NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / டெஸ்லாவின் புதிய CFO-வாக நியமிக்கப்பட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வைபவ் தானேஜா
    அடுத்த செய்திக் கட்டுரை
    டெஸ்லாவின் புதிய CFO-வாக நியமிக்கப்பட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வைபவ் தானேஜா
    டெஸ்லாவின் புதிய CFO-வாக நியமிக்கப்பட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வைபவ் தானேஜா

    டெஸ்லாவின் புதிய CFO-வாக நியமிக்கப்பட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வைபவ் தானேஜா

    எழுதியவர் Prasanna Venkatesh
    Aug 08, 2023
    10:50 am

    செய்தி முன்னோட்டம்

    டெஸ்லாவின் தலைமை நிதி அதிகாரியாக (CFO) செயல்பட்டு வந்த ஸாக்ரி கிர்க்ஹார்ன், அந்தப் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறது அந்நிறுவனம். 2010-ம் ஆண்டு முதல் டெஸ்லாவில் பணியாற்றி வரும் ஸாக்ரி கிர்க்ஹார்ன், மார்ச் 2019-ல் அந்நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

    அவரது பதவி விலகலைத் தொடர்ந்து, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வைபவ் தானேஜா, புதிய தலைமை நிதி அதிகாரியாக நியமிக்கப்பட்டிருக்கிறார். இவர் முன்னதாக அதே நிறுவனத்தின் தலைமை கணக்கியல் அதிகாரியாக செயல்பட்டு வந்திருக்கிறார்.

    இனி, மேற்கூறிய இரண்டு பிரிவுகளின் தலைமை அதிகாரியாகவும் வைபவ் தானேஜாவே செயல்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பரிமாற்றத்தை மேற்கொள்ள இந்த ஆண்டு டெஸ்லாவுடனே கிர்க்ஹார்ன் பயணிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    டெஸ்லா

    புதிய CFO-வான வைபவ் தானேஜா: 

    தற்போது டெஸ்லாவின் தலைமை நிதி அதிகாரியாக கூடுதல் பொறுப்புகள் கொடுக்கப்பட்டிருக்கும் வைபவ் தானேஜா, மார்ச் 2019 முதல் அந்நிறுவனத்தின் தலைமை கணக்கியல் அதிகாரியாகச் செயல்பட்டு வருகிறார்.

    முன்னதாக, பிப்ரவரி 2017 முதல் துணை கார்ப்பரேட் கண்ட்ரோலராகவும், மே 2018 முதல் டெஸ்லாவின் கார்ப்பரேட் கண்ட்ரோலராகவும் செயல்பட்டு வந்திருக்கிறார்.

    அதற்கு முன்பு, மார்ச் 2016 முதல் சோலார்சிட்டி கார்ப்பரேஷன் நிறுவனத்தில் கார்ப்பரேட் கண்ட்ரோலராக பணியாற்றியிருக்கிறார். இந்த நிறுவனத்தை 2016-ல் கையகப்படுத்தியது டெஸ்லா.

    தொடக்கத்தில், 1999 முதல் 2016 வரை அமெரிக்காவைச் சேர்ந்த பிரைஸ் வாட்டர் ஹவுஸ் கூப்பர் என்ற நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனத்தில் பணியாற்றியிருக்கிறார் வைபவ் தானேஜா.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டெஸ்லா
    வணிகம்
    எலான் மஸ்க்

    சமீபத்திய

    இப்போது, பாஸ்போர்ட் விண்ணப்பத்தில் உங்கள் வாழ்க்கை துணை பெயர் சேர்ப்பது/ நீக்குவது எளிதாகிறது பாஸ்போர்ட்
    இன்று முதல், எஃகு, அலுமினியம் மீதான இறக்குமதி வரிகளை 50% ஆக உயர்த்தும் அமெரிக்கா அமெரிக்கா
    இ சாலா கப் நம்தே! முதல்முறையாக IPL கோப்பையை வென்றது RCB ஐபிஎல் 2025
    லோகேஷ் கனகராஜின் LCUவில் இணையும் நிவின் பாலி லோகேஷ் கனகராஜ்

    டெஸ்லா

    உலக பணக்காரர்கள் பட்டியல்.. மீண்டும் முதலிடத்தைப் பிடித்த எலான் மஸ்க்! எலான் மஸ்க்
    டெஸ்லா நிறுவனத்தின் மீது தொடர்ந்து குவியும் 'இனப் பாகுபாடு' குற்றச்சாட்டுக்கள்! எலான் மஸ்க்
    இந்தியாவில் டெஸ்லா தொழிற்சாலை: கார்களின் ஆரம்ப விலை ரூ.20 லட்சம் இந்தியா
    இந்தியாவில் புதிய அலுவலகத்தை அமைக்கும் டெஸ்லா, இந்தியாவில் அதன் திட்டம் என்ன? எலான் மஸ்க்

    வணிகம்

    தங்கள் ஊழியர்களின் வருடாந்திர ஊதிய உயர்வைத் தள்ளி வைத்திருக்கும் WIPRO மற்றும் HCL இந்தியா
    உணவகங்களின் விரிவாக்கத்திற்குப் பயன்படுத்தும் வகையில் புதிய கருவியை அறிமுகப்படுத்திய ஸ்விக்கி ஸ்விக்கி
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜூலை 18 தங்கம் வெள்ளி விலை
    "பொய்யான தகவல்களைக் கொண்ட அறிக்கை", ஹின்டன்பர்க் அறிக்கை குறித்து அதானி இந்தியா

    எலான் மஸ்க்

    ட்விட்டரின் புதிய சிஇஓ-வாக இன்று பதவியேற்கிறார் லிண்டா யாக்கரினோ! ட்விட்டர்
    பதிவுகளை 'எடிட்' செய்யும் நேரத்தை இரட்டிப்பாக்கிய ட்விட்டர்! ட்விட்டர்
    இனி குறுஞ்செய்தி அனுப்பவும் கட்டணம்.. ட்விட்டரின் புதிய திட்டம் என்ன? ட்விட்டர்
    14 வயதில் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தில் சேர்ந்த, இளம் பணியாளர் வைரல் செய்தி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025