உதயநிதி ஸ்டாலினின் தலைக்கு 10 கோடி ரூபாய் பரிசு அறிவித்த மத போதகர்: என்ன நடக்கிறது?
செய்தி முன்னோட்டம்
'சனாதன தர்மம்' குறித்த உதயநிதி ஸ்டாலினின் கருத்துக்களால் எழுந்த பெரும் பின்னடைவுக்கு மத்தியில், உத்தரபிரதேசத்தை சேர்ந்த ஒரு இந்து மத போதகர், தமிழக விளையாட்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் தலைக்கு 10 கோடி ரூபாய் பரிசு அறிவித்துள்ளார்.
"உதயநிதி ஸ்டாலினின் தலையை துண்டித்து, அவரது தலையை என்னிடம் கொண்டு வருபவர்களுக்கு, 10 கோடி ரூபாய் பரிசு வழங்குவேன். உதயநிதி ஸ்டாலினை யாரும் கொல்லத் துணியவில்லை என்றால் நானே அவரைக் கண்டுபிடித்து கொன்றுவிடுவேன்." என்று அயோத்தியில் உள்ள தபஸ்வி சாவ்னி கோவில் தலைமை அர்ச்சகர் பரமன் ஆச்சார்யா தெரிவித்துள்ளார்.
டக்வ்ஜ்
'என் தலையை சீவ ரூ.10 கோடி தேவையில்லை, 10 ரூபாய் சீப்பு இருந்தாலே போதும்'
இது குறித்து பேசிய உதயநிதி ஸ்டாலின், "சனாதனம் குறித்து பேசியதற்காக என் தலையை சீவ ரூ.10 கோடி தருவதாக ஒருவர் அறிவித்துள்ளார். என் தலையை சீவ ரூ.10 கோடி தேவையில்லை, 10 ரூபாய் சீப்பு இருந்தாலே போதும்." என்று கிண்டலடித்துள்ளார்.
மேலும், "இது நமக்குப் புதிதல்ல. இந்த அச்சுறுத்தல்களுக்கு எல்லாம் நாங்கள் பயப்படுபவர்கள் அல்ல. தமிழுக்காக ரயில் பாதையில் தலை வைத்த கலைஞரின் பேரன் நான்." என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
1953ஆம் ஆண்டு சிமென்ட் ஆலை கட்டும் தொழிலதிபர் டால்மியாஸ் குடும்பத்தின் பெயரை ஒரு தமிழக கிராமத்திற்கு வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, முன்னாள் முதல்வர் கருணாநிதி தண்டவாளத்தில் படுத்து தன் எதிர்ப்பை பதிவு செய்தார். அதையே, உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டு பேசி இருக்கிறார்.