ட்விட்டர் பதிவுக்காக பணி நீக்கமா? உதவ வருகிறார் எலான் மஸ்க்
ட்விட்டரில் வெளியிடும் பதிவுகளுக்காக, தங்கள் நிறுவனத்தால் பணி நீக்கம் போன்ற கடுமையான நடவடிக்கைகளை சந்திக்கும் ஊழியர்களுக்கு சட்ட ரீதியாக அனைத்து உதவிகளையும் செய்ய உள்ளதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "ட்விட்டரில் உங்கள் பதிவுகள் அல்லது செயல்பாடுகள் காரணமாக உங்கள் முதலாளியிடமிருந்து நீங்கள் அநீதியை எதிர்கொண்டால், அதை எதிர்த்துப் போராடுவதற்கான உங்கள் சட்டச் செலவுகளை நாங்கள் ஈடுசெய்வோம்." எனத் தெரிவித்துள்ளார். மேலும் இந்த விஷயத்திற்காக வழங்கப்படும் நிதியுதவிக்கு வரம்புகள் எதுவும் இருக்காது என்றும் உறுதியளித்தார். எலான் மாஸ்க் மேலும், "எங்கள் நடவடிக்கைகள் சட்ட நடவடிக்கைகளுடன் மட்டும் நின்றுவிடாது. சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் இயக்குநர்கள் குழுவையும் நாங்கள் பொறுப்பேற்கச் செய்வோம்." எனத் தெரிவித்துள்ளார்.