உதயநிதி ஸ்டாலினின் 'சனாதன தர்ம' கருத்துக்கு மறுப்பு தெரிவித்துள்ளார் மம்தா பானர்ஜி
செய்தி முன்னோட்டம்
தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் "சனாதன தர்ம" கருத்துக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை, சனாதன தர்மத்தை டெங்கு மற்றும் மலேரியாவுடன் ஒப்பிட்டு உதயநிதி பேசியதால் பெரும் சர்ச்சை வெடித்தது.
"சனாதனம் என்பது எதிர்க்க வேண்டிய ஒரு விஷயமல்ல, ஒழிக்க வேண்டிய விஷயம். கொரோனா, டெங்கு, மலேரியா, போன்ற நோய்களை நாம் எதிர்க்க முயற்சிக்க மாட்டோம், ஒழித்துக்கட்ட தான் முயல்வோம். அதுபோல் தான் இந்த சனாதானமும்" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகனான உதயநிதி அப்போது கூறியிருந்தார்.
இந்த சர்ச்சை, INDIA எதிர்க்கட்சி கூட்டணியினருக்கு இடையே கருத்து வேறுபாட்டை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார் .
ந்து
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியிருப்பதாவது:
உதயநிதி ஸ்டாலினின் கருத்தைப் பொறுத்த வரையில் அவர் இளையவர். அவர் ஏன், எந்த அடிப்படையில் கருத்து தெரிவித்தார் என்பது குறித்து எனக்கு தெளிவாக தெரியவில்லை. ஒவ்வொரு மதமும் சமமாக மதிக்கப்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.
தமிழ்நாடு மற்றும் தென்னிந்திய மக்களை நான் மதிக்கிறேன். ஆனால் ஒவ்வொரு மதத்தினருக்கும் தனித்தனி உணர்வுகள் இருப்பதால், அனைவரையும் மதிக்க வேண்டும் என்பதே அவர்களுக்கு எனது பணிவான வேண்டுகோள்.
நான் சனாதன தர்மத்தை மதிக்கிறேன். நாங்கள் வேதங்களில் இருந்து கற்றுக்கொள்கிறோம்... எங்களிடம் பல புரோகிதர்கள் உள்ளனர், அவர்களுக்கு எங்கள் மாநில அரசு ஓய்வூதியம் வழங்குகிறது. நம் நாடு முழுவதும் ஏராளமான கோவில்கள் உள்ளன. நாம் கோவில்கள், மசூதிகள் மற்றும் தேவாலயங்களுக்குச் செல்ல கூடியவர்கள். என்று கூறியுள்ளார்.