
எக்ஸ் தளத்தில் அறிமுகப்படுத்தப்படவிருக்கும் புதிய மாற்றங்கள் என்னென்ன?
செய்தி முன்னோட்டம்
எக்ஸ் (முன்னதாக ட்விட்டர்) தளத்தில் கட்டணம் செலுத்தப் பயன்படுத்தும் வகையில் 'எக்ஸ் ப்ரீமியம்' வசதியை வழங்கி வருகிறது அத்தளம்.
முன்னர் குறிப்பிட்ட சில ப்ரீமியம் வசதிகள் மட்டும் இந்த எக்ஸ் ப்ரீமியம் வசதியுடன் இணைக்கப்பட்டு வழங்கி வரப்பட்ட நிலையில், தற்போது அத்தளத்தின் பெரும்பாலான அடிப்படை வசதிகளை் கூட எக்ஸ் ப்ரீமியம் கட்டண சேவைக்குள் கொண்டு சென்றிருக்கிறார் எலான் மஸ்க்.
தற்போது எக்ஸ் தளத்தில் பதிவிடப்படும் வாக்கெடுப்புகளில் வாக்களிக்கும் வசதியையும் எக்ஸ் ப்ரீமியம் கட்டண சேவைக்குள் கொண்டு செல்லவிருப்பதாக எக்ஸ் பயனர் ஒருவருக்கு அளித்த மறுமொழியில் குறிப்பிட்டிருக்கிறார் எலான் மஸ்க்.
இந்த நடவடிக்கைகளானது, எக்ஸின் வருவாயை உயர்துவது மட்டுமல்லாமல், குறிப்பிட்ட சில வசதிகளில் எக்ஸ் பாட்களின் தாக்கத்தையும் குறைக்கும் என நம்புகிறார் எலான்.
எக்ஸ்
எக்ஸில் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படும் பிற புதிய வசதிகள்:
எக்ஸின் எக்ஸ் ப்ரீமியம் சந்தாவின் விலைக்கும் கூடுதல் நியாயம் சேர்க்கும் வகையில், பல்வேறு புதிய வசதிகளை அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டு வருகிறது அந்நிறுவனம்.
அந்த வகையில், ஆடியோ மற்றும் வீடியோ காலிங்களையும் மேற்கொள்ளும் வகையில் புதிய வசதியை விரைவில் அறிமுகப்படுத்த அந்நிறுவனம் திட்டமிட்டு வருவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
மேலும், ஒரு எக்ஸ் பக்கத்தில் பதிவிடப்பட்டிருக்கும் காணொளிகளை மட்டும் பார்க்கும் வகையில் புதிய டேப் ஒன்று வேண்டும் என எக்ஸ் பயனர் ஒருவர் பதிவிட, விரைவில் அதற்கான தீர்வு அறிமுகப்படுத்தப்படும் என எக்ஸ் ஊழியர் ஒருவர் பதிவிட்டிருக்கிறார்.
இந்த வசதியும் விரைவில் அனைத்துப் பயனர்களின் பயன்பாட்டிற்கும் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.