NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 'இந்து மதம் உலகத்திற்கே மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது': ஆ.ராசாவின் வீடியோவை வெளியிட்டார் பாஜக தலைவர் அண்ணாமலை 
    அடுத்த செய்திக் கட்டுரை
    'இந்து மதம் உலகத்திற்கே மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது': ஆ.ராசாவின் வீடியோவை வெளியிட்டார் பாஜக தலைவர் அண்ணாமலை 
    சனாதன தர்மத்தை தொழுநோயுடன் ஒப்பிட்டு பேசியதால் ஏற்கனவே ஆ ராசாவை பலரும் விமர்சித்து வருகின்றனர்.

    'இந்து மதம் உலகத்திற்கே மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது': ஆ.ராசாவின் வீடியோவை வெளியிட்டார் பாஜக தலைவர் அண்ணாமலை 

    எழுதியவர் Sindhuja SM
    Sep 12, 2023
    06:13 pm

    செய்தி முன்னோட்டம்

    திமுக எம்பி ஆ. ராசா இந்து மதம் குறித்து பேசும் ஒரு வீடியோவை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

    ஏற்கனவே, திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில் இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

    அந்த வீடியோவில் திமுக எம்பி ஆ. ராசா, "உலக அளவில் சாதி என்ற நோய் பரவுவதற்கு இந்து மதம் தான் காரணம். சாதி ரீதியாக மக்களை பிரிக்கிறது இந்து மதம்... பிற நாடுகளில் வாழும் இந்தியர்களும் இந்து மதம் என்ற பெயரால் சாதியை பரப்புகிறார்கள். எனவே, இந்தியாவுக்கு மட்டுமல்ல, இந்து மதம் தற்போது மொத்த உலகத்திற்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறிவிட்டது." என்று கூறியுள்ளார்.

    டக்க்வ்ன்

    சனாதன தர்மத்தை தொழுநோயுடன் ஒப்பிட்டு பேசிய ஆ ராசா 

    இந்த வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டிருக்கும் பாஜக தலைவர் அண்ணாமலை , "இந்து மதம் இந்தியாவுக்கும் உலகத்துக்கும் ஆபத்து என்று திமுக எம்பி ஆ ராசா கூறியுள்ளார். தமிழகத்தில் சாதி பிளவு மற்றும் வெறுப்புணர்வை உருவாக்க திமுக தான் முக்கிய காரணம். அவர்கள் செய்த குளறுபடிக்கு சனாதன தர்மத்தை குறை சொல்லும் துணிச்சல் திமுக எம்பிக்கு உள்ளது." என்று குறிப்பிட்டுள்ளார்.

    சனாதன தர்மத்தை தொழுநோயுடன் ஒப்பிட்டு பேசியதால் ஏற்கனவே ஆ ராசாவை பலரும் விமர்சித்து வருகின்றனர்.

    "சனாதனம் சமூகக் களங்கம் கொண்ட எச்.ஐ.வி மற்றும் தொழுநோயைப் போலவே கருதப்பட வேண்டும்." என்று ஆ.ராசா கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஒரு பொது நிகழ்ச்சியில் பேசியிருந்தார்.

    இந்நிலையில், இந்த புதிய வீடியோவை பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    திமுக
    பாஜக
    பாஜக அண்ணாமலை

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    தமிழ்நாடு

    ஓணம் திருநாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் மலையாளத்தில் பேசி வீடியோ வெளியீடு மு.க ஸ்டாலின்
    பரனூர் சுங்கச்சாவடியில் நவீன ஊழல் - சிஏஜி அறிக்கை மூலம் அம்பலம் மத்திய அரசு
    தமிழ் அறிஞர்கள் விருது - தகுதியானோரை அழைக்கிறது தமிழக அரசு தமிழக அரசு
    14 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  புதுச்சேரி

    திமுக

    பேனா நினைவு சின்னம் ஒன்றரை ஆண்டுகளில் கட்டி முடிக்கப்படும் - பொதுப்பணித்துறை அதிகாரிகள்  கருணாநிதி
    கோவை பேருந்து ஓட்டுநர் ஷர்மிளாவுக்கு தேவையான உதவிகள் வழங்குவதாக கனிமொழி உறுதி  கனிமொழி
    உலகளவில் அதிக உறுப்பினர்கள் கொண்ட கட்சி - 7ம் இடத்தினை பிடித்த அதிமுக  அதிமுக
    'முதலில் அனைத்து சாதியினரையும் கோவிலுக்குள் அனுமதியுங்கள்': பிரதமர் மோடியை சாடிய திமுக இந்தியா

    பாஜக

    மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் முடிவு  நாடாளுமன்றம்
    மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை தாக்கல் செய்தது காங்கிரஸ் காங்கிரஸ்
    பாதயாத்திரை மேற்கொள்ளும் பாஜக அண்ணாமலை - தேமுதிக'விற்கு அழைப்பு  தேமுதிக
    பாஜக அரசை கலைக்க முயற்சி: நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு எப்போது நடைபெறும்? மக்களவை

    பாஜக அண்ணாமலை

    ஈரோடு இடைத்தேர்தல்-அதிமுக வேட்பாளருக்கு ஆதரவளித்து அறிக்கை வெளியிட்ட பாஜக மாநில தலைவர் ஈரோடு
    இலங்கைக்கு 3 நாள் பயணமாக செல்லும் எல்.முருகன் மற்றும் அண்ணாமலை இலங்கை
    ராணுவ வீரர் கொலை - திமுக'வை கண்டித்து பா.ஜ.க. சார்பில் உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு தமிழ்நாடு
    ராணுவ வீரர் கொலை - திமுக'வை கண்டித்து பா.ஜ.க. நடத்திய உண்ணாவிரத போராட்டத்தில் சர்ச்சை சென்னை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025