NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / எக்ஸை முழுமையான கட்டண சமூக வலைத்தளமாக்குகிறாரா எலான் மஸ்க்?
    அடுத்த செய்திக் கட்டுரை
    எக்ஸை முழுமையான கட்டண சமூக வலைத்தளமாக்குகிறாரா எலான் மஸ்க்?

    எக்ஸை முழுமையான கட்டண சமூக வலைத்தளமாக்குகிறாரா எலான் மஸ்க்?

    எழுதியவர் Prasanna Venkatesh
    Sep 19, 2023
    11:21 am

    செய்தி முன்னோட்டம்

    கடந்தாண்டு அக்டோபர் மாதம் எக்ஸ் (முன்னதாக ட்விட்டர்) நிறுவனத்தை வாங்கிய பிறகு அதில் பல்வேறு மாற்றங்களை அறிமுகப்படுத்தினார் எலான் மஸ்க். அந்த மாற்றங்களில் பெரும்பாலானவை, அந்நிறுவனத்தின் வருவாயை பெருக்குவதையே முதன்மையான நோக்கமாகக் கொண்டிருந்தன.

    சில அடிப்படை வசதிகளைத் தவிர்த்து, மற்ற அனைத்து வசதிகளையும் எக்ஸின் ப்ரீமியம் கட்டண சேவையின் கீழ் கொண்டு சென்றார் எலான் மஸ்க்.

    நம்மைப் பின்தொடராதவர்களுக்குக் குறுஞ்செய்திகளை அனுப்புவது முதல், நீண்ட நேரம் ஓடக்கூடிய காணொளிகளைப் பதிவிடுவது மற்றும் எக்ஸ் பதிவுகளை எடிட் செய்வது வரை பல்வேறு வசதிகளையும் கட்டண சேவையின் கீழே வைத்திருக்கிறது எக்ஸ்.

    மேலும், கட்டண சேவைக்கு சந்தா செய்தவர்கள் தங்களது ட்விட்டர் கணக்கின் மூலம் வருவாய் ஈட்டவும் விளம்பர வருவாய் பகிர்வு திட்டத்தை அறிமுகப்படுத்தினார் அவர்.

    எலான் மஸ்க்

    முழுவதுமாக கட்டண சேவையாகும் எக்ஸ்? 

    இந்நிலையில், எக்ஸை முழுவதுமாக கட்டண சமூக வலைத்தளமாக மாற்றும் திட்டம் ஒன்றும் இருப்பதாக எலான் மஸ்க் கூறியிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

    இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகூவை நேற்று சந்தித்திருக்கிறார் எலான் மஸ்க். இந்த சந்திப்பின் போதே, நேதன்யாகூவிடம் மேற்கூறிய திட்டம் குறித்து எலான் மஸ்க் குறிப்பிட்டதாகக் கூறப்படுகிறது.

    சமூக வலைத்தளங்களில் மக்களின் பாதுகாப்புக்கு ஊறு விளைவிக்காத வகையில், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்களின் பயன்பாட்டை அறிமுகப்படுத்துவது மற்றும் சமூக வலைத்தளங்களில் சுதந்திரப் பேச்சு என பல்வேறு விஷயங்கள் குறித்து அவர்கள் உரையாடியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், எக்ஸில் சுதந்திரப் பேச்சுக்கும், வெறுப்புப் பிரச்சாரத்திற்கும் இடையேயான சமநிலையைக் கடைப்பிடிக்க எலான் மஸ்க்கிடம் நேதன்யாகூ வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

    எக்ஸ்

    எப்போது முதல் கட்டண சேவையாகிறது எக்ஸ்? 

    இந்த உரையாடலின் போதே, எக்ஸை முழுமையாக கட்டண சேவையாக்கும் திட்டம் குறித்து பேசியிருக்கிறார் எலான் மஸ்க்.

    எக்ஸில் முக்கியமாக விவாதிக்கப்படும் பிரச்சினைகளுள் ஒன்று பாட்கள். நிஜ பயனாளர்கள் மற்றும் பாட்களுக்கு இடையேயான வேறுபாடு இல்லாதது என்ஸின் நம்பகத்தன்மையையும் சேர்த்து பாதிப்பாதகக் கூறப்படுகிறது.

