
செந்தில் பாலாஜி தம்பிக்கு 3வது முறையாக சம்மன் அனுப்பிய வருமான வரித்துறை
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பண பரிவர்த்தனை செய்த வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, பின்னர் நெஞ்சு வலி ஏற்பட்ட காரணத்தினால் சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு பைபாஸ் சர்ஜரி செய்த நிலையில், நீதிமன்ற காவலில் உள்ள அவர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இதன் காரணமாக, தற்போது அவர் இலாகா இல்லா அமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு முன்னதாக கடந்த மே மாதம் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் மற்றும் அவருக்கு சம்பந்தப்பட்ட நபர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
சென்னை, கோவை, கரூர் என 40க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
அசோக்
விசாரணைக்கு வரவில்லை என்றால் சட்டபூர்வ நடவடிக்கை
அப்போது கரூரில் அசோக் வீட்டில் சோதனைச்செய்ய சென்ற அதிகாரிகளை தடுத்துநிறுத்திய அவரது திமுக ஆதரவாளர்கள் வாக்குவாதம் செய்ததோடு தாக்குதலிலும் ஈடுபட்டனர்.
இதனால் வருமானவரித்துறை அதிகாரிகள் மத்திய பாதுகாப்புப்படையின் பாதுகாப்போடு சென்று அவரது வீட்டில் சோதனையிட்டனர்.
சிலநாட்களாக தொடர்ந்த இச்சோதனையில். கட்டுக்கட்டாக பணமும், முக்கியமான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியானது.
இதனையடுத்து வருமானவரித்துறை அசோக்கை விசாரிக்க முடிவுச்செய்து 2 முறை சம்மன் அனுப்பியுள்ளனர்.
ஆனால் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை.
அவர் எங்கு இருக்கிறார் என்பது குறித்தும் எவ்வித தகவலுமில்லை.
இந்நிலையில், 3வதுமுறையாக அசோக்கிற்கு வருமானவரித்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
அதில் வரும் 27ம்தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்கவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இம்முறையும் அவர் ஆஜராகாவிடில் அவர்மீது வழக்குப்பதிவு செய்து சட்டபூர்வநடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.