கலைஞர் கருணாநிதியின் 5ம் ஆண்டு நினைவு தினம் - முதல்வர் தலைமையில் அமைதி பேரணி
கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழா தமிழகம் முழுவதும் பல நிகழ்ச்சிகளை அரங்கேற்றி கொண்டாடப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 3ம் தேதி வரை இதற்கான கொண்டாட்டங்களுக்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், கலைஞர் கருணாநிதியின் 5ம் ஆண்டு நினைவு தினம் இன்று(ஆகஸ்ட்.,7) தமிழ்நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக'வினர் அனைவரும் ஒன்று அமைதி பேரணி மேற்கொண்டுள்ளனர். இந்த பேரணியானது சென்னை அண்ணா சாலை ஓமந்தூரார் தோட்ட வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள கருணாநிதி சிலையிலிருந்து துவங்கியது என்று செய்திகள் தெரிவிக்கிறது.
மலர் வளையம் வைத்து அஞ்சலி
தொடர்ந்து, இதில் திமுக பொது செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, துணை பொதுச்செயலாளர்கள் உள்ளிட்டோரும் முதல்வருடன் பேரணியில் பங்கேற்றனர். இதன் படி, இந்த பேரணியானது சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் அவர்களின் நினைவிடம் வரை நடக்கும் என்று கூறப்பட்டிருந்தது. அதன்படி காமராஜர் சாலையில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அவரை தொடர்ந்து, இந்த பேரணியில் கலந்து கொண்ட திமுக அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட அனைவரும் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.