வருவாய் இழப்பிலிருக்கும் ட்விட்டர், பயனர்களுடன் வருவாயைப் பகிர்ந்து கொள்ளத் திட்டமிட்டிருக்கும் எலான் மஸ்க்
ட்விட்டருக்குப் போட்டியாக பல்வேறு புதிய சமூல வலைத்தளங்கள் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், ட்விட்டரின் பயனர்களைத் தக்க வைக்கவும், வருவாய்க்கான வழிகளைக் கண்டறியவும் முயற்சி செய்து கொண்டிருக்கிறார் எலான் மஸ்க். இதன் ஒரு பகுதியாக கடந்த சில நாட்களுக்கு முன்பு விளம்பர வருவாயை பயனர்களுடன் பகிர்ந்து கொள்ளும் புதிய வசதியை ட்விட்டரில் அறிமுகப்படுத்தினார் எலான் மஸ்க். அதன்படி, பயனர்கள் பதிவிடும் மறுமொழிகளில் காட்டப்படும் விளம்பரங்கள் பெறும் பார்வையாளர்களின் அளவைப் பொறுத்து, அதன் மூலம் கிடைக்கும் வருவாயானது பயனருடன் பகிர்ந்து கொள்ளப்படும் எனத் தெரிவித்திருக்கிறார் எலான் மஸ்க். மேலும், ட்விட்டர் தளத்தின் வருவாய்ப் பகிர்வின் மூலம் பணத்தைப் பெற வேண்டும் என்றால், அந்தக் கணக்கு ட்விட்டர் ப்ளூ சேவைக்கு சந்தா செய்திருக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
வருவாயைப் பகிர்ந்து கொண்ட ட்விட்டர் நிறுவனம்:
கடந்த பிப்ரவரி மாதம் மூலம், பெறப்பட்ட வருவாயானது இந்த முறையில் பயனர்களுடன் பகிர்ந்து கொள்ளப்படவிருப்பதாக தெரிவித்திருந்தது ட்விட்டர். அதன்படி அந்நிறுவனம் பகிர்ந்தும் கொண்டிருந்திருக்கிறது. ட்விட்டர் நிறுவனம் இது குறித்து அனுப்பிய குறுஞ்செய்திகளையும் ட்விட்டர் பயனர்கள் பலர் அத்தளத்தில் பகிர்ந்து எலான் மஸ்க்கிற்கு நன்றி தெரிவித்திருக்கிறார்கள். அதில் ஒரு பயனர் தனத்து 69,000 டாலர்கள் வருவாய்ப் பகிர்வாக அளிக்கப்பட்டிருப்பதாக ட்விட்டர் தளத்தில் பதிவிட்டிருக்கிறார். இந்த வருவாய்ப் பகிர்வு அறிவிப்பு ஒருபக்கம் இருக்க, ஒட்டுமொத்தமாக வருவாயை விட செலவு அதிகரித்து வருவாய் இழப்பில் இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார் எலான் மஸ்க். மேலும், அந்நிறுவனத்தின் கடன் சுமையும் தற்போது அதிகரித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ட்விட்டரின் வருவாயைப் பெருக்க எலான் மஸ்க் என்ன செய்யவிருக்கிறார் என்பதைப் பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்