Page Loader
தமிழகத்தில் மீண்டும் ஒரு NEET மரணம்; மகன் இறந்த சில மணிநேரத்திலேயே தந்தையும் உயிரிழந்த சோகம்
தமிழகத்தில் மீண்டும் ஒரு NEET மரணம்

தமிழகத்தில் மீண்டும் ஒரு NEET மரணம்; மகன் இறந்த சில மணிநேரத்திலேயே தந்தையும் உயிரிழந்த சோகம்

எழுதியவர் Venkatalakshmi V
Aug 14, 2023
12:27 pm

செய்தி முன்னோட்டம்

மருத்துவப்படிப்பிற்கென அறிமுகப்படுத்தப்பட்ட நீட் தேர்விற்கு, தமிழகத்தில் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். NEET தேர்வு, மாணவர்களுக்கு கூடுதல் மனஉளைச்சலை ஏற்படுத்தும் எனவும், பொருளாதாரத்தில் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள், NEET தேர்விற்கு பணம் செலவு செய்து பயிற்சி எடுக்க முடியாது எனவும் கூறப்பட்டது. இதனால், அனைத்து சமூகத்தினருக்கும், பொதுவான தேர்வுமுறை மட்டுமே வேண்டும், நீட் தேர்வை ஒழிக்க வேண்டும் என பல காட்சிகள் கூக்குரலிட்டு வருகின்றன. இந்த நிலையில், ஆண்டுதோறும், நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியாமல், பல மாணவர்கள் மனஅளவில் பாதிக்கப்படுகின்றனர். ஒரு சிலர் தற்கொலை போன்ற முடிவுகளையும் எடுக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இந்த சூழலில், சென்னை குரோம்பேட்டை குறிஞ்சி நகரைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன் 19 மாணவர் NEET தேர்வில் தோற்றதால், உயிரை மாய்த்துக்கொண்டார்.

card 2

மகனை தொடர்ந்து தந்தையும் மரணம்:

ஜெகதீஸ்வரன், 2 வருடமாக நீட் தேர்வில் தேர்ச்சி பெறமுடியவில்லை. இருப்பினும், மீண்டும் 3-வது முறையாக நீட் தேர்வு எழுதி, எம்.பி.பி.எஸ். சீட் வாங்கிவிடலாம் என்ற நம்பிக்கையோடு இருந்துள்ளார். ஆனால் இம்முறையும் தோல்வி அடைந்ததால், விரக்தியில் தூக்கிட்டு கொண்டார். இதனை தொடர்ந்து, மகன் இறந்த துக்கம் தாளாமல், அவரின் தந்தையும் இன்று தூக்குமாட்டி தற்கொலை செய்துகொண்டார். இந்நிலையில், இவர்கள் இறப்பு குறித்து முதல்வர் அறிக்கை வெளியிட்டுள்ளார், "மாணவன் ஜெகதீஸ்வரன், அவரது தந்தை செல்வசேகர் ஆகியோரின் மரணமே #NEET பலி பீடத்தின், கடைசி மரணமாக இருக்கட்டும்! அவர்களது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அறிவுமிகு மாணவக் கண்மணிகளே, தன்னம்பிக்கை கொள்ளுங்கள். உயிரை மாய்த்துக் கொள்ளும் சிந்தனை வேண்டாம் என மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்." எனக்கூறியுள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

முதல்வர் அறிக்கை