எலான் மஸ்க்: செய்தி

18 Oct 2023

எக்ஸ்

இனி எக்ஸ் தளத்தை பயன்படுத்த ஆண்டுக்கு 1 டாலர் கட்டணம்?

எக்ஸ் தளத்தின் (முன்னதாக ட்விட்டர்) வருவாயைப் பெருக்க தொடர்ந்து புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார் அந்நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க்.

12 Oct 2023

டெஸ்லா

டெஸ்லா சூப்பர்சார்ஜர்கள் இஸ்ரேலில் இலவசம்.. எலான் மஸ்க் அறிவிப்பு!

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன் இடையே கடுமையான போர் நடைபெற்று வரும் நிலையில், இஸ்ரேலில் உள்ள டெஸ்லா சூப்பர்சார்ஜர்கள் அனைத்தும் இலவசம் என அறிவித்திருக்கிறார் டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்.

11 Oct 2023

எக்ஸ்

எக்ஸில் பரவும் போலி தகவல்கள்.. எலான் மஸ்க்கை எச்சரித்த ஐபோப்பிய ஒன்றியம்!

ஐரோப்பிய ஒன்றியத்தில் எக்ஸ் தளத்தில் அதிகமாப் பரவும் போலியான தகவல்கள் குறித்து, எக்ஸின் உரிமையாளரும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரியுமான எலான் மஸ்க்கை எச்சரித்திருக்கிறார் ஐரோப்பிய ஒன்றிய ஆணையர் தியரி ப்ரெடன்.

10 Oct 2023

எக்ஸ்

புதிய மாற்றங்களைப் பெறும் எக்ஸ், என்ன செய்கிறார் எலான் மஸ்க்?

எக்ஸ் (முன்னதாக ட்விட்டர்) தளத்தின் வருவாயை உயர்த்தவும், புதிய பயனாளர்களை உள்ளிழுக்கவும் பல்வேறு புதிய மாற்றங்களை அத்தளத்தில் செய்து வருகிறார் எலான் மஸ்க்.

07 Oct 2023

இந்தியா

இந்தியாவின் டாப் 10 பணக்காரர் பட்டியலில் இடம் பெற்றுள்ள ஒரே பெண்- யார் அவர்?

இந்தியாவின் டாப் 10 பணக்காரர்கள் பட்டியலில் ஒரே ஒரு பெண் மட்டும் இடம் பெற்றுள்ளது ப்ளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில் தெரியவந்துள்ளது.

05 Oct 2023

எக்ஸ்

எக்ஸ் தளத்தில் புதிய மாற்றத்தை அறிமுகப்படுத்தினார் எலான் மஸ்க்

எக்ஸாக மாறிய ட்விட்டர் தளத்தில் பத்திரிகையாளர்கள் நேரடியாகப் பதிவிடுவதை ஊக்குவிக்க கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக அழைப்பு விடுத்திருந்தார் எலான் மஸ்க். அதற்குத் தேவையான வசதிகளையும் எக்ஸில் உருவாக்கவும் முயற்சி செய்து வருகிறார் அவர்.

அமெரிக்கா பணக்காரர்கள் பட்டியலில் இந்த ஆண்டும் முதலிடத்தில் எலான் மஸ்க்

2023ம் ஆண்டுக்கான டாப் 400 அமெரிக்க பணக்காரர்களின் பெயர்கள் கொண்ட பட்டியலை வெளியிட்டிருக்கிறது ஃபோர்ப்ஸ் இதழ்.

30 Sep 2023

எக்ஸ்

20 மில்லியன் டாலர்களை வருவாய் பகிர்வு திட்டத்தின் கீழ் பகிர்ந்திருக்கும் எக்ஸ்

எக்ஸ் தளத்தில் தங்களுடைய வருவாயை அதிகரிக்கும் பொருட்டும், புதிய பயனர்களை ஈர்க்கும் பொருட்டும் வருவாய் பகிர்வுத் திட்டமானது கடந்த ஜூலையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

19 Sep 2023

எக்ஸ்

எக்ஸை முழுமையான கட்டண சமூக வலைத்தளமாக்குகிறாரா எலான் மஸ்க்?

