
எலான் மஸ்கின் செயற்கைக்கோள்களை அழித்த சூரிய புயல்களை ஆய்வு செய்ய இருக்கிறது ஆதித்யா-L1
செய்தி முன்னோட்டம்
2022ஆம் ஆண்டில், எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் X மூலம் ஏவப்பட்ட 49 செயற்கைக்கோள்களில் குறைந்தபட்சம் 40 செயற்கைக்கோள்களை சூரியனில் இருந்து வந்த கதிர்வீச்சினால் தூண்டப்பட்ட புவி காந்தப் புயல் முடக்கியது.
சூரியனில் ஏற்பட்ட இத்தகைய கதிர்வீச்சுகள் பூமியில் உள்ள ஜிபிஎஸ் தொழில்நுட்பங்கள் மற்றும் ரேடியோ பரிமாற்றங்களையும் அப்போது கடுமையாக பாதித்தது.
இத்தகைய சூரிய புயல்களை, ஆதித்யா-L1 மிஷனின் விசிபிள் எமிஷன் லைன் கரோனாகிராஃப்(VELC) எனப்படும் முதன்மை பேலோட் ஆய்வு செய்ய இருக்கிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், இன்னும் சில மணி துளிகளில் ஆதித்யா-L1 ஆய்வுக்கோளை விண்ணில் ஏவ இருக்கிறது.
டிரோஜி
ஆதித்யா-எல்1 ஆய்வுக்கோளை இன்று விண்ணில் செலுத்துகிறது இஸ்ரோ
"கடந்த ஆண்டு எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் சீர்குலைந்தன. சூரியன் தற்போது அதீத செயல்பாட்டுடன் இருப்பதால் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கின்றன." என்று இந்திய வானியற்பியல் நிறுவனத்தின்(IIA) இயக்குநர் அன்னபூர்ணி சுப்ரமணியம் MoneyControlக்கு அளித்த தனிப்பட்ட பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இது போன்ற சம்பவங்களை ஆதித்யா-L1 ஆய்வு செய்யும் என்றும் அவர் கூறியுள்ளார்.
சந்திரயான்-3 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து, ஆதித்யா-L1 என்ற சூரிய ஆய்வுக்கோளை இன்று இஸ்ரோ விண்ணில் செலுத்த உள்ளது.
ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து ஆதித்யா-L1 விண்கலம் இன்று( செப்டம்பர் 2, 2023) காலை 11:50 மணிக்கு ஏவப்பட இருக்கிறது.