சாதி பெயர் கூறி பெண்களை திட்டிய திமுக பிரமுகர் - சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள்
திருப்பத்தூர் மாவட்டம் பழைய அத்திக்குப்பம் பகுதியினை சேர்ந்த பெண்களை திமுக பிரமுகர் சாமு என்பவர் அவர்களது சாதிப்பெயரினை கூறி திட்டியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குடி போதையில் இருந்த அவர் மேலும் அந்த பெண்களிடம் ஆபாசமாகவும், கீழ்த்தரமாகவும் பேசியுள்ளார். இதனைத்தொடர்ந்து அந்த பெண்கள் சாமு மீது குற்றச்சாட்டுகளை எடுத்துரைத்து காவல்துறையில் புகார் அளித்ததாக கூறப்படுகிறது. இதனிடையே திமுக பிரமுகர் சாமுவை கண்டித்து 200க்கும் மேலான பெண்கள் திடீரென அப்பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பொம்மிக்குப்பம் பகுதியினை சேர்ந்த அப்பெண்கள் அந்த வழியே வந்த அரசு பேருந்தினை சிறைபிடித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது. இந்நிலையில் தற்போது சாலை மறியலில் ஈடுபட்டுள்ள பெண்களிடம் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடவேண்டியவை.