கடந்தாண்டு அக்டோபர் மாதம் எக்ஸ் (முன்னதாக ட்விட்டர்) நிறுவனத்தை வாங்கிய பிறகு அதில் பல்வேறு மாற்றங்களை அறிமுகப்படுத்தினார் எலான் மஸ்க். அந்த மாற்றங்களில் பெரும்பாலானவை, அந்நிறுவனத்தின் வருவாயை பெருக்குவதையே முதன்மையான நோக்கமாகக் கொண்டிருந்தன.

16 Sep 2023

எக்ஸ்

அரசு ஆவணத்தைக் கொண்டு கணக்கை சரிபார்க்கும் வசதியை அறிமுகப்படுத்தவிருக்கும் எக்ஸ்

கடந்த சில மாதங்களாகவே எக்ஸ் (முன்னதாக ட்விட்டர்) தளத்தில் பல்வேறு மாற்றங்களைச் செய்து வருவதுடன், புதிதாக பல்வேறு வசதிகளையும் அறிமுகப்படுத்தி வருகிறார் எலான் மஸ்க்.

04 Sep 2023

ஆப்பிள்

ஆப்பிளின் சேவையை மேம்படுத்த உதவி செய்யும் எலான் மஸ்க், எப்படி?

கடந்தாண்டு தங்களுடைய 14 சீரிஸ் ஐபோன்களை வெளியிட்டது ஆப்பிள். இந்த ஐபோன் சீரிஸூடனே, தங்களுடைய புதிய செயற்கைக்கோள் வழி அவசரக் குறுஞ்செய்தி (Emergency SOS via Satellite) வசதியை அறிமுகப்படுத்தியது ஆப்பிள்.

எக்ஸ் தளத்தில் அறிமுகப்படுத்தப்படவிருக்கும் புதிய மாற்றங்கள் என்னென்ன?

எக்ஸ் (முன்னதாக ட்விட்டர்) தளத்தில் கட்டணம் செலுத்தப் பயன்படுத்தும் வகையில் 'எக்ஸ் ப்ரீமியம்' வசதியை வழங்கி வருகிறது அத்தளம்.

எலான் மஸ்கின் செயற்கைக்கோள்களை அழித்த சூரிய புயல்களை ஆய்வு செய்ய இருக்கிறது ஆதித்யா-L1

2022ஆம் ஆண்டில், எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் X மூலம் ஏவப்பட்ட 49 செயற்கைக்கோள்களில் குறைந்தபட்சம் 40 செயற்கைக்கோள்களை சூரியனில் இருந்து வந்த கதிர்வீச்சினால் தூண்டப்பட்ட புவி காந்தப் புயல் முடக்கியது.

31 Aug 2023

டெஸ்லா

டெஸ்லாவின் நிதியில் தனி கண்ணாடி வீட்டைக் கட்டி வருகிறார எலான் மஸ்க்?

டெஸ்லாவின் நிதியைக் கொண்டு தனி 'கண்ணாடி வீடு' ஒன்று, டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்கிற்காகக் கட்டப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

செய்திப் பகிர்வுகள் மற்றும் செய்திகள் தொடர்பான புதிய மாற்றங்களைச் சந்திக்கவிருக்கும் எக்ஸ்

கடந்தாண்டு அக்டோபரில் ட்விட்டரை வாங்கிய பிறகு அதில் பல்வேறு மாற்றங்களைக் அறிமுகப்படுத்தினார் எலான் மஸ்க். கடந்த மாதம் அதன் பெயரை எக்ஸ் (X) என மாற்றினார் எலான் மஸ்க்.

எக்ஸ் ப்ரீமியம் கட்டண சேவைக்குள் கொண்டு செல்லப்படும் ட்வீட்டெக் வசதி

ட்விட்டரின் பெயரை எக்ஸ் (X) என மாற்றிய பிறகு, அந்நிறுவனம் வழங்கி வந்த ட்வீட்டெக் வசதியின் பெயரை எக்ஸ் ப்ரோ (X Pro) என மாற்றினார் எலான் மஸ்க்.

மார்க் ஸூக்கர்பர்குடன் சண்டையிட அவரது வீட்டிற்குச் செல்லும் எலான் மஸ்க்?

