LOADING...
தமிழக ஆளுநரை திரும்ப பெறுவது குறித்து விவாதிக்க நோட்டீஸ் - எம்.பி., டி.ஆர்.பாலு 
தமிழக ஆளுநரை திரும்ப பெறுவது குறித்து விவாதிக்க நோட்டீஸ் - எம்.பி., டி.ஆர்.பாலு

தமிழக ஆளுநரை திரும்ப பெறுவது குறித்து விவாதிக்க நோட்டீஸ் - எம்.பி., டி.ஆர்.பாலு 

எழுதியவர் Nivetha P
Jul 19, 2023
06:54 pm

செய்தி முன்னோட்டம்

2023ம் ஆண்டின் நாடாளுமன்றம் மழைக்கால கூட்டத்தொடர் நாளை(ஜூலை.,20) டெல்லியில் துவங்கவுள்ளது. ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி வரை நடக்கவுள்ள இந்த கூட்டத்தொடரினையொட்டி இன்று(ஜூலை.,19) அனைத்துக்கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய கூட்டமானது நடந்து முடிந்தது. அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய திமுக எம்.பி. டி.ஆர்.பாலு, விலைவாசி உயர்வினை குறித்து நடக்கவிருக்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் விவாதிக்கவேண்டும் என்று வலியறுத்தப்பட்டுள்ளது என்று கூறினார். அதனைத்தொடர்ந்து அவர், அரசியல் சட்டங்களைமீறும் வகையில் செயல்பட்டுவரும் தமிழக ஆளுநரை திரும்ப பெறுவது குறித்த விவாதம் மேற்கொள்ள நாடாளுமன்றத்தில் வலியுறுத்தப்போவதாகவும் கூறியுள்ளார். மேலும் இதுகுறித்த விவாதம் மேற்கொள்ள திமுக சார்பில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது என்றும், பொது சிவில் சட்டம், ஒடிசா ரயில் விபத்து உள்ளிட்டவை குறித்தும் விவாதம் நடக்கவுள்ளது என்றும் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

விவாதம் நடத்த நோட்டீஸ்