NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சர்ச்சையை கிளப்பி இருக்கும் 'சனாதன தர்மம்' என்றால் உண்மையில் என்ன?
    அடுத்த செய்திக் கட்டுரை
    சர்ச்சையை கிளப்பி இருக்கும் 'சனாதன தர்மம்' என்றால் உண்மையில் என்ன?
    'சனாதன தர்மம்' என்றால் உண்மையில் என்ன?

    சர்ச்சையை கிளப்பி இருக்கும் 'சனாதன தர்மம்' என்றால் உண்மையில் என்ன?

    எழுதியவர் Venkatalakshmi V
    Sep 04, 2023
    02:06 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கி வாய்த்த இந்த சர்ச்சை, தற்போது நாடு முழுவதும் பற்றி எரிகிறது.

    இரு தினங்களுக்கு முன்னர் தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஆளும் பா.ஜ.க கட்சியை விமர்சனம் செய்து, சனாதன தர்மத்தை டெங்கு மற்றும் மலேரியாவுடன் ஒப்பிட்டு பேசியதால் பெரும் சர்ச்சை வெடித்தது.

    தற்போது சனாதன கொள்கை அல்லது தர்மம் என்பது, ஒரு மதத்தை சார்ந்த கொள்கையாக பார்க்கப்படுகிறது.

    ஆனால், உண்மையில் சனாதன தர்மம் என்றால் என்ன என்பதை பற்றி சிறு தொகுப்பு.

    இந்து மதமே சனாதன தர்மம் என்று சிலர் நினைக்கிறார்கள். ஆனால், சனாதன தர்மம் என்பது மதத்தைத் தாண்டிய விஷயம் என அறிஞர்கள் கூறுகிறார்கள்.

    card 2

    ஒழுக்கமான வாழ்விற்கு ஏற்படுத்தப்பட்ட கோட்பாடுகளே சனாதன தர்மம் 

    சனாதனம் என்றால் 'நிலையான அல்லது காலத்தால் அழியாதது' என்று பொருள்.

    ஒருவர் தன் வாழ்வை ஒழுக்கமாகவும், மனநிறைவோடும் வாழ உதவும் நெறிமுறைகள் தான் சனாதன தர்மம் எனக்கூறப்படுகிறது.

    உண்மை பேசுதல், ஒழுக்கமான வாழ்க்கை, அஹிம்சை, பெரியவர்களை மதித்தல், உடலை சுத்தமாக வைத்திருத்தல் போன்றவை சனாதன கோட்பாடுகளின் அடிப்படையாக கருதப்படுகிறது.

    அதேபோல, ஒரு மனிதன் எவ்வகை உணவை, எப்போது உண்ணலாம் என்பது சனாதனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள்.

    இதுபற்றி, இரு மாதங்களுக்கு முன்னர், ஆளுநர் ரவி, "சனாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரம் வள்ளலார்" என வள்ளலாரின் 200வது ஜெயந்தி விழாவில் பேசியது தான் தமிழ்நாட்டில் இந்த சர்ச்சை தொடங்க மூலகாரணமாக மாறியது.

    card 3

    காந்தியும் சங்கராச்சாரியாரும் கூறுவது என்ன?

    சனாதன தர்மம் பின்பற்றுபவராக அறியப்படுபவர் நம் தேசத்தின் தந்தை, மகாத்மா காந்தி. அவர் தன்னை ஒரு, காந்தி தன்னை ஒரு சனாதன இந்து எனச் சொல்லிக்கொண்டார்.

    அவர், "சனாதன தர்மம் என்பது கிணற்றுத் தவளையைப் போன்றதல்ல. அது கடலைப் போல மிகப் பெரியது. இதை எந்தப் பெயரில் அழைத்தாலும் சரி, அது மனித குலத்திற்கே சொந்தமானது" என 1947இல் ஹரிஜன் இதழில் எழுதியுள்ளார்.

    அதேபோல, மக்களை நான்காகப் பிரித்து, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தர்மம் என்று இருப்பதே வர்ண தர்மம் என்றும் அந்த வர்ண தர்மமே சனாதன தர்மம் என்றும் குறிப்பிடுகிறார் காஞ்சி சங்ககராச்சாரியார்.

    card 4

    சனாதன தர்மம் பற்றி திமுக கூறுவது என்ன?