மெட்டாவின் தலைமை செயல் அதிகாரியான மார்க் ஸூக்கர்பர்க்கும், டெஸ்லா நிறுவனரும், எக்ஸின் உரிமையாளருமான எலான் மஸ்க்கும் கூண்டுச் சண்டை மோதிக் கொள்ளவிருப்பதாக கடந்த சில வாரங்களாக, தங்களுடைய சமூக வலைத்தளப் பக்கங்களில் பதிவுகளை பதிவிட்டு வந்தனர்.

எலான் மஸ்க் vs மார்க் ஸூக்கர்பெர்க்: பின்வாங்குகிறாரா மார்க்?

எலான் மஸ்க் மற்றும் மார்க் ஸூக்கர்பர்க் இருவரும் கூண்டுச் சண்டை ஒன்றில் மோதிக் கொள்ளும் நோக்கத்தோடு, கடந்த சில மாதங்களாகவே சமூக வலைத்தளங்களில் பதிவுகளைப் பகிர்ந்து வந்து கொண்டிருந்தார்கள்.

'X ப்ரீமியம்' சந்தாதாரர் எண்ணிக்கையைப் பெருக்க எலான் மஸ்க்கின் புதிய திட்டம்

X தளத்தின் (முன்னதாக ட்விட்டர்) வருவாயைப் பெருக்க பல்வேறு திட்டங்களையும், மாற்றங்களையும் முன்னெடுத்து வருகிறார் எலான் மஸ்க்.

இந்திய பயனர்களுடன் விளம்பர வருவாயைப் பகிர்ந்து கொண்ட X

X (முன்னதாக ட்விட்டர்) தளத்தில் விளம்பர வருவாய் பகிர்வுத் திட்டத்தை கடந்த மாதம் அறிமுகப்படுத்தினார் எலான் மஸ்க். இந்தத் திட்டத்தின் மூலம், ஒரு பயனரின் மறுமொழியில் காட்டப்படும் விளம்பரத்தின் மூலம் கிடைக்கு வருவாயின் ஒரு பகுதியை அந்தப் பயனருடன் பகிர்ந்து கொள்ளவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

08 Aug 2023

டெஸ்லா

டெஸ்லாவின் புதிய CFO-வாக நியமிக்கப்பட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வைபவ் தானேஜா

டெஸ்லாவின் தலைமை நிதி அதிகாரியாக (CFO) செயல்பட்டு வந்த ஸாக்ரி கிர்க்ஹார்ன், அந்தப் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறது அந்நிறுவனம். 2010-ம் ஆண்டு முதல் டெஸ்லாவில் பணியாற்றி வரும் ஸாக்ரி கிர்க்ஹார்ன், மார்ச் 2019-ல் அந்நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

07 Aug 2023

மெட்டா

எலான் மஸ்க்குக்கு பதிலடி கொடுத்த மார்க் ஸூக்கர்பெர்க்.. என்ன நடக்கிறது இருவருக்குமிடையே?

X (ட்விட்டர்) தளத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் மற்றும் மெட்டா சிஇஓ மார்க ஸூக்கர்பெர்க் கூண்டுச் சண்டையில் விரைவில் மோதிக் கொள்ளவிருக்கின்றனர், அல்லது அப்படித்தான் சமூக வலைத்தளங்களில் தங்களது கருத்துக்களை அவர்கள் தெரிவித்து வருகிறார்கள்.

மார்க் ஜுக்கர்பெர்க்குடன் மல்லுக்கட்டும் எலான் மஸ்க்; சண்டையை நேரலை செய்வதாக அறிவிப்பு

டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க், மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க்குடனான தனது கூண்டு சண்டையை(Cage Fight) ட்விட்டரில் நேரடியாக ஒளிபரப்ப உள்ளதாக அறிவித்துள்ளார்.

ட்விட்டர் பதிவுக்காக பணி நீக்கமா? உதவ வருகிறார் எலான் மஸ்க்

ட்விட்டரில் வெளியிடும் பதிவுகளுக்காக, தங்கள் நிறுவனத்தால் பணி நீக்கம் போன்ற கடுமையான நடவடிக்கைகளை சந்திக்கும் ஊழியர்களுக்கு சட்ட ரீதியாக அனைத்து உதவிகளையும் செய்ய உள்ளதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.

