20 மில்லியன் டாலர்களை வருவாய் பகிர்வு திட்டத்தின் கீழ் பகிர்ந்திருக்கும் எக்ஸ்
எக்ஸ் தளத்தில் தங்களுடைய வருவாயை அதிகரிக்கும் பொருட்டும், புதிய பயனர்களை ஈர்க்கும் பொருட்டும் வருவாய் பகிர்வுத் திட்டமானது கடந்த ஜூலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், பயனாளர்களின் மறுமொழிகளில் காட்டப்படும் விளம்பரங்கள் மூலம் கிடைக்கும் வருவாயில் குறிப்பிட்ட பங்கை பயனர்களுடன் பகிர்ந்து கொள்ளவிருப்பதாக அறிவித்து, அதன்படி செயல்படவும் தொடங்கியது எக்ஸ். மூன்று மாதங்கள் கடந்திருக்கும் நிலையில், அத்திட்டத்தின் கீழ் பயனாளர்களுடன் 20 மில்லியன் டாலர்களைப் பகிர்ந்திருப்பதாக எக்ஸ் பதிவு ஒன்றில் தெரிவித்திருக்கிறார் அதன் சிஇஓ லிண்டா யாக்கரினோ. எக்ஸின் வருவாய் பகிர்வு திட்டத்தில் இணைய, எக்ஸ் ப்ரீமியம் சேவைக்கு சந்தா செய்திருக்க வேண்டும். மேலும், 500 ஃபாலோவர்களுடன் கடந்த மூன்று மாதத்தில் நம்முடைய பதிவுகள் 5 லட்சம் பார்வைகளைப் பெற்றிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.