Page Loader
அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் 
அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்

அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் 

எழுதியவர் Nivetha P
Jul 11, 2023
06:30 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சியில் இருக்கும் பொழுது, 2015-2021ம் ஆண்டு வரை உணவுத்துறை அமைச்சராக பதவி வகித்தவர் தான் காமராஜ். இவர் அமைச்சராக பதவியில் இருந்தபொழுது, வருமானத்திற்கு மேல் சொத்து சேர்த்துள்ளார் என்று கூறி, காமராஜ் மீது 2022ம் ஆண்டு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு வழக்கு தொடர்ந்தது. அதன்படி, கடந்த ஆண்டு ஜூலை மாதம், 51 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் முக்கியமான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டது என்று கூறப்படுகிறது. தொடர்ந்து, அவரது 2 மகன்கள் மற்றும் நண்பர்கள் மீதும், அமைச்சருக்கு உடந்தையாக செயல்பட்டதாக கூறி வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அமைச்சர் 

திருவாரூர் மாவட்ட ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் அடுத்தகட்ட நகர்வு 

அதனை தொடர்ந்து, அமைச்சர் முறைகேடான முறையில் தனது வருமானத்திற்கு அதிகமாக 127 கோடியே 49 லட்சத்து 9 ஆயிரத்து 85 ரூபாய் பணத்தினை சேர்த்ததாக, லஞ்ச ஒழிப்புத்துறையினர் தகவல் தெரிவித்தனர். இந்நிலையில் தற்போது முன்னாள் அமைச்சர் காமராஜ் மீதான சொத்து குவிப்பு வழக்கில், 810 பக்க குற்றப்பத்திரிக்கையினை தயார் செய்து, லஞ்ச ஒழிப்புத்துறை இன்று(ஜூலை.,11) தாக்கல் செய்துள்ளது. திருவாரூர் மாவட்ட ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் அதிகாரிகள் இந்த குற்றப்பத்திரிக்கையினை தாக்கல் செய்துள்ள நிலையில், இந்த வழக்கு குறித்த அடுத்தகட்ட நகர்வு விரைவில் நடக்கும் என்று கூறப்படுகிறது. திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே, முன்னாள் அமைச்சர்கள் செய்த ஊழல் குறித்த வழக்கில் மிகுந்த ஈடுபாட்டினை காட்டி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.