ஓபன்ஏஐயிடம் இருந்து எலான் மஸ்க்கிடம் சென்ற ai.com டொமைன் பெயர்

Ai.com என்ற டொமைன் பெயரானது ஓபன்ஏஐ நிறுவனத்திடம் இருந்து எலான் மஸ்க்கின் xAI நிறுவனத்திற்கு கைமாறியிருக்கிறது. முன்னர் ai.com என்ற டொமைன் பெயரைப் பயன்படுத்தினால், ஓபன்ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி தளத்திற்கு நம்மைக் கூட்டிச் செல்லும். ஆனால், தற்போது எலான் மஸ்க்கின் x.ai தளத்திற்குக் கூட்டிச் செல்கிறது.

03 Aug 2023

டெஸ்லா

இந்தியாவில் புதிய அலுவலகத்தை அமைக்கும் டெஸ்லா, இந்தியாவில் அதன் திட்டம் என்ன?

கடந்த ஜூன் மாதம் பிரதமர் நரேந்திர மோடியை, டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் சந்தித்த பின்பு, கடந்த வாரம் டெஸ்லா நிறுவனத்தைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் இந்தியாவில், மத்திய வர்த்தக மற்றும் தொழிற்துறை அமைச்சர் பியுஷ் கோயலைக் சந்தித்துச் சென்றிருக்கிறார்கள்.

ப்ளூ டிக்கை மறைத்துக் கொள்ளும் வசதியை பயனர்களுக்கு அளித்திருக்கும் X

கடந்த ஆண்டு ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய பிறகு, அத்தளத்தில் இலவசமாக அளிக்கப்பட்டு வந்த ப்ளூ டிக்கை கட்டண சேவையுடன் இணைத்து வழங்கத் தொடங்கினார் எலான் மஸ்க்.

ட்விட்டர் (X) தலைமையகக் கட்டிடத்தின் மீது வைக்கப்பட்டிருக்கும் சர்ச்சைக்குரிய 'X' லோகோ

ட்விட்டரின் பெயரை சில நாட்களுக்கு முன்பு X என மாற்றினார் எலான் மஸ்க். புதிய பெயரை மாற்றிய அன்றே, அமெரிக்காவின் சான் ஃபிரான்சிஸ்கோ நகரில் உள்ள ட்விட்டர் தலைமையக கட்டிடத்தின் மீது X வடிவிலான மின்விளக்குகளுடன் கூடிய அமைப்பை நிறுவியிருக்கிறது அந்நிறுவனம்.

X தளத்தில் 'ட்வீட்' என்ற சொல்லை 'போஸ்ட்' என மாற்றும் எலான் மஸ்க்

எலான் மஸ்க்கின் தலைமையில் X என்ற புதிய பிராண்டிங்கின் கீழ் பல்வேறு மாற்றங்களைச் சந்தித்து வருகிறது ட்விட்டர் நிறுவனமும், சமூக வலைத்தளமும்.

விளம்பர வருவாய் பகிர்வை அனைத்து பயனர்களுக்கு அறிமுகப்படுத்திய X (ட்விட்டர்)

X (ட்விட்டர்) சமூக வலைத்தளத்தில் விளம்பர வருவாயைப் பகிரும் வசதியானது, இந்தியா உட்பட இன்று முதல் உலகமெங்கும் உள்ள X பயனர்களுக்கு தொடங்கப்படுவதாக அறிவித்திருக்கிறது அந்நிறுவனம்.

540 மில்லியன் மாதாந்திர பயனாளர்களை எட்டிய ட்விட்டர்

'X' என சமீபத்தில் பெயர் மாற்றம் செய்யப்பட்ட ட்விட்டர் தளத்தின் மாதாந்திர பயனாளர் எண்ணிக்கையானது 540 மில்லியனை எட்டி புதிய உயரத்தைத் தொட்டிருப்பதாக X தளத்தில் பதிவொன்றைப் பதிவிட்டிருக்கிறார் அத்தளத்தின் உரிமையாளர் எலான் மஸ்க்.

