அடுத்த செய்திக் கட்டுரை

ட்விட்டர் குருவி பறந்து விட்டது, இனி ஒன்லி X
எழுதியவர்
Venkatalakshmi V
Jul 24, 2023
04:24 pm
செய்தி முன்னோட்டம்
ட்விட்டர் என்றாலே அனைவருக்கும் பரிச்சயமான அந்த நீல நிற குருவி லோகோவை மாற்றி விட்டார் எலான் மஸ்க்.
ஏற்கனவே தெரிவித்தது போல, கூகுள் முகப்புப் பக்கத்திற்குச் சென்று twitter.com என்ற வலைத்தளப் பெயரை உள்ளீடு செய்யாமல் x.com என்ற பெயரை உள்ளீடு செய்தாலும், அது தற்போது ட்விட்டர் பக்கத்திற்கே கூட்டிச் செல்கிறது.
ஆம், ட்விட்டர் என்ற பெயரை 'X' என மாற்றியேவிட்டார் எலான் மஸ்க்.
இந்த மாற்றம் குறித்த பல்வேறு பதிவுகளை ட்விட்டர் பக்கத்தில் நேற்று முதல், அவர் பதிவிட்டு வருகிறார். இன்று இந்த பெயர் பயன்பாட்டுக்கு வரும் எனவும் நேற்றைய பதிவு ஒன்றில் குறிப்பிட்டிருந்த வேளையில், சற்று நேரத்திற்கு முன்னர் ட்விட்டர் லோகோவை மாற்றியதாக அதிகாரபூர்வமாக அறிவித்தார் எலான்.