
செந்தில் பாலாஜியை பதவி நீக்க அறிவுறுத்தும் உயர் நீதிமன்றம்
செய்தி முன்னோட்டம்
செந்தில் பாலாஜி, இலாக்கா இல்லாத அமைச்சராக தொடர்வதில் எந்த பயனும் இல்லை என்பதால், அவரை பதவி நீக்கம் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில், அமலாக்கத்துறையினரால் கடந்த ஜூன் 14ம் தேதி கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி, புழல் சிறையில் அடைக்கப்பட்டார். சமீபத்தில், அவரது நீதிமன்ற காவல் செப்டம்பர்-15ம்தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
ஆனால், அவர் சிறையில் அடைக்கப்பட்ட போதிலும், அவரது அமைச்சர் பதவி அவரிடம் இருந்து பறிக்கப்படவில்லை. தற்போது வரை அவர், தமிழகத்தின் இலாக்கா இல்லாத அமைச்சராக தொடர்ந்து கொண்டிருக்கிறார்.
தமிழக அரசின் இந்த முடிவுக்கு எதிராக தொடரப்பட்ட மனுவை இன்று விசாரித்த உயர்நீதிமன்றம், செந்தில் பாலாஜியை பதவி நீக்க வேண்டும் என்று தமிழக முதல்வரிடம் வலியுறுத்தியுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பது சரியல்ல: உயர் நீதிமன்றம்
#BREAKING “செந்தில் பாலாஜியை பதவி நீக்க அறிவுறுத்தல்"#senthilbalaji #MadrasHighCourt #MKStalin #TNGovt #news18tamilnadu | https://t.co/7dpn9FD15R pic.twitter.com/GOvLXL0W1v
— News18 Tamil Nadu (@News18TamilNadu) September 5, 2023