Page Loader
'சனாதன தர்ம' கருத்து: உதயநிதி ஸ்டாலின், பிரியங்க் கார்கேவிற்கு எதிராக FIR பதிவு 
வழக்கறிஞர்கள் ஹர்ஷ் குப்தா மற்றும் ராம் சிங் லோதி ஆகியோரின் புகாரின் பேரில் இந்த FIR கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

'சனாதன தர்ம' கருத்து: உதயநிதி ஸ்டாலின், பிரியங்க் கார்கேவிற்கு எதிராக FIR பதிவு 

எழுதியவர் Sindhuja SM
Sep 06, 2023
11:38 am

செய்தி முன்னோட்டம்

மத உணர்வுகளை புண்படுத்தியதற்காக திமுக தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவின் மகன் பிரியங்க் கார்கே ஆகியோர் மீது FIR பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெறிவித்துள்ளனர். சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதற்காக அவர் மீது FIR பதிவு செய்யப்பட்டுள்ளது. உதயநிதி ஸ்டாலினின் சனாதன தர்ம கருத்தை ஆதரித்ததற்காக கர்நாடக அமைச்சர் பிரியங்க் கார்கே மீது FIR பதிவு செய்யப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் ராம்பூரில் உள்ள சிவில் லைன்ஸ் காவல் நிலையத்தில் அவர்கள் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

டின்வ்ஜ்உதயநிதியின் கருத்துகள் தங்கள் உணர்வுகளை புண்படுத்தியதாக

உதயநிதியின் கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்தியதாக குற்றச்சாட்டு 

ஐபிசியின் 295ஏ(வேண்டுமென்றே தீங்கிழைக்கும் செயல்கள்) மற்றும் 153 ஏ(வெவ்வேறு மதக் குழுக்களுக்கு இடையே பகைமையை ஊக்குவித்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது FIR பதிவு செய்யப்பட்டது என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வழக்கறிஞர்கள் ஹர்ஷ் குப்தா மற்றும் ராம் சிங் லோதி ஆகியோரின் புகாரின் பேரில் இந்த FIR கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. உதயநிதியின் கருத்துகள் தங்கள் உணர்வுகளை புண்படுத்தியதாக அந்த வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கடந்த சனிக்கிழமை, சனாதன தர்மத்தை டெங்கு மற்றும் மலேரியாவுடன் ஒப்பிட்டு பேசிய உதயநிதி, அதை மொத்தமாக ஒழிக்க வேண்டும் என்று கூறி இருந்தார். இந்த கருத்துக்கள் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.