
உதயநிதி ஸ்டாலினின் 'சனாதன தர்ம' கருத்துக்கு குவியும் எதிர்ப்புகள்: யார் யார் என்ன சொன்னார்கள்?
செய்தி முன்னோட்டம்
கடந்த சனிக்கிழமை, சனாதன தர்மத்தை டெங்கு மற்றும் மலேரியாவுடன் ஒப்பிட்டு உதயநிதி ஸ்டாலின் பேசியதால் பெரும் சர்ச்சை வெடித்தது.
"சனாதனம் என்பது எதிர்க்க வேண்டிய ஒரு விஷயமல்ல, ஒழிக்க வேண்டிய விஷயம். கொரோனா, டெங்கு, மலேரியா, போன்ற நோய்களை நாம் எதிர்க்க முயற்சிக்க மாட்டோம், ஒழித்துக்கட்ட தான் முயல்வோம். அதுபோல் தான் இந்த சனாதானமும்" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகனும் தமிழக அமைச்சருமான உதயநிதி அப்போது கூறியிருந்தார்.
இதற்கு ஆதரவுகளும் எதிர்ப்புகளும் குவிந்து கொண்டிருக்கிறது. இது குறித்து எந்தெந்த தலைவர்கள் என்னென்ன கூறி இருக்கிறார்கள் என்பதை இப்போது பார்க்கலாம்.
ஜேப்பிவெஜ்ஜின்
கர்நாடகாவின் முன்னாள் முதல்வரும் பாஜக தலைவருமான பசவராஜ் பொம்மை:
"திமுகவின் மனநிலை கொசு போல சிறியது, மலேரியா போல அழுக்கு உடையது. இந்த நாட்டின் சமூகக் கட்டமைப்பைப் பணயம் வைத்து ஆட்சிக்கு வருவதற்குக் கைகோர்க்கும் ஒரு குழுவின்(INDIA கூட்டணி) மனநிலை இது. அவர்கள் எப்படியும் ஆட்சிக்கு வர விரும்புகிறார்கள். இது ஜனநாயக விரோதம் மற்றும் மனித நேயத்திற்கு எதிரானது என்பது மிகத் தெளிவாக தெரிகிறது. உதயநிதியை இனி உதயநிதி ஹிட்லர் என்று அழைப்பது தான் சரியாக இருக்கும்."
பாஜக தலைவர் ஜேபி நட்டா:
"சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் கூறுகிறார். டெங்கு, மலேரியாவைப் போல் சனாதன தர்மத்தையும் ஒழிக்க வேண்டும் என்று கூறுகிறார். உதயநிதியின் அறிக்கை INDIA கூட்டணியின் அரசியல் வியூகத்தின் ஒரு பகுதியா?"
ருஜியுள்
மல்லிகார்ஜுன் கார்கேவின் மகனும் கர்நாடக அமைச்சருமான பிரியங்க் கார்கே:
"சமத்துவத்தை ஊக்குவிக்காத, அல்லது மனிதனாக இருப்பதற்கான கண்ணியத்தை உறுதி செய்யாத எந்த மதமும் என்னைப் பொறுத்தவரை மதம் அல்ல. சம உரிமை கொடுக்காத எந்த மதமும்... நோயைப் போன்றது..."
காங்கிரஸ் மூத்த தலைவர் கே.சி.வேணுகோபால்:
"எங்கள் பார்வை தெளிவாக உள்ளது. 'சர்வ தர்ம சமபவ'(அனைத்து மதங்களுக்கும் மரியாதை) என்பதுதான் காங்கிரஸின் சித்தாந்தம். ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் தங்கள் கருத்துக்களைச் சொல்ல சுதந்திரம் உள்ளது... நாங்கள் அனைவரின் நம்பிக்கைகளையும் மதிக்கிறோம்..."
பியூரிஜக்ன்
மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான ரவிசங்கர் பிரசாத்:
"ராகுல் காந்தி ஜி, உங்கள் கூட்டாளிகள் சனாதன தர்மத்தை வெளிப்படையாக அவமதிக்கிறார்கள். நீங்கள் ஏன் அமைதியாக இருக்கிறீர்கள்? நீங்கள் ஏன் கோவிலுக்கு செல்கிறீர்கள்? அது ஒரு பாசாங்குதானா? நிதிஷ் குமார், தேஜஸ்வி யாதவ், மம்தா பானர்ஜி ஆகியோர் துர்கா பூஜைக்கும் ஜெகநாத் புரிக்கும் செல்கிறார்கள்... எனினும், இந்த ஒட்டுமொத்த குழுவும் வாக்குகளுக்காக முற்றிலும் இந்து விரோதிகளாக மாறிவிடுகிறார்கள்"
INDIA கூட்டணி காட்சிகளில் இருக்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி:
"இதுபோன்ற கருத்துகளை நாங்கள் கண்டிக்கிறோம். நல்லிணக்கம் நமது கலாச்சாரம். மற்ற மதங்களை நாம் மதிக்க வேண்டும். இதுபோன்ற கருத்துக்களுக்கும் இந்திய கூட்டமைப்பிற்கும் எந்த தொடர்பும் இல்லை. அவர் யாராக இருந்தாலும், இதுபோன்ற அறிக்கைகள் கண்டிக்க தக்கது"
திஜுவ்க்ள்
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்:
"'சனாதன தர்மம்', சமத்துவம் மேலோங்குவதற்கு ஒழிக்கப்பட வேண்டிய தொற்று நோயைப் போன்றது என்று டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் கூறி இருக்கிறார். சமத்துவத்தை முன்னிறுத்திய பெரியார் மற்றும் அம்பேத்கரின் சித்தாந்தங்களை தான் உதயநிதி கூறி இருக்கிறார். அவர் இந்து சமூகத்தை குறி வைத்து பேசவில்லை, 'இந்துத்துவா' என்ற அரசியல் நிரலை குறி வைத்து பேசி இருக்கிறார். உதயநிதியின் பேச்சு பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் ஆகியவற்றால் ஆதரிக்கப்படும் இந்துத்துவா மீதான எதிர்ப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது."
மகாராஷ்டிராவின் பாஜக அமைச்சர் மங்கள் பிரசாத்:
"உதயநிதி தனது கருத்தை திரும்ப பெறாவிட்டால் அவரை மகாராஷ்டிரா மாநிலத்திற்குள் அனுமதிக்க மாட்டோம். கோடிக்கணக்கான இந்துக்கள் மனதை உதயநிதி புண்படுத்தி விட்டார். இந்துக்கள் சுயமரியாதையை விட்டுக் கொடுக்கும் அளவுக்கு பலவீனமானவர்கள் அல்ல"