை திரும்பப்பெறும் விவகாரம் - திமுக எம்.பி. டி.ஆர்.பாலு மக்களவையில் நோட்டீஸ்

2023ம் ஆண்டின் நாடாளுமன்றம் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை.,20ம் தேதி டெல்லியில் துவங்கி நடந்து வருகிறது.

கார்கில் நினைவு தினம் - திருச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார் 

தமிழ்நாடு மாநிலம் முழுவதுமுள்ள 5 மண்டலங்களில் வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான ஒருநாள் பயிற்சி பாசறை கூட்டம் நடத்த திமுக திட்டமிட்டது.

நாடாளுமன்ற தேர்தல் - திமுக தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்து முதல்வர் கடிதம் 

நாடாளுமன்றம் தேர்தல் முன்னரே வர வாய்ப்புள்ளது என்று திமுக தொண்டர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார்.

சாதி பெயர் கூறி பெண்களை திட்டிய திமுக பிரமுகர் - சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள் 

திருப்பத்தூர் மாவட்டம் பழைய அத்திக்குப்பம் பகுதியினை சேர்ந்த பெண்களை திமுக பிரமுகர் சாமு என்பவர் அவர்களது சாதிப்பெயரினை கூறி திட்டியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் விலைவாசி உயர்வினை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் 

தமிழ்நாடு மாநிலத்தில் கடந்த சிலநாட்களாக அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டு வருகிறது.

தமிழக ஆளுநரை திரும்ப பெறுவது குறித்து விவாதிக்க நோட்டீஸ் - எம்.பி., டி.ஆர்.பாலு 

2023ம் ஆண்டின் நாடாளுமன்றம் மழைக்கால கூட்டத்தொடர் நாளை(ஜூலை.,20) டெல்லியில் துவங்கவுள்ளது.

புதிய ரேஷன் அட்டைதாரர்களுக்கு உடனடியாக மகளிர் உரிமைத் தொகை கிடைக்குமா?

திமுக ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதாமாதம் உதவித்தொகை வழங்கப்படும் என்று திமுக தனது தேர்தல் வாக்குறுதிகளில் கூறி இருந்தது.

"துணிச்சலுடன் விசாரணையை எதிர்கொள்ளுங்கள்": அமைச்சர் பொன்முடியிடம் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

நேற்று (ஜூலை 17) காலை 7 மணி அளவில், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இல்லத்திலும், அவர் சம்மந்தப்பட்ட இடத்திலும், அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கு போட்டியாக  கூடும் பாஜக ஆதரவு கட்சிகள்

டெல்லியில் இன்று(ஜூலை 18) நடைபெறும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின்(NDA) கூட்டத்தில் 38 கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொள்வார்கள் என்று பாஜக தலைவர் ஜேபி நட்டா நேற்று தெரிவித்தார்.

13 Jul 2023

பாஜக

48 மணிநேரம் கெடு விதித்து, திமுகவிற்கு நேரடியாக சவால் விட்ட H.ராஜா

பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் தமிழக தலைவருமான H.ராஜா, தற்போது மத்திய அமைச்சரவையில் உள்ளார்.

11 Jul 2023

அதிமுக

அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் 

தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சியில் இருக்கும் பொழுது, 2015-2021ம் ஆண்டு வரை உணவுத்துறை அமைச்சராக பதவி வகித்தவர் தான் காமராஜ்.

பெண்களுக்கு ரூ.1000 உரிமைத்தொகை - பயனாளிகளை தேர்வு செய்ய சிறப்பு முகாம்கள்

தமிழ்நாடு மாநிலத்தில் பெண்களுக்கு மாதந்தோறும் உரிமைத்தொகையாக ரூ.1000 தரப்படும் என்று தேர்தல் வாக்குறுதியாக தற்போதைய ஆளும்கட்சியான திமுக கூறியிருந்தது.

'மேகதாது அணைத் திட்டத்தை முறியடிப்போம்': துரைமுருகன் உறுதி

கர்நாடகாவின் மேகதாது அணைத் திட்டத்தை முறியடிப்போம் என்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உறுதியளித்துள்ளார்.

செந்தில் பாலாஜி தம்பிக்கு 3வது முறையாக சம்மன் அனுப்பிய வருமான வரித்துறை 

தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பண பரிவர்த்தனை செய்த வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, பின்னர் நெஞ்சு வலி ஏற்பட்ட காரணத்தினால் சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.