540 மில்லியன் மாதாந்திர பயனாளர்களை எட்டிய ட்விட்டர்
'X' என சமீபத்தில் பெயர் மாற்றம் செய்யப்பட்ட ட்விட்டர் தளத்தின் மாதாந்திர பயனாளர் எண்ணிக்கையானது 540 மில்லியனை எட்டி புதிய உயரத்தைத் தொட்டிருப்பதாக X தளத்தில் பதிவொன்றைப் பதிவிட்டிருக்கிறார் அத்தளத்தின் உரிமையாளர் எலான் மஸ்க். எலான் மஸ்க் தலைமையின் கீழ், பெயர் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு நிர்வாக மாற்றங்கள் அந்நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எலான் மஸ்க் ட்விட்டரை வாங்குவதற்கு முன்பு, கடந்த ஆண்டு மே 2022-ல், அத்தளத்தில் மாதாந்திர பயனாளர் எண்ணிக்கையானது 229 மில்லியனாக இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், தற்போது குறிப்பிடப்பட்டிருக்கும் 540 மில்லியன் என்ற அளவானது. X-ல் அதிகளவிலான பாட்கள் (Bots) நீக்கப்பட்ட பிறகு கிடைத்த எண்ணிக்கை எனவும் தன்னுடைய பதிவில் குறிப்பிட்டிருக்கிறார் அவர்.