Page Loader
'உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து பேசியதற்கு தகுந்த பதில் அளிக்க வேண்டும்': பிரதமர் மோடி 
இந்தியா vs பாரத் சர்ச்சை குறித்து கருத்து தெரிவிக்க வேண்டாம் என்று அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.

'உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து பேசியதற்கு தகுந்த பதில் அளிக்க வேண்டும்': பிரதமர் மோடி 

எழுதியவர் Sindhuja SM
Sep 06, 2023
03:54 pm

செய்தி முன்னோட்டம்

திமுக தலைவர் உதயநிதி ஸ்டாலினின் சர்ச்சைக்குரிய 'சந்தான தர்ம' கருத்துக்கு அவர் உரிய பதில் அளிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். புது டெல்லியில் ஜி20 மாநாட்டுக்கு முன்னதாக நடைபெற்ற அமைச்சர்கள் குழு கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி இதை தெரிவித்துள்ளார். "வரலாற்றுக்குள் செல்ல வேண்டாம், ஆனால் அரசியலமைப்பின் படி உண்மைகளை பேசவும். பிரச்சினையின் சமகால நிலைமையை பற்றியும் பேசுங்கள்" என்று பிரதமர் மோடி அமைச்சர்களிடம் கூறியுள்ளார். மேலும், இந்தியா vs பாரத் சர்ச்சை குறித்து கருத்து தெரிவிக்க வேண்டாம் என்று அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.

டிஜிவ்க்

சனாதன தர்மத்தை ஒழித்துக்கட்ட வேண்டும் என்று கூறிய உதயநிதி ஸ்டாலின் 

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகனும் தமிழக அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், டெங்கு, மலேரியா போன்ற நோய்களுடன் சனாதன தர்மத்தை ஒப்பிட்டு பேசியது அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியது. கடந்த சனிக்கிழமை, "சனாதனம் என்பது எதிர்க்க வேண்டிய ஒரு விஷயமல்ல, ஒழிக்க வேண்டிய விஷயம். கொரோனா, டெங்கு, மலேரியா, போன்ற நோய்களை நாம் எதிர்க்க முயற்சிக்க மாட்டோம், ஒழித்துக்கட்ட தான் முயல்வோம். அதுபோல் தான் இந்த சனாதானமும்" என்று உதயநிதி ஒரு நிகழ்ச்சியில் பேசி இருந்தார். இந்த கருத்துக்கு பாஜக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட பல காட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. இந்நிலையில், பிரதமர் மோடியும் இது குறித்து பேசியுள்ளார்.