    எனவே, எக்ஸில் பாட்களின் ஆதிக்கத்தைக் குறைக்க, எக்ஸ் பயனர்கள் ஒவ்வொரு மாதமும் சிறிதளவு தொகையை செலுத்தும் வகையில் புதிய திட்டத்தை அமல்படுத்தத் திட்டமிட்டு வருவதாகத் தெரிவித்திருக்கிறார் எலான் மஸ்க்.

    எனினும், எவ்வளவு கட்டணம், எப்போது இருந்து அமலுக்கு வரும், கண்டிப்பாக அமலுக்கு வருகிறதா உள்ளிட்ட தகவல்களை அவர் குறிப்பிடவில்லை.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    எக்ஸ்
    ட்விட்டர்
    எலான் மஸ்க்
    சமூக வலைத்தளம்

    சமீபத்திய

    ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவின் வரலாற்றுச் சாதனைக்கு பிரதமர் மோடி பாராட்டு நீரஜ் சோப்ரா
    பயங்கரவாதத்திற்கு எதிரான பூஜ்ஜிய சகிப்புத் தன்மை; இந்தியாவின் நிலையை உலக நாடுகளுக்கு தெரிவிக்க குழுக்கள் அமைப்பு ஆபரேஷன் சிந்தூர்
    உலக உயர் இரத்த அழுத்தம் தினம் 2025: இளம் இந்தியர்களுக்கு எச்சரிக்கை மணி அடிக்கும் சுகாதார நிபுணர்கள் சிறப்பு செய்தி
    கரூர் அருகே கோர விபத்து; சுற்றுலா வேன் மீது ஆம்னி பேருந்து மோதியலில் 4 பேர் பலி விபத்து

    எக்ஸ்

    அரசு ஆவணத்தைக் கொண்டு கணக்கை சரிபார்க்கும் வசதியை அறிமுகப்படுத்தவிருக்கும் எக்ஸ் ட்விட்டர்

    ட்விட்டர்

    ஸ்விக்கியின் வேடிக்கைப் பதிவில் ஸ்விக்கியையே வறுத்தெடுத்த  ட்விட்டர் பயனர்கள் ஸ்விக்கி
    நீண்ட பதிவுகளை பதிவிடும் வகையில் புதிய வசதியை சோதனை செய்து வரும் ட்விட்டர் சமூக வலைத்தளம்
    மணிப்பூரில் பெண்களை நிர்வாணப்படுத்திய வீடியோ - ட்விட்டருக்கு தேசிய மகளிர் ஆணையம் கடிதம் மகளிர் ஆணையம்
    இனி குறுஞ்செய்திகளும் அனுப்பமுடியாது, ட்விட்டரின் புதிய நடவடிக்கை எலான் மஸ்க்

    எலான் மஸ்க்

    செயற்கைக்கோள் வழி இணையச்சேவை.. எலான் மஸ்க்கை எதிர்க்கும் முகேஷ் அம்பானி, ஏன்? இந்தியா
    இந்தியாவில் செயற்கைக்கோள் இணையச்சேவை வழங்க விரும்பும் பெருநிறுவனங்கள் அமேசான்
    மனஅழுத்தத்திற்காக மயக்க மருந்தைப் பயன்படுத்துகிறாரா எலான் மஸ்க்? அமெரிக்கா
    ட்விட்டர் தளத்தில் புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்திய எலான் மஸ்க் ட்விட்டர்

    சமூக வலைத்தளம்

    மே மாதம் மட்டும், இந்தியாவில் 65 லட்சம் கணக்குகளை முடக்கிய வாட்ஸ்அப் வாட்ஸ்அப்
    பயனாளர்கள் 'ஆட்பிளாக்கர்'களைப் பயன்படுத்துவதைத் தடுக்க யூடியூபின் புதிய திட்டம் யூடியூப்
    ட்விட்டருக்கு போட்டியாக 'Threads' வலைத்தளைத்தை அறிமுகப்படுத்தும் இன்ஸ்டாகிராம் இன்ஸ்டாகிராம்
    இனி 'Tweetdeck'-ஐ பயன்படுத்தவும் கட்டணம், ட்விட்டரின் புதிய அறிவிப்பு ட்விட்டர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025