டெஸ்லா சூப்பர்சார்ஜர்கள் இஸ்ரேலில் இலவசம்.. எலான் மஸ்க் அறிவிப்பு!
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன் இடையே கடுமையான போர் நடைபெற்று வரும் நிலையில், இஸ்ரேலில் உள்ள டெஸ்லா சூப்பர்சார்ஜர்கள் அனைத்தும் இலவசம் என அறிவித்திருக்கிறார் டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க். காஸாவில் மின்சாரமும், தேவையான் அடிப்படை வசதிகளும் மீண்டும் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என தான் நம்புவதாகத் தெரிவித்துள்ளார் அவர். மேலும், காஸாவின் அமைதியை விரும்புபவர்களுக்கு தான் உதவ விரும்புவதாகவும், ஆனால் அதற்கு வழி ஏதும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார் எலான் மஸ்க். முன்னதாக, இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன போர் தொடர்பாக ஐரோப்பாவில் எக்ஸ் தளத்தில் பதிவிடப்படும் போலியான மற்றும் தவறான உள்ளடக்கங்களை தடுப்பதற்கு எக்ஸ் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி ஐரோப்பிய ஒன்றியம் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.