வளிமண்டலத்தின் ஒரு அடுக்கான அயனி மண்டலத்தில் துளையை ஏற்படுத்திய எலான் மஸ்க்கின் ராக்கெட்

கடந்த ஜூலை 19-ம் தேதி அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்திலிருந்து ஃபால்கன் 9 ராக்கெட்டை விண்ணில் ஏவியது எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம். இந்த ராக்கெட்டானது மறுபயன்பாடு செய்யக்கூடிய வகையிலான இரு நிலைகளைக் கொண்ட ராக்கெட்டாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

'X' எனப் பெயர் மாற்றம், தன்னுடைய மதிப்பை இழக்கிறதா ட்விட்டர்?

வணிக நிறுவனங்கள் நீண்ட காலமாக தாங்கள் கொண்டிருக்கும் பிராண்டின் பெயரை மாற்ற மாட்டார்கள். இது வெறும் பெயர் மட்டுமல்ல, வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட பிராண்டின் மீது கொண்டிருக்கும் நம்பிக்கையும் தான்.

ட்விட்டர் குருவி பறந்து விட்டது, இனி ஒன்லி X

ட்விட்டர் என்றாலே அனைவருக்கும் பரிச்சயமான அந்த நீல நிற குருவி லோகோவை மாற்றி விட்டார் எலான் மஸ்க்.

இனி twitter.com இல்லை, X.com.. மாற்றத்திற்குத் தயாராகி வரும் ட்விட்டர்

கூகுள் முகப்புப் பக்கத்திற்குச் சென்று twitter.com என்ற வலைத்தளப் பெயரை உள்ளீடு செய்யாமல் x.com என்ற பெயரை உள்ளீடு செய்தாலும், அது தற்போது ட்விட்டர் பக்கத்திற்கே கூட்டிச் செல்கிறது. ஆம், ட்விட்டர் என்ற பெயரை 'X' என மாற்றவிருக்கிறார் எலான் மஸ்க்.

ட்விட்டரை ரீபிராண்டிங் செய்யவிருக்கும் எலான் மஸ்க்

ட்விட்டரை முழுவதுமாக ரீபிராண்டி செய்யத் திட்டமிட்டிருப்பதாகக் கூறி இன்று காலை முதலே தொடர்ச்சியாகப் பல பதிவுகளை அந்தத் தளத்தில் பதிவிட்டு வருகிறார் எலான் மஸ்க்.

ட்விட்டர் பயனர்களை கட்டண சேவைக்கு சந்தா செலுத்த ஊக்குவிக்கும் எலான் மஸ்க்

ட்விட்டரின் நிறுவனத்தின் வருவாயைப் பெருக்க பல்வேறு புதிய நடவடிக்கைகளை அத்தளத்தில் எடுத்து வருகிறார் ட்விட்டரின் நிர்வாகத் தலைவரும், தலைமை தொழில்நுட்ப அதிகாரியுமான எலான் மஸ்க்.

இனி குறுஞ்செய்திகளும் அனுப்பமுடியாது, ட்விட்டரின் புதிய நடவடிக்கை

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 44 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் ட்விட்டரை கையகப்படுத்தினார் எலான் மஸ்க். ட்விட்டரை கையகப்படுத்திய பிறகு, அந்நிறுவனத்தில் பல்வேறு புதிய மாற்றங்களை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார் எலான் மஸ்க்.

நீண்ட பதிவுகளை பதிவிடும் வகையில் புதிய வசதியை சோதனை செய்து வரும் ட்விட்டர்

ட்விட்டருக்கு எதிராக பல்வேறு புதிய சமூக வலைத்தளங்கள் உருவாகி வரும் நிலையில், தங்கள் பயனாளர்களைத் தக்கவைத்துக் கொள்ளவும், தங்களது சந்தா சேவையின் மூலம் வருவாயைப் பெருக்கவும், பல்வேறு புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது ட்விட்டர்.

வருவாய் இழப்பிலிருக்கும் ட்விட்டர், பயனர்களுடன் வருவாயைப் பகிர்ந்து கொள்ளத் திட்டமிட்டிருக்கும் எலான் மஸ்க்

ட்விட்டருக்குப் போட்டியாக பல்வேறு புதிய சமூல வலைத்தளங்கள் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், ட்விட்டரின் பயனர்களைத் தக்க வைக்கவும், வருவாய்க்கான வழிகளைக் கண்டறியவும் முயற்சி செய்து கொண்டிருக்கிறார் எலான் மஸ்க்.