உடல்நலக்குறைவு: அமைச்சர் அன்பில் மகேஷ் மருத்துவமனையில் அனுமதி
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தின் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கிருஷ்ணகிரியில் நடைபெறும் ஒரு அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இன்று(ஆகஸ்ட் 12) சேலத்தில் இருந்து தர்மபுரி வழியாக கிருஷ்ணகிரி சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், அவர் காரியமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பரிசோதனையில் அவருக்கு அஜீரண கோளாறு மற்றும் வாயு தொல்லை இருப்பது தெரிய வந்தது.
இதனையடுத்து, அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும், அவர் தற்போது நலமாக இருக்கிறார் என்றும் தகவல்கள் கூறுகின்றன.
ட்விட்டர் அஞ்சல்
அமைச்சர் அன்பில் மகேஷ் மருத்துவமனையில் அனுமதி
#BREAKING பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் உடல்நலக்குறைவால் தருமபுரி காரிமங்கலம் தனியார் மருத்துவமனையில் அனுமதி#anbilmaheshpoyyamozhi #Dharmapuri #news18tamilnadu | https://t.co/7dpn9FD15R pic.twitter.com/4BKmfASbRB
— News18 Tamil Nadu (@News18TamilNadu) August 12, 2023