48 மணிநேரம் கெடு விதித்து, திமுகவிற்கு நேரடியாக சவால் விட்ட H.ராஜா
பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் தமிழக தலைவருமான H.ராஜா, தற்போது மத்திய அமைச்சரவையில் உள்ளார். இவர், நேற்று இரவு 10மணிக்கு மேல், தனது அதிகாரபூர்வ ட்விட்டர் தளத்தில், ஒரு பதிவை இட்டுள்ளார். அதில், "திமுகவின் ஆட்டம் இன்னமும் 48மணி நேரம்தான். செந்தில் பாலாஜி இருக்கிறாரா? இருந்தால் காவிரி மருத்துவமனையில் தான் உள்ளாரா என்கின்ற பல சந்தேகங்கள் தீர்க்கப்படும் நேரம் நெருங்கிவிட்டது. தமிழக அரசின் கண்ணாமூச்சி ஆட்டம் முடிவுக்கு வரும். ஆட்டம் முடிவிற்கு வருமா அல்லது ஆட்சியேவா?" எனக்குறிப்பிட்டுள்ளார். இப்படி நேரடியாக சவால்விடும் அளவிற்கு, அடுத்து அரசியல் மாற்றங்கள் என நிகழப்போகிறது என பொதுமக்கள் குழம்பி வருகின்றனர். இந்நிலையில், ஆளுநர் ரவி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துவிட்டு, நேற்று தமிழகம் திரும்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.