மார்க் ஸூக்கர்பர்குடன் சண்டையிட அவரது வீட்டிற்குச் செல்லும் எலான் மஸ்க்?
செய்தி முன்னோட்டம்
மெட்டாவின் தலைமை செயல் அதிகாரியான மார்க் ஸூக்கர்பர்க்கும், டெஸ்லா நிறுவனரும், எக்ஸின் உரிமையாளருமான எலான் மஸ்க்கும் கூண்டுச் சண்டை மோதிக் கொள்ளவிருப்பதாக கடந்த சில வாரங்களாக, தங்களுடைய சமூக வலைத்தளப் பக்கங்களில் பதிவுகளை பதிவிட்டு வந்தனர்.
இருவரும் மோதிக்கொள்ளும் அந்தக் கூண்டுச் சண்டையை, எக்ஸ் தளத்தில் நேரலை செய்து, அதன் மூலம் கிடைக்கும் வருவாயை நன்கொடையாக அளிக்கவிருப்பதாகவும் அறிவித்தார் எலான் மஸ்க்.
இந்நிலையில், தன்னுடைய சண்டையில் ஈடுபடுவதில் எலான் மஸ்க் தீவிரமாக இருப்பதாகக் கூறி, தன்னுடைய கவனத்தை வேறு விஷயங்களில் செலுத்தவிருப்பதாக நேற்று தன்னுடைய த்ரெட்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் மார்க் ஸூக்கர்பர்க்.
எலான் மஸ்க்
பதிலடி கொடுத்திருக்கும் எலான் மஸ்க்:
மார்க் ஸூக்கர்பெர்க்கின் அந்தப் பதிவுக்கு பதில் சொல்லும் வகையில், இன்று மார்க்குடன் சண்டையிட அவருடைய வீட்டிற்குச் செல்லவிருப்பதாக தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவொன்றைப் பதிவிட்டிருக்கிறார் எலான் மஸ்க்.
அந்தப் பதிவில், "என்னுடைய டெஸ்லாவின் முழுமையான செல்ஃப் டிரைவிங் மோடை சோதனை செய்ய இன்று இரவு பாலோ ஆல்டோவில் மார்க் ஸூக்கர்பர்க் வீட்டிற்குச் செல்கிறேன்.
எக்ஸின் லைவ்ஸ்ட்ரீம் வசதியையும் இன்று இரவே சோதனை செய்கிறேன். இதனால், இந்த நிகழ்வை நேரலையில் நீங்கள் கண்டுகளிக்க முடியும்.
மார்க் ஸூக்கர்பர்க் தன்னுடைய வீட்டுக் கதவை திறந்து பதிலளித்தால், இன்று இரவு நாங்கள் மோதிக் கொள்வோம்" எனக் கேலி கலந்த தொனியில் பதிவிட்டிருக்கிறார் அவர்.
ட்விட்டர் அஞ்சல்
எலான் மஸ்கின் எக்ஸ் பதிவு:
For the Tesla FSD test drive in Palo Alto tonight, I will ask the car to drive to @finkd’s house.
— Elon Musk (@elonmusk) August 14, 2023
Will also test latest X livestream video, so you can monitor our adventure in real-time!
If we get lucky and Zuck my 👅 actually answers the door, the fight is on!