    ஆளுநர் ரவிக்கு எதிராக நிற்கும் ஆளும் திமுக அரசு, சனாதன கொள்கைக்கு எதிராக குரல் கொடுத்து வந்தது.

    இருப்பினும், சனிக்கிழமை, உதயநிதி ஸ்டாலின் இதுபற்றி பேசியதும், இது வேறு வடிவம் பெற்றுள்ளது.

    உதயநிதியின் வார்த்தைகளில், சனாதன கொள்கை பற்றி, திமுகவின் நிலைப்பாடு, "சனாதனம் என்றால் என்ன? அதன் பொருள் எதையும் மாற்றக்கூடாது, அனைத்தும் நிரந்தரமானவை என்பதாகும். ஆனால் திராவிட மாடல் என்பது மாற்றத்திற்கு அழைப்பு விடுக்கிறது. அனைவரும் சமமாக இருக்க வேண்டும்."

    card 5

    அரசியல் போராட்டத்தில் மதவடிவம் பெறும் சனாதன தர்மம்?

    திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினின் மகனும் தமிழக அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மம் குறித்து பேசியது, எதிர்க்கட்சிகள் இந்து மதத்தை வெறுக்கின்றன என்பதையும், அது நமது பாரம்பரியத்தின் மீதான தாக்குதல் என்பதையும் காட்டுகிறது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

    ஏற்கனவே ஆளும் பா.ஜ.க கட்சி இந்து மத கொள்கையை ஆதரிக்கும் கட்சியாகவும், சிறுபான்மை மதத்தவர்களை எதிர்க்கிறது எனவும் எதிர்க்கட்சிகள் சாடிவரும் இந்த வேளையில், அமித்ஷாவின் இந்த கருத்து, தமிழக மக்களிடம் எப்படி எதிர்வினைகளை ஆற்றும் என்பது பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உதயநிதி ஸ்டாலின்
    உதயநிதி ஸ்டாலின்
    பாஜக

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    உதயநிதி ஸ்டாலின்

    இன்பநிதி புகைப்படங்கள்: சூசகமாக பதிலளித்த கிருத்திகா உதயநிதி! தமிழ்நாடு
    பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு: 2,300 மாநகர பேருந்துகளில் கண்காணிப்பு கேமராக்கள் சென்னை
    பிரதமர் மோடியுடனான சந்திப்பு குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி டெல்லி
    எவரெஸ்ட் சிகரம் ஏறும் தமிழக வீராங்கனைக்கு நிதியுதவி வழங்கிய உதயநிதி ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின்

    உதயநிதி ஸ்டாலின்

    கலைஞர் நடமாடும் நூலகத்தினை துவக்கி வைத்தார் உதயநிதி ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின்
    CSK-RR மேட்சை காண சேப்பாக்கத்தில் குவிந்த கோலிவுட் நட்சத்திர பட்டாளம் ஐபிஎல் 2023
    அமித்ஷா குறித்து உதயநிதி ஸ்டாலின் பேசியதில் என்ன தவறு? - முதல்வர் மு.க.ஸ்டாலின்  உதயநிதி ஸ்டாலின்
    சென்னை மாமல்லபுரத்தில் அலை சறுக்கு போட்டி - உதயநிதி ஸ்டாலின் பேட்டி  உதயநிதி ஸ்டாலின்

    பாஜக

    பாஜக கூட்டணியில் தான் நீடிக்கிறேன் - ஓ. பன்னீர் செல்வம் பரபரப்பு பேட்டி  ஓ.பன்னீர் செல்வம்
    இந்தியாவின் பணக்கார எம்எல்ஏவின் சொத்து மதிப்பு ₹1,400 கோடி; ஏழை எம்எல்ஏவின் சொத்து மதிப்பு எவ்ளோ தெரியுமா? இந்தியா
    ராகுல் காந்தி மேல்முறையீடு வழக்கு - ஆகஸ்ட் 4ஆம் தேதி ஒத்திவைப்பு  உச்ச நீதிமன்றம்
    மணிப்பூர் விவகாரம் - மத்திய அரசுக்கு எதிராக INDIA கூட்டணி கட்சிகள் போராட்டம்  மணிப்பூர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025