Page Loader
நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கிய தமிழக அமைச்சர்கள் 
உண்ணாவிரத போராட்டத்தின் போது, நீட் தேர்வால் உயிரிழந்தவர்களுக்கு மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கிய தமிழக அமைச்சர்கள் 

எழுதியவர் Sindhuja SM
Aug 20, 2023
12:40 pm

செய்தி முன்னோட்டம்

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி தமிழக அமைச்சர்கள் சென்னையில் இன்று ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினர். நீட் தேர்வில் வெற்றி பெற முடியாத்ததால் சென்னை குரோம்பேட்டை சேர்ந்த தந்தையும் மகனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சில நாட்களுக்கு முன், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, மத்திய அரசு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி திமுக அரசு இன்று உண்ணாவிரத போராட்டத்தில் குதித்துள்ளது. இதற்கிடையில், நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்காத மத்திய அரசுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தஜ்கி

உயிரிழந்த நீட் தேர்வர்களுக்கு மலர் தூவி அஞ்சலி

தமிழகத்தில் தற்கொலை செய்து கொண்ட நீட் தேர்வர்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திய பின்னர் தமிழக அமைச்சர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினர். விளையாட்டுத்துறை அமைச்சரும், திமுக இளைஞரணி தலைவருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் மாநிலம் தழுவிய உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. அமைச்சர் உதயநிதியுடன் விவசாய அமைச்சர் துரைமுருகன், அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோரும் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் இந்த உண்ணாவிரத போராட்டத்தின் போது, நீட் தேர்வால் உயிரிழந்தவர்களுக்கு மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.