அமைச்சர் பொன்முடி மீதான வழக்கினை ஒத்திவைத்த விழுப்புரம் நீதிமன்றம்
தமிழ்நாடு மாநில போக்குவரத்துத்துறை அமைச்சராக 1996ம்ஆண்டு முதல் 2001ம் ஆண்டு வரை செயல்பட்டு வந்தவர் பொன்முடி. இவர் பூத்துறை செம்மண் குவாரியில் அதிகளவு செம்மண்ணை எடுத்து தமிழக அரசுக்கு இழப்பீடு ஏற்படுத்தியதாக வழக்கு தொடுக்கப்பட்டது. திமுக ஆட்சி காலத்தில் 2006ல் இருந்து 2011வரை இவர் செய்த இந்த செம்மண் கடத்தலால் அரசுக்கு ரூ.28.36 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று தொடரப்பட்ட வழக்கில் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக அமைச்சரின் மகன் கவுதம சிகாமணி உள்ளிட்ட 8 பேர் மீது கடந்த 2012ம் ஆண்டு மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக தற்போதைய தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பதவியிலுள்ள பொன்முடி வீட்டில் கடந்த மாதம் அமலாக்கத்துறை சோதனை மேற்கொள்ளப்பட்டது.
சென்னை மற்றும் விழுப்புர மாவட்டங்களில் அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான 9 இடங்களில் சோதனை
மேலும் சென்னை மற்றும் விழுப்புர மாவட்டங்களில் அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான 9 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது என்று செய்திகள் தெரிவிக்கிறது. அதே போல் அமைச்சரின் மகன் கவுதம சிகாமணி வீட்டிலும் அமலாக்கத்துறையினர் சோதனை செய்தனர். சோதனை நடவடிக்கைகள் மேற்கொண்ட பின்னர் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கவுதம சிகாமணி உள்ளிட்ட இருவரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை விழுப்புரத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்கினை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது என்று தெரிகிறது. அதன்படி இந்த வழக்கு வரும் ஆகஸ்ட் 11ம் தேதி ஒத்திவைத்து விழுப்புர நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.